பின்னூட்டம்
 


படங்கள்




விளக்கம்

கோந்து தரும் வேல மரம்


அறிவியல் பெயர் :

அகேசியா சினேகல்

பொதுப்பண்பு :

  • சிறிய முட்டைகளை உடைய இலையுதிர் மரமானது 4-9 மீ உயரத்திற்கும் 30-60 செ.மீ சுற்றளவும் வளரக்கூடியது.
  • பழுப்பு நிற மரப்பட்டைகளை உடையது. இரு இலை அமைவு, பூக்கள் வெந்நிறமுடையது.
  • நெற்றுகள் 7 செ.மீ நீளமும் 2 செ.மீ அகலமும் உடையது.

பரவல் :

  • இந்தியாவில் வறண்ட மண்டலங்களுக்கு உகந்தது.
  • தென்கிழக்கு பஞ்சாப், குஜராத் பகுதிகள், ஆரவல்லி பாறைக்குன்றுகள் போன்ற இடங்களில் காணப்படுகின்றன.

வாழிடம் :

வறண்ட வெப்ப மண்டல காடுகள் மற்றும் வெப்ப மண்டல் முள் காடுகளில் காணப்படுகிறது

மண் :

மலைப்பகுதிகளில், மணற்பகுதிகளில் மற்றும் நிலையற்ற மணல் பகுதிகளில் வளரக்கூடியது.

மண் pH :

5.5 – 7.5

கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :

100 - 700மீ

மலையளவு :

>600 மி.மீ

வெப்பநிலை :

20-45 செல்சியஸ்

நிலப்பரப்பு :

சமவெளி

மரப்பண்பு :

  • அதிக சூரிய ஒளி விரும்பி, உறைபனி மற்றும் கடும் வறட்சியை தாங்கவல்லது.

வளரியல்பு :

இலையுதிர் மரம்

தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்


வளர்ச்சி :

மெதுவாக வளரக் கூடியது.

உயரம் :

4-9மீ

இயற்கை மறு உருவாக்கம்:    

  • தகுந்த சூழ்நிலையில் மறு உருவாக்கம் நடைபெறும்.
  • முளைப்பு மேல்நோக்கி வளரக்கூடியது.
  • குறைந்த வளர்ச்சியை உடையது. 8-13 செ.மீஃவருடம்.

செயற்கை மறு உருவாக்கம்:

  • நேரடி விதைப்பின் மூலம் மறு உருவாக்கம் செய்யலாம்.

பயிர்பெருக்கம்:

விதை சேகரிப்பு மற்றும் சேமிப்பு:     

  • சிறு வயது முதலே நல்ல வளமான விதைகளை தரவல்லது, கனிகள் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் முதிர்ச்சி அடையும்.
  • சேகரிக்கப்பட்ட கனிகளை உலர்த்தி, காயவைத்து விதைகளை எடுத்தல் வேண்டும். 

விதை நேர்த்தி:

  • கந்தக அமிலத்துடன் நேர்த்தி செய்வதால் முளைப்புத்திறன் அதிகரிக்கும்.
  • வெந்நீரில் 24-48 மணிநேரம் வைத்தல் வேண்டும்.
  • விதைத்த 4 நாட்களில் விதைகள் முளைத்து விடும்.

நாற்றாங்கால் தொழில் நுட்பம்:

  • 1.8மீ X 0.3 - 0.45மீ அளவில் 45 செ.மீ ஆழத்தில் நடுதல் அவசியம்.
  • 4-5 நாட்களில் முளைத்து விடும்.
  • ஒரிரு களையெடுத்தல் அவசியம்.

பெருந்தோட்ட தொழில் நுட்பம் :

  • ஓர் வருட நாற்றுகள் 30 செ.மீ குழிகளில் நடுதல் வேண்டும்.
  • ஆழ் நடவு செய்தல் அவசியம்.

பயிர் மேம்பாடு:

  • முதல் 4-5 வருடத்திற்கு வேலி அமைத்து கால்நடை மற்றும் காட்டு விலங்குகளிடமிருந்து காத்தல் அவசியம்.
  • முதல் இரண்டு வருடங்களுக்கு களையெடுத்தல் அவசியம்.
  • நோய் இந்தியாவில் எவ்வித பூஞ்சான நோய்களும் தென்படவில்லை.
  • பூச்சி தாக்குதலுக்கு உட்படும்.

ஊடுபயிர் சாகுபடி :

  • தர்பூசணி, சிறிய தானியங்கள் மற்றும் தீவனப்பயிர்களை ஊடுபயிரிடலாம்.

முக்கிய பயன்கள் :

அரபிக் - கோந்து

  • கோந்து தயாரிக்கவும், தோல் மற்றும் மை தயாரிக்கவும் பயன்படுகிறது.

தீவனம்:

  • இலைகள் மற்றும் நெற்றுகள் அதிக புரதமுடையது.
  • ஒட்டகத்திற்கும், ஆடுகளுக்கும் தீவனமாக பயன்படுகிறது.

மரக்கட்டை:             

  • கடினமானது, உறுதியானது மற்றும் மெருகுவானது.
  • வண்டிச் சக்கரம், வேலி மற்றும் வேளாண் பொருட்கள் செய்யவும் பயன்படுகிறது.

எரிபொருள்:

  • நல்ல எரிபொருளாகவும் அதிக கலோரி மதிப்புடையது – 3200 கி.கலோரி/கி.கி நல்ல மதிப்பினை உடைய கரியை தரவல்லது.

-->