பின்னூட்டம்
 


படங்கள்




விளக்கம்

ஏழிலைப்பாலை


அறிவியல் பெயர் :

அல்ஸ்டோனியா ஸ்கோலாரிஸ்

பொதுப்பண்பு :

  • மிதமான அளவுடைய உயரமான பசுமை மாறா மரமாகும்.
  • இலைகள் அடர் பச்சை நிறமாகவும், பூக்கள் வெண்ணிறமாகவும் காணப்படும்.
  • கனியானது எண்ணற்ற விதைகளை கொண்டிருக்கும்.

பரவல் :

  • இம்மரம் இந்தியாவில் ஈரப்பதமிக்க பகுதிகளில் காணப்படும்.
  • இவை மேற்கு கடற்கரை காடுகளில் அதிகம் வளரும் மரவகையாகும்.

வாழிடம் :

வெப்பமண்டல பசுமை மாறா காடுகள் மற்றும் இலையுதிர் காடுகளில் அதிகம் வளரும் மரமாகும்.

மண் :

செம்மண், கரிசல் மண் மற்றும் களிமண் ஆகியவற்றில் நன்கு வளரும்.

கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :

900 மீ வரை வளரக்கூடியது.

மலையளவு :

700 – 1500 மி.மீ

வெப்பநிலை :

34 – 46 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.

நிலப்பரப்பு :

சமவெளி பகுதி மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.

மரப்பண்பு :

  • இது ஒரு நிழல் விரும்பி மரமாகும்.
  • இது வளர ஈரப்பத மண் அவசியமாகும்.
  • மறுதாம்பு நன்கு தழைத்து வளரக்கூடியது.

வளரியல்பு :

இலையுதிர் மரமாகும்.

தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்


இயற்கை மறு உருவாக்கம்:

  • சாதகமான சூழலில் விதைகள் மூலமாக இனப்பெருக்கமடையக்கூடியது.

செயற்கை மறு உருவாக்கம்: 

  • நேரடி விகைள் விதைப்பு மூலமாகவும் மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமாகவும் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.

இனப்பெருக்கம்:

விதை சேகரிப்பு மற்றும் சேமிப்பு:

  • நெற்றானது ஏப்ரல் - ஜுன் மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
  • நெற்றிலிருந்து விதைகள் தனியே பிரித்தெடுக்கப்படுகிறது.
  • சூரிய ஒளியில் விதைகள் உலர்த்தப்படுகிறது.
  • விதைகள் சுத்தம் செய்யப்பட்டு பாலித்தீன் பைகளில் சேகரித்து வைக்கலாம்.
  • ஒரு கிலோ கனியிலிருந்து 20 கிராம் விதைகளை பெறலாம்.

நாற்றாங்கால் தொழில்நுட்பம்:

  • விதையானது குழி தாய்பாத்தியில் நேரடியாக விதைக்கப்படுகிறது.
  • விதைக்கப்பட்ட விதைகள் மேல் மணல் போன்ற தன்மையுடைய மண் கொண்டு மூடப்படுகிறது.
  • ஏப்ரல் - ஜுன் மாதகால இடைவெளியில் விதைகள் விதைக்கப்படுகிறது.
  • ஒரு சதுர மீட்டருக்கு 35 கிராம் விதைகள் விதைப்பிற்கு தேவைப்படும்.
  • தினமும் பூவாளி கொண்டு நீர் பாய்ச்சப்படுகிறது.
  • ஒரு குறிப்பிட்ட மால இடைவெளியில் களையெடுத்தல் அவசியமாகிறது.
  • 7.5 செ.மீ வளர்ந்த நாற்றுகள் பாலித்தீன் பைக்கு மாற்றப்படுகிறது.

 

பெருந்தோட்ட தொழில் நுட்பம் :

  • நடவிற்கு முன் நிலத்தை நன்கு உழுது தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.
  • நடவிற்கு முன்னதாகவே குழிகளை எடுத்த 2 மாதம் வரை உலர்த்த வேண்டும்.
  • குழியின் அளவு 45 செ.மீ3 என இருக்க வேண்டும்.
  • இடைவெளியானது 5 x 5 மீ என இருக்க வேண்டும்.

  • நடப்பட்டதிலிருந்து ஒரு மாதத்திற்கு பின்பு களைகள் எடுத்தல் மற்றும் உழுதல் மேற்கொள்ள வேண்டும். பின் வருடத்திற்கு ஒரு முறை மேற்கொள்ள வேண்டும்.
  • இலை அல்லது இறந்த தாவரங்களை கொண்டு மூடாக்கு அமைக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் மண்ணின் ஈரப்பதத்தை சிறிது நாட்கள் தக்க வைத்துக்கொள்ளலாம்.

  • 6 - 8 வருடங்களில் அறுவடை செய்யப்படுகிறது.

சந்தை மதிப்பு :

  • ஒரு டன் மரம் 2500 ரூபாய் என்ற விலையில் விற்கப்படுகிறது.

முக்கிய பயன்கள் :

  • இதன் மரங்கள் பெட்டிகள் தயாரிக்க பயன்படுகிறது.
  • கரும்பலகைகள் தயாரிக்கவும், மரச்சாமான்கள் செய்யவும் பயன்படுகிறது.
  • இம்மரம் மூன்றாம் ரக ஒட்டுப்பலகைகள் தயாரிக்க பயன்படுகிறது.
  • இம்மரம் தீக்குச்சி தயாரிக்க பயன்படுகிறது. இரண்டாம் தர பென்சில்கள் தயாரிக்க பயன்படுகிறது.

மரப்பட்டை:

  • சீதபேதி à®µà®¯à®¿à®±à¯à®±à¯à®ªà¯à®ªà¯‹à®•à¯à®•à®¿à®±à¯à®•à¯ à®®à®°à¯à®¨à¯à®¤à®¾à®• à®ªà®¯à®©à¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯
  • பட்டையின் à®šà®¾à®±à¯ à®ªà®°à¯ à®®à®±à¯à®±à¯à®®à¯ à®•à¯à®Ÿà®²à¯à®ªà¯à®£à¯ à®†à®•à®¿à®¯à®µà®±à¯à®±à®¿à®±à¯à®•à¯ à®®à®°à¯à®¨à¯à®¤à®¾à®• à®ªà®¯à®©à¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯

 

-->