பின்னூட்டம்
 


படங்கள்




விளக்கம்

பீனாரி மரம்


அறிவியல் பெயர் :

அய்லாந்தஸ் எக்செல்சா

பொதுப்பண்பு :

  • இது ஒரு பெரிய இலையுதிர் மரமாகும்.
  • இம்மரத்தின் அடிப்பகுதி பருத்து தடிமனாக காணப்படும்.
  • பூக்கள் பச்சை நிறத்துடன்கூடிய மஞ்சள் நிறமுடையது.
  • விதைகள் பழுப்பு நிறத்துடன்கூடிய சிவப்பு நிறமுடையது.
  • ஒரு நெற்றுக்கு 1 – 5 விதைகள் இருக்கும்.

பரவல் :

  • இம்மரம் தீபகற்ப இந்தியாவை தாயகமாக கொண்டது. எனினும் இந்தியா முழுவதிலும் உள்ள வெப்பமண்டல இலையுதிர் காடுகளில் வளரும் மரமாகும்.

வாழிடம் :

தெற்கு வெப்ப மண்டல முள் காடுகளில் மற்றும் இலையுதிர் காடுகளில் காணப்படுகிறது

மண் :

செம்மண், மணற்பாங்கான செம்மண், செம்பொறை மண், மற்றும் கரிசல் மண் ஆகியவற்றில் நன்கு வளரும்.

கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :

300 மீ வரை வளரக்கூடியது.

மலையளவு :

500 – 1900 மி.மீ

வெப்பநிலை :

0 - 45 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.

நிலப்பரப்பு :

வறண்ட நிலப்பகுதி மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.

மரப்பண்பு :

  • அதிக ஒளி விரும்பி, கன்றுகள் உறைபனியை தாங்காது. 
  • நீர்த்தேக்கத்தை தாங்கும் வல்லமை கிடையாது. 

வளரியல்பு :

இலையுதிர் மரமாகும்.

தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்


  • இவை விதைகள், மறுதாம்பு மற்றும் வேர் கிழங்குகள் மூலமாக இனப்பெருக்கமடையக்கூடியது.

 

  • நேரடி விகைள் விதைப்பு மூலமாகவும் மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமாகவும் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.

 

  • விதையானது மார்ச் - மே மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
  • விதைகள் மெல்லியதாக இருப்பதால் எளிதாக காற்றினால் அடித்து செல்லப்படும்எனவே காற்று குறைவாக இருக்கும் சமயத்தில் விதைகள் சேமிக்கப்படுகிறது.
  • சூரிய ஒளியில் விதைகள் உலர்த்தப்படுகிறது.
  • விதைகள் முளைப்புத்திறன் குறைவு என்பதால் 3 மாதங்கள் மட்டுமே விதைகளை சேமித்து வைக்க முடியும்.
  • ஒரு கிலோ விதையில் தேராயமாக 7500 - 10000 விதைகள் இருக்கும்.
  • விதை முளைப்புத்திறன் 70 - 90 சதவிகிதம் ஆகும்.

 

  • தேவையில்லை

 

  • தாய்பாத்தியானது நீர் தேங்காத தன்மை கொண்ட மணல் வகை மண்ணினால் அமைக்கப்பட வேண்டும்.
  • எறும்புகள் மற்றும் பூச்சிகள் தாக்குதலை தவிர்க்க மண்ணுடன் இன்டோக்பில் என்ற வேதிப்பொருள் சேர்க்கப்படுகிறது.
  • தாய்பாத்தியை சற்று மேடான பகுதியில் அமைக்கப்பட வேண்டும்.
  • நேர்த்தி செய்யப்பட்ட விதைகள் தாய்பாத்தியில் விதைக்கப்படுகிறது.
  • விதைக்கப்பட்ட பின் தாய்பாத்தி மீது ஒரு செ.மீ அளவிற்கு மணலை னொண்டு மூட வேண்டும்.
  • பூவாளி கொண்டு நீர் இறைக்க வேண்டும்அதிகப்படியான நீர் இறைப்பு வேர் அழுகள் நோயை உருவாக்கும்.
  • விதையானது 8 – 14 நாட்களில் முளைக்க வைக்க முடியும்.
  • 5 – 10 செ.மீ தண்டு தடிமன் கொண்ட நாற்றுகள் 10 x 20 செ.மீ அளவுடைய பாலித்தீன் பைகளுக்கு மாற்றப்படுகிறது.
  • நாற்றுகளை பாலித்தீன் பைகளுக்கு மாற்றும்பொழுது வேர்கள் அறுந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
  • சதுர மீட்டர் நீளம் கொண்ட தாய்பாத்திக்கு 15 கிராம் விதைகள்நாற்றுகள் உற்பத்தி செய்ய வேண்டும்
  • விதைகளை சாம்பல் கொண்டு அல்லது சுத்திகரிக்கப்பட்ட மணல் கொண்டு விதைப்பது சிறந்ததாகும்.

