பின்னூட்டம்
 


படங்கள்




விளக்கம்

வெப்பாலை


அறிவியல் பெயர் :

ரைட்டியா டிங்டோரியா

பொதுப்பண்பு :

  • இது சிறியது முதல் நடுத்தர அளவுடைய இலையுதிர் மரமாகும்.
  • பச்சைத் தழும்புகள் அதன பட்டைகளில் காணப்படும்.
  • தண்டிலிருந்து வெண்மை நிற ரெசின் வடியும்.

பரவல் :

  • ஆஸ்திரேலியா, இந்தியா, மியான்மர், நேபாளம், வியட்நாம் பகுதிகளில் காணப்படுகிறது.

வாழிடம் :

வறண்ட, மித வறண்ட மற்றும் ஈரப்பதமிக்க இடங்களிலும் மணற்பாங்கான அல்லது மலைச்சரிவுகளிலும் காணப்படுகிறது.

கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :

0 - 1200 மீ

மலையளவு :

400 - 2500 மி.மீ.

வெப்பநிலை :

17 – 25 செல்சியஸ்

நிலப்பரப்பு :

சமவெளி (ம) மலைப்பகுதி

மரப்பண்பு :

  • இது மிதமான மற்றும் நிழல் அதிக ஒளியிலும் வளரும் தன்மையுடையது.
  • இது ஈரப்பதமிக்க வெப்பமண்டல காலநிலைகளை விரும்பும்.
  • இது மிதமான வறட்சியை தாங்குபவை.

வளரியல்பு :

இலையுதிர் மரம்.

தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்


வளர்ச்சி :

மிதமான வளர்ச்சி

உயரம் :

18மீ

இயற்கை மறு உருவாக்கம்:

  • விதைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.

செயற்கை மறு உருவாக்கம்:

  • விதை மற்றும் தண்டு வெட்டுத் துண்டுகள்.

இனப்பெருக்கம்:

விதை சேகரிப்பு மற்றும் சேமிப்பு:

  • விதைகளை நேரடியாக மரத்திலிருந்தோ அல்லது தரையிலிருந்தோ காய்கள் முதிர்வுடன் நவம்பர் - ஜனவரி மாதங்களில் சேகரித்து சாக்குப்பைகளில் சேமிக்கலாம்.

விதை நேர்த்தி:

  • விதைகளை 3 மணி நேரம் சுடு நீரிலோ அல்லது குளிர்ந்த நீரில் 6 மணி நோம் ஊர வைத்து விதைக்கலாம்.

நாற்றங்கால் தொழில் நுட்பம்:

  • மேட்டுப்பாத்தியில் விதைகளை தூவியோ அல்லது வரிசையாகவோ ஊன்றலாம். பின் அதன் மேல் மண்ணை லேசாகத் தூவி நீர் தெளிக்க வேண்டும்.
  • நவம்பர் - டிசம்பர் மாதங்கள் விதைப்பதற்கு ஏற்ற மாதங்களாகும்.

பெருந்தோட்ட தொழில் நுட்பம் :

  • நிலத்தை நன்கு உழுது 6X6மீ என்ற இடைவெளியில் 90மீ3 என்ற அளவில் குழி எடுத்து தொழு உரம், சூப்பர் பாஸ்பேட் மற்றும் பொட்டாஸ் கலந்து செடிகளை நட வேண்டும்.
  • ஒட்டுகட்டிய செடியாயின் முட்டு பொடுப்பது அவசியமாகும்.

பாதுகாப்பு மற்றும் நோய்:

நாற்றங்காலில் இலைப்புள்ளி நோய் தென்படும்.

முக்கிய பயன்கள் :

மரக்கட்டை:

  • தரம்மிக்க மதிப்புடைய சற்று வெள்ளை நிறமுடைய கட்டையானது சிற்பங்கள் செய்யவும், தீக்குச்சி மற்றும் மரப்பெட்டி செய்யவும் பயன்படுகிறது.

மருத்துவப்பயன்:

  • இலைகள் பல்வலிக்கு மருந்தாகிறது.
  • இதன் பால் இரத்தப்போக்கை கட்டுப்படுத்துகிறது.
  • சோரியாசிஸ், வயிற்று வலி, பல்வலி மற்றும் வயிற்றுப்போக்கை கட்டுபபடுத்தப்படுகிறது.;

சாயம்:

  • இலை, பூ மற்றும் காய்கள் நீல நிற சாயத்தைத் தரவல்லது.

தீவனம்:

  • இலைகள் மாட்டுத்தீவனமாகப் பயன்படுகிறது.

-->