பின்னூட்டம்
 


படங்கள்




விளக்கம்

சீதாபழம்


அறிவியல் பெயர் :

அனோனா ஸ்கோமோசா

பொதுப்பண்பு :

  • 3 – 7 மீ உயரம் வரை வளரக்கூடிய சிறிய அலையுதிர் மரமாகும்.
  • மரப்பட்டை வெளிர் சாம்பல் நிறமுடையது.
  • இலையானது வெளிர் பச்சை நிறமுடையது.
  • பூக்கள் பச்சை கலந்த மஞ்சள் நிறமுடையது.

பரவல் :

  • இந்தியாவிற்கு அறிமுகம் செய்யப்பட்ட மரமாகும். எனினும் இந்தியா முழுவதும் பரவிக்காணப்படுகிறது.

வாழிடம் :

வெப்பமண்டல காடுகளில் அதிகம் வளர்கிறது.

மண் :

அனைத்து மண்வகைகளுக்கும் நன்கு வளரும் தன்மை கொண்டது. நல்ல வளம் பொருந்திய செம்மண்ணில் நன்கு வளரும் தன்மை கொண்டது.

கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :

2000 மீ உயரம் வரை வளரக்கூடியது.

மலையளவு :

700 ம.மீ க்கு மேல்.

வெப்பநிலை :

41 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.

நிலப்பரப்பு :

சமவெளி மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.

மரப்பண்பு :

  • இது வறட்சியை தாங்கி வளரும் தன்மையுடையது.

வளரியல்பு :

பசுமைமாறா மரம்

தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்


 

இயற்கை மறு உருவாக்கம்:

 

  • சாதகமான சூழலில் நன்கு வளரும் தன்மை கொண்டது.

 

செயற்கை மறு உருவாக்கம்:

 

  • விதைகள் மூலமாகவும், உடல இனப்பெருக்கம் மூலமாகவும் பெருக்கம் செய்யலாம்.

 

இனப்பெருக்கம்:

 

விதை சேகரிப்பு மற்றும் சேமிப்பு:

 

  • விதையின் விதையுறையை நீக்கி விதைகள் சேகரிக்கப்படுகிறது.
  • நிழலில் விதைகள் உலர்த்தப்படப்படுகிறது.
  • ஒரு கிலோ விதையில் 1000 - 1500 விதைகள் இருக்கும்.
  • விதை முளைப்புத்திறன் 90-95 சதவிகிதம் ஆகும்.

 

விதை நேர்த்தி:

 

  • தேவையில்லை 

 

நாற்றங்கால் தொழில் நுட்பம்:

 

  • நாற்றானது விதைகள் அல்லது உடல இனப்பெருக்கம் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது.
  • விதைகளை நேரடியாக வளர் இடுபொருட்கள் அடங்கிய பாலித்தீன் பைகளில் விதைக்கப்படுகிறது.
  • விதைக்கப்பட்டதிலிருந்து 20 – 30 நாட்களில் விதைகள் முளைக்க துவங்குகிறது.
  • 6 மாதமான நாற்றுகள் நடவிற்கு பயன்படுத்தப்படுகிறது.

 

பெருந்தோட்ட தொழில் நுட்பம் :

  • நாற்றானது மழை பருவ காலத்தில் நடப்படுகிறது.
  • குழியில் எரு, சூப்பர்பாஸ்பேட் மற்றும் வேப்பம்பிண்ணாக்கு அடங்கிய கலவை இடப்படுகிறது.
  • குழியின் அளவு 60 செ.மீ3 என இருக்க வேண்டும்.
  • இடைவெளியானது 4 x 4 மீ, 5 x 5 மீ அல்லது 6 x 6 மீ என இருக்க வேண்டும்.

 

  • தகுந்தளவு ஈரப்பதத்தை மரமானது காய்க்கும் வரை கொடுக்க வேண்டும்.

 

  • 3 வருடத்தில் அறுவடை செய்யப்படுகிறது.

சந்தை மதிப்பு :

  • ஒரு டன் பழம் தோராயமாக 12000 – 13000 ரூபாய் என்ற விலையில் விற்க்கப்படுகிறது.

* சந்தையை பொறுத்து விலை மாறுபடுகிறது

 

 

முக்கிய பயன்கள் :

  • ஐஸ்கிரீம் தயாரிப்பில் நிறமியாக பயன்படுகிறது.
  • இதன் 50 – 80 சதவிகித பழங்கள் உணவிற்காக பயன்படுகிறது.
  • இதன் பழங்களில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால் மருந்தாக பயன்படுகிறது.

  • எரிபொருளுக்கு பயன்படுத்தப்படும்.
  • இலைகள், செடியின் வேர்கள் மருத்துவ குணம் வாய்ந்தவை.
  • இவை வலிநிவாரணியாகப் பயன்படுத்தப்படுகிறது.

-->