பின்னூட்டம்
 


படங்கள்




விளக்கம்

ஜாவா ராணி


அறிவியல் பெயர் :

கேசியா ஜவானிக்கா

பொதுப்பண்பு :

  • சராசரி அளவுடைய அகன்ற கிளைகளையுடைய மரமாகும்.
  • மரப்பட்டையானது மென்மையானது மற்றும் பழுப்பு கலந்த சாம்பல் நிறமுடையது.
  • பூக்கள் இளஞ்சிவப்பு நிறமுடையது.
  • நெற்றானது உருளையானது மற்றும் அடர் சாம்பல் நிறமுடையது.

பரவல் :

  • இந்தியாவிற்கு அறிமுகம் செய்யப்பட்ட மரமாகும். எனினும் இந்தியா முழுவதும் வளர்க்கப்படுகிறது.

வாழிடம் :

வெப்பமண்டல காடுகள் மற்றும் இலையுதிர் காடுகளில் அதிகம் வளர்கிறது.

மண் :

பரவலாக அனைத்து மண்ணிலும் வளரும் தன்மை கெண்டது.

கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :

1220 மீ வரை வளரக்கூடியது.

மலையளவு :

750 – 1900 மி.மீ

வெப்பநிலை :

35 - 47 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.

நிலப்பரப்பு :

சமவெளி, மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.

மரப்பண்பு :

  • இது ஒரு ஒளி விரும்பி மரமாகும்.
  • வறட்சியை மற்றும் பனியை தாங்கி வளரக்கூடியது.

வளரியல்பு :

இலையுதிர் மரமாகும்.

தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்


  • சாகதமான சூழ்நிலையில் விதைகள் மூலமாக இனப்பெருக்கமடையக்கூடியது.

 

  • நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமாக வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.

 

  • பழுத்த நெற்றானது மார்ச் - ஏப்ரல் மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
  • விதைகள் நெற்றிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது. பிரித்தெடுக்கப்பட்ட விதைகளின் மேல் சதைப்பகுதி நீக்கப்படுகிறது.
  • விதைகள் வெயிலில் உலர்த்தப்படுகிறது.
  • விதைகளை அதிக நாட்கள் வரை சேமித்து வைக்கலாம்.

  • கொதிக்க வைக்கப்பட்டு இறக்கப்பட்ட நீரில் 5 நிமிடம் ஊர வைத்து நேர்த்தி செய்யப்படுகிறது.

  • விதைகள் தாய்பாத்தியில் நேரடியாக விதைக்கப்படுகிறது. தாய்பாத்தி விதைப்பானது மார்ச் - ஏப்ரல் மாத கால இடைவெளியில் விதைக்கப்படுகிறது.
  • விதைக்கப்பட்டவுடன் பூவாளி கொண்டு நீர் பாய்ச்சப்படுகிறது.
  • விதைக்கப்பட்டதிலிருந்து 10 நாட்களில் விதைகள் முளைக்க துவங்குகிறது.
  • இரண்டு இலைகள் துளிர் விட்ட பின் நாற்றானது வளர் இடுபொருட்கள் அடங்கிய பாலித்தீன் பைகளுக்கு மாற்றப்படுகிறது.
  • 6 மாதங்களான நாற்றுகள் நடவிற்கு பயன்படுத்தப்படுகின்றன.

பெருந்தோட்ட தொழில் நுட்பம் :

  • குழியின் அளவு 30 செ.மீ3 அல்லது 45 செ.மீ3 என இருக்க வேண்டும்.
  • இடைவெளியானது 3 x 3 மீ மற்றும் 5 x 5 மீ இடைவெளிகள் நடவிற்கு பயன்படுத்தப்படுகிறது.

  • குறிப்பிட்ட இடைவெளியில் களையெடுத்தல் மற்றும் மண் மேம்பாட்டு பணிகள் செய்வது அவசியமாகும்.

  • 15 - 20 வருடங்களில் அறுவடை செய்யப்படுகிறது.

சந்தை மதிப்பு :

  • ஒரு டன் மரம் 3000 – 3200 ரூபாய் என்ற விலையில் விற்கப்படுகிறது.

* சந்தையை பொறுத்து விலை மாறுபடுகிறது

 

முக்கிய பயன்கள் :

  • இம்மரம் அலங்கார மரமாக தோட்டங்களிலும் மற்றும் சாலையோரங்களிலும் நட்டு வளர்க்கப்படுகிறது.
  • இதன் மரப்பட்டை, காய் மற்றும் பூக்கள் டானின் எடுக்க பயன்படுகிறது.