பின்னூட்டம்
 


படங்கள்




விளக்கம்

அயனிபலா


அறிவியல் பெயர் :

அர்டோகார்பஸ் ஹிர்சூட்டஸ்

பொதுப்பண்பு :

  • அயனிபலா 50 மீ உயரமுடைய பசுமை மாறா மரமாகும்.
  • மரப்பட்டை அடர் பச்சை நிறமுடையது மற்றும் இளம் பருவத்தில் மென்மையாக காணப்படும்.
  • மரத்தின் அனைத்து பாகங்களிலும் வெண்ணிறபால் வரக்கூடியது.
  • இலைகள் அடுத்தடுத்து அமைந்திருக்கும் மற்றும் 4 செ.மீ நீளமுடையது.
  • இம்மரம் ஒரு பால் மலர்களை கொண்டது. பூக்கள் சிறியது மற்றும் மஞ்சள் நிறமுடையது.
  • காயானது நீள்வட்ட வடிவிலிருக்கும். காய் 6 – 7.5 செ.மீ நீளமுடையது.

பரவல் :

  • இம்மரம் இந்தியாவை தாயகமாக கொண்ட மரமாகும். இறிப்பாக இம்மரம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அதிகம் வளரும் தன்மையுடையது.

வாழிடம் :

நன்னீர் ஓடும் ஆறு மற்றும் ஓடை பகுதிகளின் ஓரங்களில் அதிகம் வளரும் தன்மை கொண்டது. சதுப்புநிலப்பகுதிகளிலும் வளரும்.

மண் :

நல்ல நீர் தேங்காத தன்மை கொண்ட வளமான ஈர மண்ணில் நன்கு வளரும் தன்மை கெண்டது.

கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :

1300 மீ வரை வளரக்கூடியது.

மலையளவு :

2500 – 3500 மி.மீ

வெப்பநிலை :

22 - 32 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.

நிலப்பரப்பு :

மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.

மரப்பண்பு :

  • முதிர்ந்த மரங்கள் நிழலைதாங்கி வளரும் தன்மையுடையது ஆனால் இளம் மரங்கள் ஓரளவு மட்டும் நிழலைதாங்கி வளரக்கூடியது.

வளரியல்பு :

பசுமை மாறா மரமாகும்.

தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்


  • சாதகமான சூழ்நிலையில் விதைகள் மூலமாக இனப்பெருக்கமடையக்கூடியது.

  • நேரடி விகைள் விதைப்பு மூலமாகவும் மற்றும் நாற்றங்கால் ஒட்டு நாற்று வளர்ப்பு முறை மூலமாகவும் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.

  • பழுத்த காயானது டிசம்பர் - மார்ச் மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
  • சேகரிக்கப்பட்ட காயிலிருந்து விதைகள் தனியே பிரித்தெடுக்கப்படுகிறது.
  • உலர்த்தப்பட்ட விதைகள் பாலித்தீன் பைகளில் சேகரித்து வைக்கப்படுகிறது. விதைகளை முளைப்புத்திறன் குறையாமல் ஒரு மாதம் வரை சேகரித்து வைக்கலாம்.
  • ஒரு கிலோ விதையில் 45 – 90 விதைகளிருக்கும்.

  • தேவையில்லை.

  • நாற்றானது நேரடியாக பாலித்தீன் பைகளில் விதைக்கப்படுகிறது.
  • இவ்வகை உற்பத்திக்கு பெரிய பாலித்தீன் பைகள் பயன்படுத்தப்படுகிறது.
  • விதைக்கப்பட்டதிலிருந்து 10 நாட்களில் விதைகள் முளைக்கதுவங்குகிறது.
  • புதிதாக சேகரிக்கப்பட்ட விதைகளின் முளைப்புத்திறனானது 70 – 75 சதவிகிதமாகும்.

பெருந்தோட்ட தொழில் நுட்பம் :

  • மழை பருவ காலத்தில் நடவு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
  • குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.
  • குழிகள் வெயிலில் உலர்த்துவதற்காக நடவிற்கு முன்பே எடுக்கப்படுகிறது.
  • குழியில் 10 கிலோ எரு மற்றும் 1 கிலோ வேப்பம்பிண்ணாக்கு சேர்க்கப்படுகிறது.
  • கட்டுரக நாற்றுகள் ஜுன் - டிசம்பர் மாத கால கட்டத்தில் 8 x 8 மீ இடையெளியில் நடப்படுகிறது.
  • நாற்று நடவிற்கு ஜுலை மாதம் ஏற்றதாகும். இடைவெளியானது 5 x 5 மீ என இருக்க வேண்டும்.
  • மரம் வளர்ந்து காய்க்க துவங்கியதும் மரங்களுக்கிடையேயான இடைவெளி 12 x 12 மீ என இருக்க வேண்டும்.

  • நடப்பட்டதிலிருந்து 2 வருடத்திற்கு களையெடுத்தல் அவசியமாகும்.

முக்கிய பயன்கள் :

  • இதன் பழம் பழங்காலத்திலிருந்தே உணவாக உண்ணப்படுகிறது.
  • பழம் மற்றும் விதை மருந்திற்காக அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
  • இதன் மரம் ஓரளவு கடினமானது மற்றும் மரச்சாமான்கள் தயாரிக்க பயன்படுகிறது. ஒட்டுப்பலகை தயாரிப்பிலும் பயன்படுகிறது.
  • இதன் பால் கோந்தாக பயன்படுத்தப்படுகிறது.