பின்னூட்டம்
 


படங்கள்




விளக்கம்

பாமாயில் பனை மரம்


அறிவியல் பெயர் :

எலியிஸ் குயினென்சிஸ்

பொதுப்பண்பு :

  • 20 மீ உயரம் வரை வளரக்கூடிய நேரான மரமாகும்.
  • இதன் இலை பெரியது மற்றும் 3 – 5 மீ நீளமுடையது.
  • இதன் சிறிய பூக்கள் ஒரு குழுமமாக அமைந்திருக்கும்.
  • இதன் காயாது சிவப்பு நிறமுடையது.
  • இதன் காயிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் பல்வேறு பயன்பாடுகளுக்காக பயன்படுத்தப்படுகிறது.
  • காயானது தனித்தனியாக காய்க்கிறது. காயில் அதிக எண்ணெய் அடங்கியுள்ளது.

பரவல் :

  • தென்னிந்தியாவில் அதிகமாக வளர்க்கப்படுகிறது.

வாழிடம் :

ஒப்புமை ஈரப்பதம் அதிகமாக உள்ள பகுதிகளில் அதிகம் வளர்கிறது.

மண் :

ஆழமான, வளமான மற்றும் இரும்பு தாதுக்கள் குறைவான பகுதிகளில் நன்கு வளரும் தன்மை கெண்டது.

மண் pH :

4-6

கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :

900 மீ வரை வளரக்கூடியது.

மலையளவு :

2000 – 3000 மி.மீ

வெப்பநிலை :

27 - 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.

நிலப்பரப்பு :

சமவெளி நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.

மரப்பண்பு :

  • வறட்சி மற்றும் பனியை தாங்கி வளரக்கூடியது

வளரியல்பு :

பசுமைமாறா மரம்

தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்


  • சாகதமான சூழ்நிலையில் விதைகள் மூலமாக இனப்பெருக்கமடையக்கூடியது.

 

  • நேரடி விகைள் விதைப்பு மூலமாகவும் மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமாகவும் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.

  • விதைகள் மரத்திலிருந்து பறிக்கப்பட்டு காய்கள் தனியே பிரித்தெடுக்கப்படுகிறது.
  • மேல் தோலானது கத்தி கொண்டு நீக்கப்படுகிறது.
  • விதைகள் நிழலில் உலர வைக்கப்படுகிறது. சிமெண்ட் தளம் அல்லது மரத்தளத்தில் விதைகள் காய வைக்கப்படுகிறது.
  • விதைகள் முளைப்புத்திறன் குறையாமல் 3 – 9 மாதங்கள் வரை சேகரித்து வைக்கலாம்.

  • குளிர் நீரில் விதைகள் 5 நாட்கள் ஊர வைக்கப்பட்டு நேர்த்தி செய்யப்படுகிறது. பின் விதைகள் 24 மணி நேரம் உலர்த்தப்படுகிறது.

  • பாலித்தீன் பை 23 x 13 செ.மீ அளவுடையதாக இருக்க வேண்டும்.
  • விதைகள் வளர் இடுபொருட்களான 2:1:1 என்ற விகிதத்தில் கலக்கப்பட்ட செம்மண், மணல் மற்றும் எரு அடங்கிய பாலித்தீன் பைகளில் நேரடியாக விதைக்கப்படுகிறது.
  • விதைக்கப்பட்டதிலிருந்து 10 – 12 நாட்களில் விதைகள் முளைக்க துவங்குகிறது.
  • விதை முளைப்புத்திறன் 90 – 95 சதவிகிதமாகும்.
  • 15:15:6 விகிதத்தில் தழைசத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல்சத்து கலக்கிய கலவையை 5 லிட்டர் தண்ணீரில் கலந்துகொள்ள வேண்டும். இக்கரைசல் 100 நாற்றுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.

பெருந்தோட்ட தொழில் நுட்பம் :

  • 60 செ.மீ3 அளவுள்ள குழி பயன்படுத்தப்படுகிறது. குழியினுள் மலைமண் மற்றும் எரு சேர்ந்த கலவை பரிந்துரைக்கப்பட்ட அளவு இடப்படுகிறது.
  • முக்கோண முறையில் நாற்று நடப்படுகிறது.
  • பொதுவாக 9 x 9 x 9 மீ இடைவெளி நாற்று நடவிற்கு பயன்படுத்தப்படுகிறது. இவ்வகையில் ஒரு ஹெக்டருக்கு 140 நாற்றுகள் தேவைப்படும்.
  • மே - ஜுன் கால இடைவெளியில் நாற்று நடப்படுகிறது.

  • மண்ணின் ஈரப்பதத்தை தக்க வைத்துக்கொள்ள வெட்டப்பட்ட பனை ஓலைகளை மரத்தை சுற்றி மூடவேண்டும்.
  • 3 வருடத்தில் மகசூல் கிடைக்க நாளுக்கு 150 லிட்டர் தண்ணீர் விடுவது அவசியமாகும். தண்ணீரின் அளவிற்கேற்ப மகசூலும் கிடைக்கும்.
  • சொட்டுநீர் பாசனத்தில் ஒரு பனை மரத்திற்கு 4 சொட்டுநீர் குழாய்கள் அமைக்கப்பட வேண்டும். ஒரு சொட்டுநீர் குழாயானது ஒரு மணி நேரத்தில் 8 லிட்டர் தண்ணீரை பாய்ச்சவல்லது.
  • ஒரு நாளைக்கு 5 மணிநேரம் நீர் பாய்ச்ச வேண்டும்.

  • 3.5 – 4 வருடத்தில் முதல் அறுவடை செய்யப்படுகிறது.
  • அதிகமாக பழுப்பதற்கு முன் அறுவடை செய்ய வேண்டும்.
  • 10 – 12 நாட்கள் இடைவெளியில் மறுஅறுவடை செய்ய வேண்டும்.
  • மழை காலங்களில் 6 – 7 நாட்கள் இடைவெளியில் மறுஅறுவடை செய்ய வேண்டும்.

முக்கிய பயன்கள் :

உணவு:

  • மேற்கு ஆப்பிரிக்கா, மலேசியா போன்ற பகுதிகளில் சமையல் எண்ணெய்யாக பயன்படுகிறது.
  • தற்போது இந்தியாவில் ஏற்படும் எண்ணெய் பற்றாக்குறையை இது நீக்குகிறது.
  • எளிதில் கிடைக்ககூடிய விலை குறைவான எண்ணெய்.
  • இந்த எண்ணெய் சோப்பு தயாரிக்க பயன்படுகிறது.
  • 10% லினோலியிக் அமிலம் இருப்பதால் இது கரோட்டின் மிக்கது.
  • விட்டமின் ஏ குறைபாட்டினால் ஏற்படும் நோய்களை தடுக்கிறது.
  • பனை மரத்தின் இதயம் அதன் எண்ணெய் ஆகும்.

தீவனம்:

  • இந்த புண்ணாக்கு மாட்டுத் தீவனமாக பயன்படுகிறது.

  • இதன் மரக்கட்டைகள் எரிபொருளாகப் பயன்படுகிறது.

-->