பின்னூட்டம்
 


படங்கள்




விளக்கம்

பாரா ரப்பர் மரம்


அறிவியல் பெயர் :

ஹீவியா பிரேசிலியன்சிஸ்

பொதுப்பண்பு :

  • வேகமாக வளரக்கூடிய பெரிய கூம்பு வடிவ மேற்பகுதியையுடைய மரமாகும்.
  • இதன் மரப்பட்டை சாம்பல் நிறமுடையது மற்றும் அதிகப்படியான வேட்டக்ஸை கொண்டது.
  • அடுத்தடுத்த இலைகளை கொண்டது மற்றும் அடர் பச்சை நிறமுடையது.
  • பூக்கள் சிறியது மற்றும் பச்சை கலந்த வெண்மையானது.
  • காயானது மூன்று அறைகளையுடையது மற்றும் மூன்று விதைகளை கொண்டது.

பரவல் :

  • கேரளா மற்றும் தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டம் ரப்பர் பாரம்பரியமாக பயிரிடப்படும் பகுதிகளாகும்.

  • இந்தியாவிலேயே இப்பகுதிகளில் மட்டும் ரப்பர் வளர்க்கப்பட்டு வருகிறது.

வாழிடம் :

வெப்ப மண்டல பசுமை மாறா காடுகளில் வளரும் தன்மை கொண்டது.

மண் :

செம்மண், செம்மண் கலந்த வண்டல் மண் மற்றும் செம்பொறை மண் ஆகியவற்றில் நன்கு வளரும்.

மண் pH :

4-8

கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :

300 - 500 மீ வரை வளரக்கூடியது.

மலையளவு :

1500 – 3000 மி.மீ

வெப்பநிலை :

23 - 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.

நிலப்பரப்பு :

சமவெளி மற்றும் சரிவான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.

மரப்பண்பு :

  • வேகமாக வளரக்கூடிய மரமாகும்.
  • சூரை காற்றை தாங்கி வளரக்கூடியது.

வளரியல்பு :

பசுமை மாறா மரமாகும்.

தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்


 

  • சாதகமான சூழ்நிலையில் விதைகள் மூலமாக இனப்பெருக்கமடையக்கூடியது.

 

  • ஒட்டு முறை, கட்டுசெடி வளர்ப்பு மற்றும் மற்ற உடல இனப்பெருக்கம் மூலம் நாற்று வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.

  • பழுத்த நெற்றானது மேஜுன் மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
  • பழுத்த காயானது வெயிலில் காய வைக்கப்படுகிறது பின் பிரித்தெடுக்கப்படுகிறது.
  • ஒரு கிலோ விதையில் 10000 விதைகளிருக்கும்.
  • விதைகள் விரைவில் முளைப்புத்திறனை இழந்து விடும் தன்மையுடையது.

  • தேவையில்லை.

தாய்பாத்தி அளவு :

  • 60 – 120 செ.மீ அகலமுடைய தாய்பாத்தியானது வண்டல் மண் மற்றும் எரு கொண்டு தயார் செய்யப்படுகிறது.
  • விதைகள் தாய்பாத்தியில் நேரடியாக தூவப்படுகிறது.
  • விதைக்கப்பட்ட பின் ஆற்று மணலை கொண்டு 5 செ.மீ வரை நாற்று மூடப்படுகிறது.
  • 5 – 7 நாட்களில் விதைகள் முளைக்க துவங்கிவிடுகிறது.

கன்றுகளுக்கிடையேயான இடைவெளி :

  • விதைகள் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட கன்றிற்கு 23 x 23 செ.மீ, 30 x 30 செ.மீ மற்றும் 34 x 20 செ.மீ இடைவெளி அவசியம்.
  • பக்க மொட்டு மூலம் உற்பத்தி செய்யப்பட்ட கன்றிற்கு 30 x 30 செ.மீ இடைவெளி அவசியம்.
  • குச்சிகள் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட கன்றிற்கு 60 x 60 செ.மீ இடைவெளி அவசியம்.
  • இளம் பக்க குச்சிகள் உற்பத்தி செய்யப்பட்ட கன்றிற்கு 30 x 30 செ.மீ இடைவெளி அவசியம்.

பெருந்தோட்ட தொழில் நுட்பம் :

  • குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.
  • நாற்று தன்மை        இடைவெளி (மீ)      ஒரு ஹெக்டருக்கு தேவையான நாற்று

ஒட்டு நாற்றுகள்

மலைப்பகுதிக்கு                  6.7 x 3.4                -              445

சமவெளி பகுதிக்கு              4.9 x 4.9                -              420

விதை நாற்றுகள்

மலைப்பகுதிக்கு                  6.1 x 3.0                -              539

சமவெளி பகுதிக்கு                    4.6 x 4.6                             -                      479

  • ஊடு பயிரை விதைப்பதனால் களைகள் வளரும். எனவே களைகளை அடிக்கடி நீக்க வேண்டும்.

  • 20 – 25 வருடங்கள்

சந்தை மதிப்பு :

  • ஒரு டன் மரம் 2800 – 3000 ரூபாய் என்ற விலையில் விற்கப்படுகிறது.

* சந்தையை பொறுத்து விலை மாறுபடுகிறது

 

முக்கிய பயன்கள் :

  • இம்மரம் இதன் லேட்டக்சிற்காக வளர்க்கப்படுகிறது.
  • ரப்பர் மரம் தீக்குச்சி தயாரிக்கவும் மற்றும் விறகிற்காகவும் பயிரிடப்படுகிறது.
  • மரச்சாமான்கள் தயாரிக்கவும், விலையுயர்ந்த வீட்டு உபயோக பொருட்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது.

  • உணவு, தீவனம், எரிபொருள், மரம், மரக்கட்டை கழிவு காளான் வளர்ப்புக்கு பயன்படுகிறது.

-->