பின்னூட்டம்
 


படங்கள்




விளக்கம்

மந்தாரை


அறிவியல் பெயர் :

பாகுனியா பர்பூரியா

பொதுப்பண்பு :

  • சராசரி அளவுடைய பசுமை மாறா மரமாகும்.
  • மரப்பட்டையானது வெளிர் சாம்பல் நிறமுடையது. முதிர்ந்த பட்டை மிகவும் கடினமானது.
  • இலைகள் அடர் பச்சை நிறமுடையது.
  • பூக்கள் பெரியது, மணமானது மற்றும் இளஞ்சிவப்பு நிறமுடையது.
  • அடர் சாம்பல் நிறமுடைய நெற்று 12 – 16 விதைகளை கொண்டது.

பரவல் :

  • இந்தியா முழுதும் பரவலாக காணப்படுகிறது.

வாழிடம் :

வெப்பமண்டல மற்றும் இலையுதிர் காடுகளில் அதிகம் வளர்கிறது.

மண் :

பரவலாக அனைத்து மண்ணிலும் வளரும் தன்மை கெண்டது.

மண் pH :

5.5 (ம) 7.5

கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :

1200 மீ வரை வளரக்கூடியது.

மலையளவு :

500 – 1900 மி.மீ

வெப்பநிலை :

35 – 41 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.

நிலப்பரப்பு :

சமவெளி மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.

மரப்பண்பு :

  • குறைந்தளவு ஒளி விரும்பி மரமாகும்.
  • பனியை தாங்கி வளரக்கூடியது.

வளரியல்பு :

பசுமைமாறா மரம்.

தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்


 

  • சாதகமான சூழ்நிலையில் விதைகள் மூலமாக இனப்பெருக்கமடையக்கூடியது.

 

  • நேரடி விகைள் விதைப்பு மூலமாகவும் மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமாகவும் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.

  • பழுத்த நெற்றானது ஜனவரி - மார்ச் மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
  • நெற்றானது வெயிலில் உலர்த்தப்படுகிறது.
  • உலர்த்தப்பட்ட விதைகள் பாலித்தீன் பைகளில் சேகரிக்கப்படுகிறது.
  • ஒரு கிலோ விதையில் 4000 - 5000 விதைகளிருக்கும்.
  • விதைகள் 8 மாதம் வரை முளைப்புத்திறனை தக்க வைத்துக்கொள்ளும்.
  • விதை முளைப்புத்திறன் 30 – 100 சதிவிகிதமாகும்.
  • நாற்று உற்பத்தி 95 – 10 சதவிகிதமாகும்.

  • தேவையில்லை.

  • விதைகள் வளர் ஊடகம் நிரப்பப்பட்ட பாலித்தீன் பைகளில் விதைக்கப்படுகிறது.
  • குறிப்பிட்ட கால இடைவெளியில் பூவாளி கொண்டு நீர் இறைக்கப்படுகிறது.
  • நாற்று பை களைகளின்றி பாதுகாக்கப்படகிறது.
  • 6 மாதமான நாற்றுகள் நடவிற்கு ஏற்றதாகும்.

பெருந்தோட்ட தொழில் நுட்பம் :

 

  • மழை பருவ காலம் தொடங்கியபின் விதைகள் நேரடியாகவே நிலத்தில் விதைக்கப்படுகிறது.

 

நாற்றுகள் நடவு முறை :

 

  • குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.
  • குழிகள் ஜுலை மாதத்தில் எடுப்பது சிறந்ததாகும்.
  • வறண்ட பகுதிகளில் குழியின் அளவு 60 செ.மீ3 என இருக்க வேண்டும்.
  • இடைவெளியானது 3 x 3 மீ என இருக்க வேண்டும்.
  • மழை பருவ காலத்தில் நடவு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

 

 

  • களையெடுத்தல் மற்றும் நிலத்தை உழுதல் அவசியமாகும்.

 

சந்தை மதிப்பு :

  • ஒரு டன் மரம் 2000 – 2500 ரூபாய் என்ற விலையில் விற்கப்படுகிறது.

* சந்தையை பொறுத்து விலை மாறுபடுகிறது

 

 

முக்கிய பயன்கள் :

  • இம்மரம் கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்தப்படுகிறது.
  • இது ஒரு அலங்கார மரமாக தேட்டங்களிலும், பூங்காக்களிலும் வளர்க்கப்படுகிறது.
  • இதன் பூக்கள் செப்டம்பர் - டிசம்பர் கால இடைவெளியில் பூக்கவல்லது.

தீவனம்:

 

  • இலைகளில் 13 – 15% புரதம் காணப்படுகிறது. மிதமான தீவனமாக பயன்படுகிறது.

 

மலர்கள்:

 

  • காய்கறியாகவும், ஊறுகாய் செய்யவும் உதவுகிறது.

 

மரப்பட்டை:

 

  • மலிவான படிகப்பொருள், சாயம், மருந்துப்பொருளாகவும் பயன்படுகிறது.
  • மரம் முக்கியமாக அழகான மலர்களின் உற்பத்திக்கு வளர்க்கப்படுகிறது.

 

-->