பின்னூட்டம்
 


படங்கள்




விளக்கம்

ஆச்சா மரம்


அறிவியல் பெயர் :

ஹார்டுவிக்கியா பைனேட்டா

பொதுப்பண்பு :

  • ஆச்சா மரம் ஓரளவு உயரமாக வளரக்கூடிய மரமாகும்.
  • மரப்பட்டை வெண்மை நிறமுடைது மற்றும் மென்மையனது.
  • இலையானது சாம்பல் கலந்த பச்சை நிறமானது.
  • பூக்கள் சிறியது மற்றும்; மஞ்சள் நிறமுடையது.
  • நெற்றானது காற்றில் பறக்கும் தன்மை கொண்ட இறகு போன்ற வடிவமுடையது.

பரவல் :

  • இந்தியாவின் வறண்ட நிலப்பகுதிகளில் அதிகம் வளர்கிறது. இவை வறண்ட நிலப்பகுதிகளில் வளரும் தேக்கு மர பண்புகளை கொண்டது.

வாழிடம் :

வறண்ட இலையுதிர் காடுகளில் அதிகம் வளர்கிறது.

மண் :

அனைத்து மண் வகைகளிலும் வளர்கிறது.

கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :

300 மீ உயரம் வரை வளர்கிறது.

மலையளவு :

250 - 1500மி.மீ

வெப்பநிலை :

22 - 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.

நிலப்பரப்பு :

சமவெளி பகுதிகளிலும் சிறிது சரிவான பகுதிகளிலும் வளரும் தன்மை கொண்டது.

மரப்பண்பு :

  • மிதமான ஒளி விரும்பி மரமாகும்.
  • நிழல் தாங்கி வளரக்கூடியது.

வளரியல்பு :

இலையுதிர் மரம்.

தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்


 

இயற்கை மறு உருவாக்கம்:

 

  • சாதகமான சூழல் மற்றும் தகுந்த மழைப்பொழிவு, மண் வளம் இருப்பின் இயற்கையாக விதைகள் மூலம் வளரும் தன்மை கொண்டது.

 

செயற்கை மறு உருவாக்கம்:

 

  • நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலம் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.

 

இனப்பெருக்கம்:

 

விதை சேகரிப்பு மற்றும் சேமிப்பு:

 

  • விதையானது ஏப்ரல் - மே மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
  • விதையானது இலேசானதாக இருக்கும்.
  • சூரிய ஒளியில் நெற்றுகள் 3 – 4 நாட்கள் உலர்த்தப்படப்படுகிறது.
  • ஒரு கிலோ விதையில் 4800 - 5300 விதைகள் இருக்கும்.
  • விதை முளைப்புத்திறன் 60-70 சதவிகிதம் ஆகும்.

 

விதை நேர்த்தி:

 

  • குளிர் நீரில் 25 மணி நேரம் ஊர வைக்கப்படுகிறது.

 

நாற்றாங்கால் தொழில்நுட்பம்:

 

  • விதைகள் தாய்பாத்தியில் நேரடியாக விதைக்கப்படுகிறது. தாய்பாத்தி விதைப்பு மேஜுன் மாத இடைவெளியில் மேற்கொள்ளப்படுகிறது.
  • தாய்பாத்தியானது தினமும் பூவாளி கொண்டு நீர் இறைக்கப்படுகிறது.
  • விதைக்கப்பட்டதிலிருந்து 3 வாரங்களில் விதைகள் முளைக்க துவங்குகிறது. விதைகள் 5 வாரங்களில் முற்றிலுமாக முளைத்துவிடுகிறது.
  • வெயில் அதிகமாக உள்ள இடங்களில் தாய்பாத்திக்கு நிழலை ஏற்படுத்துவது இன்றியமையாதது ஆகும்.
  • தாய்பாத்தியை எப்போதும் ஈரப்பதத்துடன் வைத்திருக்க வேண்டும்.
  • இரண்டு இலைகள் துளிர்ந்த பிறகு நாற்றானது வளர் ஊடகம் அடங்கிய பாலித்தீன் பைக்கு மாற்றப்படுகிறது.
  • ஒரு வருடம் அல்லது 2 வருடமான நாற்றுகள் நடவிற்கு பயன்படுகிறது.

 

பெருந்தோட்ட தொழில் நுட்பம் :

  • ஒரு வருடம் அல்லது 2 வருடமான நாற்றுகள் நடவிற்கு பயன்படுகிறது.
  • நாற்றானது மழை பருவ காலத்தில் நடப்படுகிறது.
  • குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.
  • இடைவெளியானது 2 x 2 மீ அல்லது 3 x 3 மீ என இருக்க வேண்டும்.

  • தொடச்சியான களையெடுத்தல் மற்றும் உழுதல் நாற்று நன்கு வளர  துணை புரிகிறது.
  • வருடத்திற்கு ஒரு முறை களையெடுக்க வேண்டும்.

  • 10 - 15 வருடங்கள்

சந்தை மதிப்பு :

  • ஒரு டன் மரம் தோராயமாக 3000 – 3500 ரூபாய் என்ற விலையில் விற்கப்படுகிறது.

* சந்தையை பொறுத்து விலை மாறுபடுகிறது

 

முக்கிய பயன்கள் :

 

மரக்கட்டை

  • இதன் மரக்கட்டை கடினமான மற்றும் உறுதியானது. 
  • இது பாலம் கட்டவும், வீடு கட்டவும், வேளாண் உபகரணங்கள் செய்யவும் மற்றும் மாட்டுவண்டி சக்கரங்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது.

தீவனம்:

  • இலைகள் கால்நடைகளுக்கு நல்ல தீவனமாகும்.

எரிப்பொருள்:

  • இதன் மரம் நல்ல எரிபொருளாகும்.

நார்:

  • இதன் பட்டையிலிருந்து எடுக்கப்படும் நார் கயிறு தயாரிக்க பயன்படுகிறது.

 

 

-->