பின்னூட்டம்
 


படங்கள்




விளக்கம்

செஞ்சந்தனம்


அறிவியல் பெயர் :

டீரோகார்பஸ் சண்டாலினஸ்

பொதுப்பண்பு :

  • சராசரி அளவுடைய இலையுதிர் மரமாகும்.
  • மரப்பட்டை கருஞ்சாம்பல் நிறமுடையது.
  • இலையானது அகன்றது மற்றும் அடிப்பகுதியில் பழுப்பு நிற நார் போன்ற நரம்பை கொண்டது.
  • இம்மரம் வெண்ணிற தோல் போத்திய கருமையான விதையை கொண்டது.
  • பூக்கள் மஞ்சள் நிறமுடையது.
  • இறக்கை போன்ற நெற்றை கொண்டது. இவை சிவப்பு கலந்த சாம்பல் நிறமுடையது.

பரவல் :

  • இம்மரம் இந்தியாவை தாயகமாகக் கொண்டது. குறிப்பாக இம்மரம் தென்னிந்திய பகுதிகளான தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம் மற்றும் கர்நாடகா போன்ற பகுதிகளில் அதிகம் வளர்கிறது.

மண் :

அனைத்து மண் வகைளிலும் வளரும் தன்மை கொண்டது.

கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :

150-900மீ உயரம் வரை வளரக்கூடியது.

மலையளவு :

350 – 1350 மி.மீ

வெப்பநிலை :

11 - 46 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.

நிலப்பரப்பு :

சமவெளி மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.

மரப்பண்பு :

  • வலிமையான ஒளி விரும்பி மரமாகும்.
  • தீயை தாங்கி வளரும் தன்மை கொண்டது.
  • மறுதாம்பு உற்பத்தி மூலம் நன்கு தழைத்து வளரக்கூடியது.

வளரியல்பு :

பெரிய இலையுதிர் மரம்

தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்


வளர்ச்சி :

மிதமான வளர்ச்சி

உயரம் :

25மீ

 

இயற்கை மறு உருவாக்கம்:    

 

  • மறுதாம்பு மூலம் அடுத்த தலைமுறை மரம் வளர்கிறது.

 

செயற்கை மறு உருவாக்கம்:

 

  • நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலம் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.

 

பயிர்பெருக்கம்:

 

விதை சேகரிப்பு மற்றும் சேமிப்பு:     

 

  • விதையானது ஏப்ரல் - ஜுன் மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
  • சூரிய ஒளியில் விதைகள் உலர்த்தப்படப்படுகிறது.
  • உலர்த்தப்பட்ட விதையானது பாலித்தீன் பைகளில் சேகரிக்கப்படுகிறது.
  • விதையின் முளைப்புத்திறன் 12 மாதம் வரையிருக்கும்.
  • ஒரு கிலோவில் 900 – 1400 நெற்றுகள் இருக்கும்.
  • விதை முளைப்புத்திறன் 25 - 30 சதவிகிதம் ஆகும்.

 

விதை நேர்த்தி

 

  • குளிர் நீரில் 3 நாட்கள் ஊர வைக்க வேண்டும். அல்லது சான கரைசலில் 48 மணி நேரம் ஊர வைக்க வேண்டும்.

 

நாற்றாங்கால் தொழில்நுட்பம்:

 

  • விதைகள் தாய்பாத்தியில் நேரடியாக விதைக்கப்படுகிறது. செம்மண் கொண்டு தாய்பாத்தி அமைப்பது நாற்று உற்பத்திக்கு சிறந்ததாகும். தாய்பாத்தியின் அளவு 10 x 1 மீ என்றளவு இருக்க வேண்டும்.
  • 10 – 15 கிலோ விதைகள் ஒரு தாய்பாத்திக்கு பயன்படுத்தப்படுகிறது. விதைக்கப்பட்டவுடன் வைக்கோல் கொண்டு தாய்பாத்தியை மூட வேண்டும்.
  • பூவாளி கொண்டு தினமும் நீர் இறைக்க வேண்டும்.
  • இரண்டு இலைகள் துளிர்ந்த பிறகு அல்லது 4 மாதங்களாகிய நாற்றானது வளர் இடு பொருட்கள் அடங்கிய பாலித்தீன் பைக்கு மாற்றப்படுகிறது.
  • ஒரு வருடமான நாற்றுகள் நடவிற்கு பயன்படுகிறது.

 

பெருந்தோட்ட தொழில் நுட்பம் :

 

அடிக்கட்டை நடவு:          

 

  • நாற்றானது மழை பருவ காலத்தில் நடப்படுகிறது.
  • குழியினுள் 2:1:1 என்ற விகிதத்தில் கலக்கப்பட்ட செம்மண், மணல் மற்றும் எரு அடங்கிய கலவையை குறிப்பிட்ட அளவ இடுவதனால் நாற்றின் வளர்ச்சி துரிதமாகிறது.
  • மேல் மண் கொண்டு நாற்றுகள் நடப்படுகிறது.
  • குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.
  • இடைவெளியானது 3 x 3 மீ என இருக்க வேண்டும்.

 

  • தொடச்சியான களையெடுத்தல் மற்றும் உழுதல் நாற்று நன்கு வளர துணை புரிகிறது. வருடத்திற்கு ஒரு முறை பராமரிப்ப பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

  • 20 - 25 வருடங்கள்

 

சந்தை மதிப்பு :

  • ஒரு டன் மரம் 40 – 45 இலட்சம் ரூபாய் என்ற விலையில் உலகளவில் விற்கப்படுகிறது.

* சந்தையை பொறுத்து விலை மாறுபடுகிறது

ஊடுபயிர் சாகுபடி :

 

  • பயிறு வகை பயிர்களை ஊடுபயிராக பயிரிடலாம்.

முக்கிய பயன்கள் :

  • இதன் மணம் நிறைந்த சிவப்பு மென்கட்டையானது வீட்டு உபயோக பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது.
  • சிவப்பு சாயம் தயாரிக்க பயன்படுகிறது. மேலும் எண்ணெய் எடுக்கவும் மற்றும் மருந்த தயாரிக்கவும் பயன்படுகிறது.
  • இதன் மரம் ஆயுர்வேதத்திலும், சித்த மருத்துவத்திலும் மருந்தாக யான்படுகிறது.
  • சிறப்புமிக்க திருப்பாச்சி பொம்மைகள் இம்மரத்திலேயே தயாரிக்கப்படுகிறது.
  • இதன் மரம் அணு உலைகளில் கதிர் வீச்சுக்களை கட்டுப்படுத்த பயன்படுகிறது.
  • விக்ரா போன்ற ஊக்க மருந்து தயாரிக்க பயன்படுகிறது.
  • பழங்கள் à®Ÿà®¾à®©à®¿à®•à¯à®•à®¾à®• à®šà¯€à®¤à®ªà¯‡à®¤à®¿à®¯à¯ˆ à®•à¯à®£à®ªà¯à®ªà®Ÿà¯à®¤à¯à®¤ à®ªà®¯à®©à¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
  • எண்ணெய் à®®à¯‡à®• à®µà¯†à®Ÿà¯à®Ÿà¯ˆ à®¨à¯‹à®¯à¯ˆ à®•à¯à®£à®ªà¯à®ªà®Ÿà¯à®¤à¯à®¤ à®ªà®¯à®©à¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.

  •  

-->