பின்னூட்டம்
 


படங்கள்




விளக்கம்

எட்டி மரம்


அறிவியல் பெயர் :

ஸ்டிரிக்னஸ் நக்ஸ்வாமிகா

பொதுப்பண்பு :

  • சராசரி அளவுடைய இலையுதிர் மரமாகும்.
  • சிறிய முடிச்சு போன்ற மரப்பட்டை அடர் பச்சை அல்லது மஞ்சள் கலந்த பச்சை நிறமுடையது.
  • இலைகள் எதிரெதிரே அமைந்திருக்கும் மற்றும் அடர் பச்சை நிறமுடையது.
  • பூக்கள் வெண்மையானது மற்றும் மணம் கமலக்கூடியது.
  • காய் பெர்ரி வகையை சேர்ந்தது மற்றும் சிவப்பு நிறமுடையது.

பரவல் :

  • இம்மரம் இந்தியா முழுதும் பரவலாக வளரக்கூடியது. வெப்பமய்டல இந்திய பகுதிகள் மற்றும் ஈர இலையுதிர் காடுகளில் அதிகம் வளரக்கூடியது.

வாழிடம் :

இம்மரம் எரிமலை பகுதிகளிலுள்ள மண்ணிலும் மற்றும் வெப்பமண்டல மழைக்காடுகளிலும் அதிகம் வளர்கின்றது.

மண் :

இம்மரம் செம்மண். வண்டல் மண் மற்றும் செம்பொறை மண்ணில் நக்கு வளரக்கூடியது.

மண் pH :

5.5 -6

கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :

750 - 1200 மீ வரை வளரக்கூடியது.

மலையளவு :

700 – 1500 மி.மீ

வெப்பநிலை :

25 - 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.

நிலப்பரப்பு :

சமவெளி மற்றும் சரிவான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.

மரப்பண்பு :

  • இலையுதிர் மரம், வேகமாக வளரக்கூடியது.
  • போதுமான நீர் இருந்தால் அனைத்து வகை மண்ணிலும் வளரும்.

வளரியல்பு :

இலையுதிர் மரமாகும்.

தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்


  • சாகதமான சூழ்நிலையில் விதைகள் மூலமாக இனப்பெருக்கமடையக்கூடியது.

  • விதைகள் மூலம் மற்றும் உடல இனப்பெருக்கம் மூலம் நாற்று வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.

  • இம்மரம் விதைகள் மூலம் அதிகம் இனப்பெருக்கமடையக்கூடியது.
  • விதைகள் சேகரிக்கப்பட்டு வெயிலில் காய வைக்கப்பட்ட பின் தோல் நீக்கப்படுகிறது.

  • கொதிக்க வைக்கப்பட்டு இறக்கப்பட்ட நீரில் 6 மணி நேரம் ஊர வைக்கப்பட வேண்டும்.

  • விதைகள் வளர் இடுபொருட்களான 2:1:1 மற்றும் 1:1:1 என்ற விகிதத்தில் கலக்கப்பட்ட செம்மண், மணல் மற்றும் எரு அடங்கிய 25 x 20 செ.மீ அளவுடைய பாலித்தீன் பைகளில் நேரடியாக விதைக்கப்படுகிறது.
  • நாற்றகளுக்கு அவ்வப்போது பூவாளி கொண்டு நீர் பாய்ச்ச வேண்டும்.
  • விதைக்கப்பட்டதிலிருந்து 10 - 20 நாட்களில் விதைகள் முளைத்து விடுகிறது.

பெருந்தோட்ட தொழில் நுட்பம் :

  • மழை பருவ காலத்தில் நடவு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
  • குழியின் அளவு 45 செ.மீ3 என இருக்க வேண்டும்.
  • பண்ணையில் மரங்களுக்கிடையேயான இடைவெளி 5 x 5 மீ என இருக்க வேண்டும்.
  • ஒரு ஹெக்டருக்கு 400 நாற்றுகள் இவ்விடைவெளியில் நடப்படுகிறது.
  • ஒவ்வொரு குழியிலும் மேல் மண் மற்றும் எரு கலந்தகலவை 10 கிராம் இட வேண்டும்.

  • பண்ணையானது களைகளில்லாமல் இருக்க வேண்டும்.
  • நாற்று இளம்பருவமாக இருக்கும்பொழுது நீர் பாய்ச்சுவது அவசியமாகும்.
  • மழை பொழிவு இல்லாத காலகட்டத்தில் நீர் பாய்ச்சுவது அவசியமாகும்.

  • எரிபெருளுக்காக 35 - 40 வருடங்களில் அறுவடை செய்யப்படுகிறது.

முக்கிய பயன்கள் :

  • காய்ந்த விதைகள் மருந்து தயாரிக்க பன்படுகிறது. பொதுவாக நரம்பு சம்பந்தமான நோய்கள், இதய நோய்கள் மற்றும் சுவாச நோய்களை தீர்க்க பயன்படுகிறது.
  • இதன் விதைகள் பலதரப்பட்ட மருந்துகளில் மூலப்பொருளாக சேர்க்கப்படுகிறது.

  • காய்ந்த விதைகள் இதயம் மற்றும் வயிற்று நோய்களுக்கும், முடக்குவாதம், வயிற்றுப்போக்கு போன்றவற்றிற்கு மருந்தாகப் பயன்படுகிறது.

-->