பெருந்தோட்ட தொழில் நுட்பம் :

  • மழை பருவ காலத்தில் நடவு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
  • குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.
  • குழிகள் வெயிலில் உலர்த்துவதற்காக நடவிற்கு முன்பே எடுக்கப்படுகிறது.
  • ஜுலைஅக்டோபர் மாதகால இடைவெளியில் நடவுபணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
  • தொகுப்பு நடவிற்கு 6 – 10 மாதமான நாற்றுகள் 3 x 3 மீ மற்றும் 5 x 5 மீ இடைவெளியில் நடப்படுகிறது.
  • ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் நீர்பாய்ச்சுதல் மிக அவசியம். நாற்றுகளை கால்நடை மேய்ச்சலிலிருந்து பாதுகாப்பது மிக முக்கிமானதாகும்.

பாராமரிப்பு :

  • பண்ணை முழுவதும் களைகளற்று இருக்க வேண்டும்.

நோய் மற்றும் பூச்சி கட்டுப்பாடு :

  • இலையுண்ணிகளான அடிவா பேப்ரிசெல்லா மற்றும் எலிக்மா நர்சிசஸ் தாக்குதல் அதிகமாக இளம்பருவத்தில் இருக்கும்.
  • பீனாரி மரத்தில் தண்டு துழைப்பானான பாடோசெரா ரூபோமகுலேடா மற்றும் நச்சு நுண்ணுயிரியான செர்கோஸ்போரா கிளாண்டுலோசா மற்றும் ஆல்டர்னேரியா சிற்றினங்களின் தாக்குதல் அதிகமாக காணப்படும்.
  • நாற்றுக்களை வேர் அழுகல் நோயிலிருந்து பாதுகாக்க அதிகப்படியான நீர் காய்ச்சுவதை தவிர்க்க வேண்டும். தேவையான அளவு நீரினை மட்டும் பூவாளி கொண்டு தெளிக்க வேண்டும்.
  • பூச்சிகள் மற்றும் பூஞ்சைகள் தாக்குதலை தவிர்க்க பி.ஹெச்.சி வேதிப்பொருளை தெளிக்க வேண்டும்.
  • அதிகப்படியான இலையுண்ணிகளால் மரத்தின் வளர்ச்சி பாதிக்கப்படும், சில சமயங்களில் இறப்புகூட ஏற்ப்படும். இலையுண்ணி பெருக்கத்தை தவிர்க்க மாலத்தியான் என்ற வேதிப்பொருளை சேர்க்க வேண்டும்.

  • இம்மரம் 5 - 7 வருடங்களில் அறுவடை செய்யப்படுகிறது.

சந்தை மதிப்பு :

  • ஒரு டன் மரம் 7000 – 8000 என்ற விலையில் விற்கப்படுகிறது.

* சந்தையை பொறுத்து விலை மாறுபடுகிறது

 

ஊடுபயிர் சாகுபடி :

  • நெல் பயிரை தவிர மற்ற அனைத்து வேளாண் பயிர்களும், தோட்ட பயிர்களையும் ஊடுபயிராக பயிரிடலாம்.

முக்கிய பயன்கள் :

  • இவை வேகமாக வளரும் தன்மை கொண்டதால் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த தோட்ட பண்ணைகளில் பயிரிடப்படுகிறது.

  • இதன் 70 சதவிகிதத்திற்கும் அதிகமான மரங்கள் தீக்குச்சி தொழிற்சாலைகளுக்கு பணன்படுத்தப்படுகிறது.

    இதன் மரம் கட்டுமரம், படகு தயாரிக்கவும் மற்றும் பெட்டிகள் தயாரிக்கவும் பயன்படுகிறது.

  • இதன் மரம் ஒட்டுப்பலகை தயாரிப்பில் பெரிதும் பயன்படுகிறது.

  • இதன் இலைகள்எரி பட்டுஎன்ற வகை பட்டு தயாரிக்க பயன்படுகிறது.

  • இதன் இலைகள் ஆடுகளக்கு தீவனமாக பயன்படுகிறது.