பின்னூட்டம்
 


படங்கள்




விளக்கம்

பதிமுகம்


அறிவியல் பெயர் :

சிசால்பினியா சப்பன்

பொதுப்பண்பு :

  • 10 மீ உயரம் வரை வளரக்கூடிய பெரிய இலையுதிர் மரமாகும்.
  • மரமானது பழுப்பு கலந்த சாம்பல் நிறமுடையது.
  • இலையானது அடர் பச்சை நிறமுடையது.

பரவல் :

  • இம்மரம் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் பயிரிடப்படுகிறது.

வாழிடம் :

வெப்ப மண்டல மற்றும் மித வெப்ப மண்டல பகுதிகள் அதிகம் வளரும்.

மண் :

இம்மரம் களிமண்ணிலும் மற்றும் சுண்ணாம்பு நிறைந்த பகுதிகளிலும் நன்கு

கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :

1000மீ உயரம் வரை வளரக்கூடியது.

மலையளவு :

700 – 4300 மி.மீ

வெப்பநிலை :

24 -28 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.

நிலப்பரப்பு :

மலைப்பகுதிகளில் வளரும் மரமாகும்.

மரப்பண்பு :

  • இது ஒரு ஒளி விரும்பி மரமாகும். நீர் தேங்கியிருக்கும் பகுதிகளில் வளரும் தன்மையற்றது.
  • வறட்சியை தாங்கி வளரக்கூடியது.

வளரியல்பு :

இலையுதிர் மரமாகும்.

தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்


  • விதைகள் மூலம் இனபொருக்கம் அடைகிறது.

 

  • நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலம் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.

  • விதையானது ஏப்ரல் - மே மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
  • சூரிய ஒளியில் முதிர்ந்த நெற்றானது உலர்த்தப்படப்படுகிறது.
  • உலர்த்தப்பட்ட நெற்றிலிருந்து விதைகள் பிரித்தெடுக்கப்படுகிறது.
  • விதைகளை 2 – 3 மாதங்கள் வரை சேகரித்து வைக்கலாம்.
  • விதை முளைப்புத்திறன் 90 சதவிகிதம் ஆகும்.

  • குளிர் நீரில் 24 மணி நேரம் ஊர வைக்கப்படுகிறது.
  • கொதிக்க வைக்கப்பட்டு இறக்கப்பட்ட நீரில் 5 நொடிகள் ஊர வைக்கப்படுகிறது.

  • மழை காலங்களில் விதைகள் தாய்பாத்தியில் விதைக்கப்படுகிறது.
  • புதிதாக சேகரிக்கப்பட்ட விதையானது 90 – 100 சதவிகித முளைப்புத்திறன் கொண்டது.
  • விதைகள் வளர்வதற்கு நிழுல் மிக அவசியமாகும்.
  • ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்கு களைகலெடுத்தல் மற்றும் நீர் பாய்ச்சுவது அவசியமாகும்.

 

உடல இனப்பெருக்கம்

 

  • இளம் குச்சிகள் இவ்வகை இனப்பெருக்கத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.
  • இன்டோல் பியூட்டரிக் அமிலத்தை குச்சிகளின் அடிப்பகுதியில் படுமாறு செய்து பாலித்தீன் பையில் நட வேண்டும்.

 

பெருந்தோட்ட தொழில் நுட்பம் :

  • நாற்றானது மழை பருவ காலத்தில் நடப்படுகிறது.
  • குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.
  • காற்று தடுப்பனுக்கு இடைவெளியானது 1 x 2 மீ மற்றும் மற்ற தோட்ட உற்பத்திக்கு 2 x 2 மீ இடைவெளி இருப்பது அவசியம்.
  • நிழலுக்காக வளர்க்கப்படும் மரங்களுக்கிடையேயான இடைவெளி 5 – 10 மீ இருக்க வேண்டும்.

  • பக்க கிளைகள் அகற்றுதல் அவசியமாகும்.

 

  • 6 - 12 வருடங்கள்

சந்தை மதிப்பு :

  • ஒரு கிலோ மரம் 70 ரூபாய் என்ற விலையில் விற்கப்படுகிறது.
  • ஒரு ஏக்கருக்கு அல்லது 1000 மரத்திற்கு 17,50,000 ரூபாய் என்றளவு மகசூலை தரவல்லது.

* சந்தையை பொறுத்து விலை மாறுபடுகிறது

முக்கிய பயன்கள் :

  • இதன் சிவப்பு நிறம் கொண்ட மென்கட்டை பொருளாதார முக்கியதுவம் வாய்ந்தது. இ;லதிலிருந்து எடுக்கப்படும் சாயம் பஞ்சு மற்றும் பட்டை நிறமூட்ட பயன்படுத்தப்படுகிறது.
  • பட்டையும் சாய தயாரிப்பிற்கு பயன்படுத்தப்படுகிறது. பட்டையானது 40 சதவிகித டானினை தரவல்லது.
  • வேரானது மஞ்சள் நிற சாயத்தை தரவல்லது.

  • கனிகளில் டேனின் உள்ளது.
  • இது கருமை சாயம் தயாரிக்கப் பயன்படுகிறது.
  • இரும்புடன் சேர்த்தும் தயாரிக்கலாம்.
  • சிறந்த எரிபொருளாக உள்ளது.
  • இதனை வேலியாகவும் படிகப்பொருட்களாகவும் நடலாம்.

-->