பின்னூட்டம்
 


படங்கள்




விளக்கம்

குதிரை பிடுக்கு மரம்


அறிவியல் பெயர் :

ஸ்டெர்குலியா ஃபோடிடா

பொதுப்பண்பு :

  • இது பரவக்கூடிய கவர்ச்சிகரமான இலையுதிர் மரம். 
  • குடை வடிவமுடைவை.  40மீ உயரம் வரை வளரக் கூடியது. 
  • உருளை வடிவ அடிப்பகுதியானது 90 செ.மீ விட்டமுடையது. 
  • உணவாகவும், மருந்தாகவும், பல பொருட்களை தயாரிக்கவும் பயன்படுகிறது. 
  • வெப்ப மண்டலப் பகுதிகளில் அழகுத்தாவரமாக உள்ளது.

பரவல் :

  • கிழக்குஆசியா, இலங்கை, மியான்மர், கம்போடியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், ஆஸ்திரேலியா

வாழிடம் :

ஆற்றுப்டுகைகள் மற்றும் கடலோரப் பகுதிகளில் வளரும்.

மண் :

வண்டல் மண், செந்நிறக் களிமண் வகை.

மண் pH :

6-7.5

கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :

750-1000 மீ

மலையளவு :

900-2000 மி.மீ

வெப்பநிலை :

16-30 செல்சியஸ்

நிலப்பரப்பு :

கடலோரப் பகுதிகள்

மரப்பண்பு :

  • இலையுதிர் மரம், வேகமாக வளரக்கூடியது. நீர்பாசனம் இருந்தால் அனைத்து வகை மண்ணிலும் வளரும்.

வளரியல்பு :

ஈரமிக்க இலையுதிர் மரம்.

தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்


வளர்ச்சி :

வேகமாக வளரக் கூடியது.

உயரம் :

40மீ

இயற்கை மறு உருவாக்கம்:

  • விதைகள் மூலம்

செயற்கை மறு உருவாக்கம்:

  • மரக்கன்றுகள் மற்றும் வெட்டுத்துண்டுகள்

விதை சேகரிப்பு மற்றும் சேமிப்பு:

  • சேகரித்த விதைகள் சூரிய ஒளியில் காயவைத்து சதைப்பகுதியை நீக்க வேண்டும்.
  • புதிதாக சேகரித்த விதைகள் விதைப்பதற்கு ஏற்றது.
  • துண்டுகள் மூலமும் வளரும்.

விதை நேர்த்தி:

  • விதைகளை நிழலில் உலர்த்த வேண்டும்.

நாற்றாங்கால் தொழில்நுட்பம்:

  • நன்கு உழுத நிலத்தில் நாற்றாங்கால் படுக்கைகளை 100மீx25மீ என்ற அளவில் அமைக்க வேண்டும். 
  • 1.25 இலட்ச மரக்கன்றுகள் 120 படுக்கைகளில் வளர்க்கலாம்.

பெருந்தோட்ட தொழில் நுட்பம் :

  • 30-45செ.மீ ஆழத்தில் நிலத்தை உழ வேண்டும். 
  • 6x6மீ இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்.
  • கோடைகாலங்களில் சூரிய ஒளி குழிகளில் விழ வேண்டும். 
  • இக்குழியில் மேற்பரப்பு மணல், உரம் மற்றும் பொட்டாஷ் இட வேண்டும்.

பராமரிப்பு மற்றும் நோய்:

நீர்ப்பாசனம்:           

  • மழைக்காலங்களில் நீர்ப்பாசனம் தேவையில்லை.
  • ஆனால் வறண்ட காலங்களில் நீர்ப்பாசனம் தேவைப்படுகிறது.

  • 40 வருடங்கள்

முக்கிய பயன்கள் :

முக்கிய பயன்:

  • இதன் விதைகள் அப்படியே உண்ணக்கூடியவை அல்லது எண்ணெயில் வறுத்தும் உண்ணலாம்.
  • கோகோவின் மணம், சுவை நிறைந்தது.
  • இதனை வறுக்கும்போது வேர்கடலை போன்றது. 
  • நீளவடிவ விதைகள் 25மி.மீ நீளமும், 12மி.மீ விட்டமும் கொண்டது.
  • இளம் மரத்தின் வேர்களும் அப்படியே உண்ணக்கூடியவை.

  • இதன் மரப்பட்டை நார் போன்றது. அழகுசாதனம் பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது

-->