பின்னூட்டம்
 


படங்கள்




விளக்கம்

ஈட்டி மரம்


அறிவியல் பெயர் :

டால்பெர்ஜியா லாட்டிஃபோலியா

பொதுப்பண்பு :

  • அகன்ற கிளைகளையுடைய பெரிய இலையுதிர் மரமாகும்.
  • மரப்பட்டை சாம்பல் நிறமுடையது.
  • பூக்கள் வெண்நிறமாக காணப்படும்.
  • நெற்றானது தட்டையானத மற்றும் பெரியது மற்றும் 1 – 3 விதைகளை கொண்டது.

பரவல் :

  • இந்தியாவின் வறண்ட இலையுதிர் காடுகளில் பரவலாக காணப்படுகிறது.

வாழிடம் :

பசுமை மாறா காடுகள் மற்றும் வறண்ட இலையுதிர் காடுகளில் அதிகளவு வளரும் மரமாகும்.

மண் :

செம்பொறைமண், வண்டல் மண், கரிசல் மண்ணில் வளரக்கூடியது. வடிகால் சரியாக இல்லாத இடத்தில் வளர்ச்சி குன்றிக் காணப்படும்.

கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :

1500மீ வரை வளரக்கூடியது.

மலையளவு :

250 - 800 மி.மீ

வெப்பநிலை :

45 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.

நிலப்பரப்பு :

சமவெளி மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.

மரப்பண்பு :

  • வலிமையான ஒளி விரும்பி மரமாகும்.
  • நீண்ட வறட்சியை தாங்கும், ஆனால் பனியை தாங்கி வளரும் தன்மையற்றது.

வளரியல்பு :

இலையுதிர் மரமாகும்.

தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்


 

செயற்கை மறு உருவாக்கம்:

 

  • நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமும் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.

 

இனப்பெருக்கம்:

 

விதை சேகரிப்பு மற்றும் சேமிப்பு:

 

  • நெற்றானது பழுப்பு நிறமாக மாறிய பின் சேகரிக்கப்படுகிறது.
  • நேற்றிலிருந்து விதைகள் பிரித்தெடுக்கப்பட்டு, சூரிய ஒளியில் விதைகள் உலர்த்தப்படப்படுகிறது.
  • உலர்த்தப்பட்ட விதைகள் பாலித்தீன் பைகளில் சேகரிக்கப்படுகிறது.
  • முறையாக உலர்த்தப்பட்ட விதைகள், நன்றாக பராமரிக்கப்படின் ஒரு வருடம் வரை சேமிக்கலாம்.
  • ஒரு கிலோ விதையில் 18500 - 35000 விதைகள் இருக்கும்.
  • விதை முளைப்புத்திறன் 60 - 70 சதவிகிதம் ஆகும்.

விதைநேர்த்தி:

  • குளிர் நீரில் 24 மணி நேரம் ஊர வைக்கப்படுகிறது.

 

நாற்றங்கால் தொழில் நுட்பம்:

 

  • விதையானது நேரடியாக தாய்பாத்தியில் விதைக்கப்படுகிறது.
  • விதைகள் விதைக்கப்பட்டதிலிருந்து 6 நாட்களில் முளைக்க துவங்குகிறது.
  • நாற்றுகளுக்கு தண்ணீர் தெளித்தல் மற்றும் அதிக சூரிய வெப்பத்திலிருந்து பராமரிப்பது அவசியமானதாகும்.
  • நூற்றானது 2 இலைகள் துளிர்ந்த பிறகு வளர்ப்பு ஊடகம் நிரப்பப்பட்ட பாலித்தீன் பைகளுக்கு மாற்றப்படுகிறது.
  • 6 மாதங்களான நாற்றுகள் நடவு பணிக்கு பயன்படுத்தப்படுகிறது.

 

பெருந்தோட்ட தொழில் நுட்பம் :

  • நாற்றானது மழை பருவ காலத்தில் நடப்படுகிறது.
  • குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.
  • இடைவெளியானது 3 x 3 மீ என இருக்க வேண்டும்.

  • தொடச்சியான களையெடுத்தல் மற்றும் உழுதல் நாற்று நன்கு வளர துணை புரிகிறது.
  • நாற்று நடப்பட்ட பகுதியை சுற்றி மண்ணை இடிக்கடி கொத்தி விடுதல் வேண்டும்.
  • நேரான மரம் கிடைக்க வேண்டுமெனில் மரங்களுக்கிடையேயான இடைவெளி குறைவாக இருக்க வேண்டும்.

  •  
  • தோராயமாக 25 – 30 வருடங்கள்.
  •  

சந்தை மதிப்பு :

  • ஒரு சதுர அடி மரம் 4800 ரூபாய் என்ற விலையில் விற்கப்படுகிறது.

* சந்தையை பொறுத்து விலை மாறுபடுகிறது

ஊடுபயிர் சாகுபடி :

  • ஓராண்டு தாவரம் மற்றும் பழமரங்களை ஊடுபயிரியாக பயிரிடலாம்.

முக்கிய பயன்கள் :

 

மரம்: 

 

  • இதன் மரம் மரச்சாமான்கள் செய்யவும், இசை கருவிகள் செய்யவும் மற்றும் விலையுயர்ந்த மர உபயோக பொருட்கள் செய்யவும் பயன்படுத்தப்படுகிறது.
  • இம்மரம் அதிகப்படியாக காப்பி தோட்டங்களில் நிழலுக்காக பயிரிடப்படுகிறது.
  • மண் அரிமானம் அதிகமுள்ள பகுதிகளில் பயிரிடுவதால் மண் அரிப்பை தடுக்க பயன்படுத்தப்படுகிறது.

 

மண்நேர்த்தி :

 

  • தோதகத்தி மரத்தின் இலைகள் மட்கி ஊட்டச்சத்துக்களை அளிக்கிறது.

மருத்துவம்:

  • மரத்தின் à®ªà®Ÿà¯à®Ÿà¯ˆà®¯à®¿à®²à®¿à®°à¯à®¨à¯à®¤à¯ à®ªà¯†à®±à®ªà¯à®ªà®Ÿà¯à®®à¯ à®Ÿà®¾à®©à®¿à®©à¯ à®µà®¯à®¿à®±à¯à®±à¯à®ªà¯ à®ªà¯‹à®•à¯à®•à¯à®¤à¯Šà®´à¯à®¨à¯‹à®¯à¯à®šà¯†à®°à®¿à®®à®¾à®© à®•à¯‹à®³à®¾à®±à¯à®•à®³à¯ à®ªà¯‹à®©à¯à®±à®µà®±à¯à®±à®¿à®±à¯à®•à¯ à®ªà®¯à®©à¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.

மண்நேர்த்தி:

  • தோதகத்தி à®®à®°à®¤à¯à®¤à®¿à®©à¯ à®‡à®²à¯ˆà®•à®³à¯ à®®à®Ÿà¯à®•à®¿ à®Šà®Ÿà¯à®Ÿà®šà¯à®šà®¤à¯à®¤à¯à®•à¯à®•à®³à¯ˆ    à®…ளிக்கிறது.

 

 

-->