பின்னூட்டம்
 


படங்கள்




விளக்கம்

சில்வர் ஓக்


அறிவியல் பெயர் :

கிரிவில்லியா ரொபஸ்டா

பொதுப்பண்பு :

  • இது நடுத்தர அளவுடைய இலையுதிர்மரமாகும். 
  • கிளைகள் அகன்றதாகவும், விண்னை நோக்கியிருக்குமாறு காணப்படும்.
  • மரப்பட்டையானது வெளிர் சாம்பல் முதல் அடர் சாம்பல் நிறமுடையதாக காணப்படும்.

பரவல் :

  • இது இந்தியாவிற்கு அறிமுகபடுத்தப்பட்ட மரமாகும்.
  • இந்தியாவில் மலைபிரதேசங்களில் அதிகமாக டீ மற்றும் காபி எஸ்டேட்களில் பயிரிடப்படுகிறது.

வாழிடம் :

வெப்பமண்டல மற்றும் இலையுதிர் காடுகளில் அதிகம் வளரும் மரமாகும்.

மண் :

வண்டல் மண் மற்றும் களிமண்ணில் நன்கு வளரும்.

கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :

2300 மீட்டர் உயரம் வரை வளரும்.

மலையளவு :

600-1700 மில்லிமீட்டர்.

வெப்பநிலை :

23 – 31 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.

நிலப்பரப்பு :

மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.

மரப்பண்பு :

  • இது ஒரு ஒளி விரும்பி மரமாகும். எனவே சூரிய ஒளி அதிகமாக தேவைப்படுகிறது. 
  • இது தீக்கு பகுதியளவு எதிர்ப்புத் தன்மைக் கொண்டது. 
  • மறுதாம்பு மூலம் வளரும் தன்மையற்றது.

வளரியல்பு :

மிதமான இலையுதிர் மரம்.

தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்


வளர்ச்சி :

மிதமான வளர்ச்சி

உயரம் :

30-35மீட்டர்.

 

இயற்கை மறு உருவாக்கம்:

 

  • இது இயற்கை மறு உருவாக்கத்திற்கு ஏற்புடையதல்ல.

 

செயற்கை மறு உருவாக்கம்:

 

  • நேரடி விதைப்பு மூலமாகவும் மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமும் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.

 

இனப்பெருக்கம்:-

 

விதை சேகரிப்பு மற்றும் சேமிப்பு:

 

  • விதையானது கிளைகளை வெட்டி சேகரிக்கப்படுகிறது.
  • சூரிய ஒளியில் விதைகள் உலர்த்தப்படப்படுகிறது.
  • ஒரு கிலோ விதையில் 24000 - 105000 விதைகள் இருக்கும்.
  • விதை முளைப்புத்திறன் 60-80 சதவிகிதம் ஆகும்.
  • விதைகளின் முளைப்புத்திறன் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே இருக்கும். ஏனெனில் இம்மர விதைகள் எண்ணெய் விதைகள் வகையை சேர்ந்தது.

 

விதை நேர்த்தி

 

  • தேவையில்லை.

 

மரப்பண்ணை தொழில்நுட்பம்:

 

  • மணல் மற்றும் உரம் கலந்த விதையானது தாய்பாத்தியில் விதைக்கப்படுகறது.
  • தாய்பாத்தி விதைப்பிற்கு  நவம்பர் - டிசம்பர் மாதம் சாதகமானது.
  • முளைப்புத் தன்மை 10 நாட்களில் ஆரம்பித்து ஒரு மாதத்திற்குள் முடிவரைந்துவிடும்.
  • பூவாளி மூலம் நீர் தொடர்ந்து அளித்தல் பரிந்துரைக்கப்படுகிறது.   
  • ஒரு மாத வயதுடைய நாற்றுகள் வளர் ஊடகம் அடங்கிய பாலிதீன் பைக்கு மாற்றப்படுகிறது.

 

பெருந்தோட்ட தொழில் நுட்பம் :

  • பருவ மழை சமயத்தில் நாற்றுகள் நேரடியாக நடப்படுகிறது.
  • மழைபொழிவு அதிகமுள்ள இடங்களில் தரமான நாற்றை நடுவதால் நல்ல மகசூலை பெறலாம்.
  • குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.
  • இடைவெளியானது 3 x 3 மீ என இருக்க வேண்டும்.

  • களைகள் எடுப்பது மற்றும் பக்க கிளைகளை அகற்றுவது அவசியமாகும். நிலத்தை உழுவது அவசியமான ஒன்றாகும்.

  • 10 - 15 வருடங்கள்

சந்தை மதிப்பு :

  • ஒரு டன் மரம் 4000 – 4500 ரூபாய் என்ற விலையில் விற்கப்படுகிறது.

* சந்தையை பொறுத்து விலை மாறுபடுகிறது

 

ஊடுபயிர் சாகுபடி :

  • வாழை, தக்காளி, மிளகு ஆகியவை ஊடுபயிரிடலாம்.
  • டீ, காபி போன்றவற்றில் நிழல் மரமாக பயிரிடப்படுகிறது.

முக்கிய பயன்கள் :

  • மரம் கட்டுமான பணிகளுக்காகவும், உள் கட்டுமான பணிகளுக்கம் மற்றும் ஒட்டுப்பலகை தயாரிப்பிலும் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.

கோந்து மற்றும் பிசின்:

  • இது நல்ல கரைதிறன் உடையது.  பாகுதன்மை உடையது மற்றும் நிராற்பகுப்பிற்கு எதிர்த்தன்மையுடையது.
  • இதனுடைய கோந்து தொழில்சார்ந்த பயன்பாட்டிற்கு உகந்ததாக உள்ளது.

பாதுகாவலான இடம் () நிழல்:

  • டீ மற்றும் காபி பயிர்களுக்கு நிழல்தரக்கூடிய மரமாக உள்ளது.
  • இதன் கிளைகள் அமைப்பு முறை காற்றுத் தாக்கக் கூடிய மற்றும் மேற்பரப்பு ஆவியாகக் கூடிய பகுதிகளில் வேலி போன்று ஏற்புடையதாக உள்ளது.

-->