பின்னூட்டம்
 


படங்கள்




விளக்கம்

மாமரம்


அறிவியல் பெயர் :

மாஞ்சிபெர்ரா இண்டிகா

பொதுப்பண்பு :

  • பொரிய அகன்ற குடை போன்ற கிளைகளையுடைய பசுமை மாறா மரமாகும்.
  • மரப்பட்டையானது சாம்பல் நிறமுடையது.
  • இலைகள் பளபளப்பானது மற்றும் இளமையில் இளஞ்சிவப்பாகவும் முதிர்ந்த பின் அடர் பச்சை நிறமாவும் காணப்படும்.
  • கனியானது டுரூப் வகையை சேர்ந்தது.
  • காயாக இருக்கும்பொழுது பச்சை நிறமாகவும், கனிந்த பின் மஞ்சள் நிறமாக காணப்படும்.
  • ஒரு கனிக்கு ஒரு பெரிய ஓடுடக்கூடிய விதையை கொண்டிருக்கும்.

பரவல் :

  • இம்மரம் இந்தியா முழுவதும் பரவலாக வளர்க்கப்படும் தோட்டக்கலை மரமாகும்.

வாழிடம் :

வெப்பமண்டல மற்றும் மிதவெப்பமண்டல பகுதியில் வளரும் மரமாகும்.

மண் :

பரவலாக அனைத்து மண்ணிலும் வளரும் தன்மை கெண்டது.

மண் pH :

5.5 – 7.5

கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :

1200 மீ வரை வளரக்கூடியது.

மலையளவு :

500 – 2500 மி.மீ

வெப்பநிலை :

24 - 27 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.

நிலப்பரப்பு :

சமவெளி மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.

மரப்பண்பு :

  • நிழலை தாங்கி வளரக்கூடியது.
  • பனி மற்றும் வறட்சியை தாங்கி வளரக்கூடியது.

வளரியல்பு :

பசுமை மாறா மரம்.

தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்


  • சாகதமான சூழ்நிலையில் விதைகள் மூலமாக இனப்பெருக்கமடையக்கூடியது.

  • நேரடி விகைள் விதைப்பு மூலமாகவும் மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமாகவும் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.

  • பழுத்த விதையானது ஏப்ரல் - ஜுலை மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
  • இதன் மேல் தோழானது நீக்கப்பட்டு, நீர் தேங்காத தன்மை கொண்ட தாய்பாத்தியில் விதைக்கப்படுகிறது.
  • விதையானது சிறிது நாட்களிலேயே முளைப்புத்திறனை இழந்துவிடும் தன்மையுடையது.
  • ஒரு கிலோ விதையில் 4400 - 7700 விதைகளிருக்கும்.
  • விதை முளைப்புத்திறன் 80 – 85 சதிவிகிதமாகும்.
  • நாற்று உற்பத்தி திறன் 40 – 80 சதிவிகிதமாகும்.

  • தேவையில்லை

  • விதைகள் தாய்பாத்தியில் நேரடியாக விதைக்கப்படுகிறது.
  • தாய்பாத்தி விதைப்பு ஜுலை மாத இடைவெளியில் மேற்கொள்ளப்படுகிறது.
  • இரண்டு இலைகள் துளிர்ந்த பின் நாற்றானது 22.5 செ.மீ2 இடைவெளியில் பாலித்தீன் பைகளுக்கு மறுநடவு செய்யப்படுகிறது. நாற்று இந்நிலையை எட்ட ஒரு வருடமாகிறது.
  • 2 வருடங்களான நாற்றுகள் நடவிற்கு பயன்படுகிறது.

பெருந்தோட்ட தொழில் நுட்பம் :

 

நிலம் தயார் செய்தல் :

 

  • குழியின் அளவு 1 மீ3 என இருக்க வேண்டும்.
  • மேல் மண் மற்றும் 10 கிலோ எரு கலந்த கலவையானது குழிக்கு 100 கிராம் என இடப்படுகிறது.

 

இடைவெளி :

 

  • பின் வரும் எவையேனும் ஒரு நடவு இடைவெளி பின்பற்றப்படுகிறது.
  • பாரம்பரிய முறைப்படி 7 – 10 மீ இடைவெளி பின்பற்றப்படுகிறது.
  • அதிக அடர்த்தி நடவிற்கு 5 x 5 மீ இடைவெளி பின்பற்றப்படுகிறது.
  • வரிசை நடவு முறைக்கு 5 x 5 மீ இடைவெளி பின்பற்றப்படுகிறது. அடுத்தடுத்த வரிசைக்கு 10 மீ இடைவெளி பின்பற்றப்படுகிறது.
  • ஒட்டு நாற்றுகள் குழியின் மத்தியில் வைத்து மேல் மண்ணை கொண்டு போற்த்தப்படுகிறது.
  • நாற்று நடப்பட்டவுடன் தண்ணீர் பாய்ச்சுவது மிக அவசியமாகும்.
  • ஒட்டு நாற்றானது நிலத்திலிருந்து 15 செ.மீ இருக்க வேண்டும்.

 

  • களையெடுத்தல் அவசியமாகும்.
  • முதல் வருடத்தில் மூன்று முறை களையெடுத்தல் அவசியமாகும்.
  • இரண்டாம் வருடத்தில் இரு முறை களையெடுத்தல் அவசியமாகும்.
  • மரத்தை சுற்றி 30 செ.மீ3 சுற்றளவிற்கு கொத்தி விடுதல் அவசியமாகும். 8 – 10 செ.மீ ஆழத்தில் மண்ணை நன்கு கொத்தி விடுதல் வேண்டும்.

  • 75 வருடங்களில் அறுவடை செய்யப்படுகிறது.
  • ஒவ்வொரு வருடமும் மார்ச் - ஜுன் கால கட்டத்தில் கனிகள் அறுவடை செய்யப்படுகிறது.

சந்தை மதிப்பு :

  • ஒரு சதுர அடி மரம் தோராயமாக 1300 – 1550 ரூபாய் என்ற விலையில் விற்கப்படுகிறது.

* சந்தையை பொறுத்து விலை மாறுபடுகிறது

 

முக்கிய பயன்கள் :

  • ஊறுகாய் தயாரிக்கவும், குளிர்பானங்கள் தயாரிக்கவும் மற்றும் கூழாகவும் பயன்படுகிறது.
  • இதன் பழம் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்ததாகும். பழம் உணவாகவும் பயன்படுத்தப்படுகிறது.
  • இதன் மரம் உள் கட்டுமான பணிகளுக்காகவும், மரச்சாமான்கள் செய்யவும், வீட்டு உபயோக பொருட்கள் தயாரிக்கவும் மற்றும் படகு கட்டுமானத்திற்கும் பயன்படுகிறது.
  • இதன் இலை சமய முக்கித்துவம் வாய்ந்தது. விழாக்காலங்களில் இதன் இலை தோறணங்கள் கட்டவும், சிறிய குச்சிகள் யாகம் நடத்தவும் பயன்படுத்தப்படுகிறது.

எரிபொருள்:

  • எரிபொருள் மதிப்பு 4200 கி.கலோரி கி.

மரக்கட்டை:

  • மரப்பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது.
  • -கா. படகு, கதவு தயாரிக்க, தச்சுப் பொருட்கள்.

-->