பின்னூட்டம்
 


படங்கள்




விளக்கம்

தென்னை மரம்


அறிவியல் பெயர் :

கோக்கஸ் நுசிபெரா

பொதுப்பண்பு :

  • இம்மரம் நேரான. கடினமான பெரிய மரப்பகுதியை கொண்டது.
  • இதன் மட்டையானது பல சிறிய இலைகள் ஒட்டக்காணப்படும்.
  • பல மட்டைகள் ஒன்று சேர்ந்து பெரிய குடை போன்ற மேற்பகுதியை கொண்டது.
  • காயானது டுரூப் வகையை சேர்ந்தது. காயானது மூன்று பகுதியை கொண்டது.

பரவல் :

  • இம்மரம் இந்திய - இந்தோனேசிய பகுதிகளை தாயகமாக கொண்டது. கடற்கரை பகுதிகளை கொண்ட அனைத்து நாடுகளிலும் வளரும் தன்மை கொண்டது.

வாழிடம் :

வெப்பமண்டல மற்றும் கடலோர பகுதிகளில் அதிகம் வளரும்.

மண் :

மணல் மற்றும் நல்ல நீர் தேங்காத தன்மை கொண்ட மண்ணில் வளரும் தன்மை கொண்டது.

மண் pH :

4.3 – 8

கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :

520 - 900 மீ வரை வளரக்கூடியது.

மலையளவு :

1000 – 1500 மி.மீ

வெப்பநிலை :

20 - 28 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.

நிலப்பரப்பு :

சமவெளி மற்றும் மிதமான சரிவு நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.

மரப்பண்பு :

  • வறட்சியை தாங்கி வளரக்கூடியது.
  • பனியை தாங்கி வளரக்கூடியது.

வளரியல்பு :

பசுமைமாறா காடுகள்.

தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்


  • இயற்கையில் இனப்பெருக்கமடையும். ஆனால் அதிக நாட்கள் எடுத்துக்கொள்ளும்.

  • நெற்றுகள் கொண்டு நாற்றுகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
  • முதிர்ந்த அதிக மகசூலை தரும் மரத்திலிருந்து நெற்றுகள் சேகரிக்கப்பட்டு நாற்று உற்பத்தி செய்யப்படுகிறது.

  • நெற்றுகளை அதிக நாட்கள் வரை வைத்திருக்கலாம்.
  • நெற்று 30 – 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் நன்கு முளைக்கும் தன்மை கொண்டது.
  • நெற்றினுள் இருக்கும் தேங்காய் பல் மற்றும் தண்ணீர் காய்வதற்கு முன் விதைப்பது சிறந்ததாகும்.

  • 1 – 2 வாரங்கள் வரை தண்ணீரில் ஊர வைக்க வேண்டும்.

நாற்றங்கால் பகுதி :

  • நல்ல நீர் தேங்காத தன்மை கொண்ட பகுதி நாற்றங்காலுக்காக பயன்படுத்தப்படுகிறது.
  • நாற்றங்காலானது நிழல் இல்லாத பகுதிகளாக இருக்க வேண்டும்.

நெற்று விதைப்பு :

  • பெரிய நேரான பாத்தியில் 30 செ.மீ இடைவெளியில் நாற்று விதைக்கப்படுகிறது.
  • நேராகவோ அல்லது கிடைமட்டமாகவோ 20 – 25 செ.மீ ஆழத்தில் விதைக்கலாம்.
  • 5 வரிசையாக நெற்றுகள் விதைக்கப்படுகிறது. வரிசைக்கு 50 நெற்றுகள் என்ற கணக்கில் விதைக்கப்படுகின்றது.

நாற்றங்கால் பராமரிப்பு முறைகள் :

  • தாய்பாத்தியை மூன்று நாட்களுக்கு ஒரு முறை பூவாளி கொண்டு நீர் பாய்ச்ச வேண்டும்.
  • நாற்றங்கால் களைகளற்றதாக இருக்க வேண்டும்.
  • முளைக்கும் இளம் நாற்றுக்கு அவ்வப்போது உரமிட வேண்டும்.
  • நாற்றங்காலில் களைகள் வளர்வதால் விகை;கப்பட்டதிலிருந்து 6 மாதத்தில் கைகளினால் களையெடுக்க வேண்டும்.
  • நாற்றங்காலுக்கு நிழலமைப்பது மிக அவசியமாகும்.
  • நெற்றானது விதைக்கப்பட்டதிலிருந்து 6 – 8 வாரங்களில் முளைக்கத்துவங்குகிறது.
  • 5 மாதங்களான நாற்றுகள் நடவிற்கு பயன்படுத்தப்படுகிறது.
  • விதைக்க்ப்பட்டதிலிருந்து 5 மாதம் வரை முளைக்காத நெற்றுகள் நாற்றங்காலிலிருந்து நீக்கப்படுகிறது.
  • நோய் மற்றும் பூச்சி தாக்குதலின்றி நாற்றங்காலை பராமரிக்க வேண்டும்.

நாற்று தேர்வு :

  • 9 – 12 மாதங்களான நாற்றுகள் நடவிற்கு பயன்படுத்தப்படுகிறது.
  • விரைவில் முளைத்த நாற்றுகள், நல்ல வளர்ச்சியடைந்த நாற்றுகள் மற்றும் விரைவாக இலைகள் பிரிந்த நாற்றுகள் நடவிற்கு பயன்படுத்த வேண்டும்.

நாற்றை நடவிற்கு பிடுங்குதல் :

  • மண்வெட்டி கொண்டு நாற்றுகள் பிரித்தெடுக்கப்படுகின்றது.
  • இலைகளை பிடித்து இழுத்து நாற்றுகளை பிடுங்குதல் கூடாது.
  • 6 இலைகள் வளர்ந்த, 10 செ.மீ நாற்றுச்சுற்றளவு கொண்ட நாற்றுகள் நடவு பணிக்கு பயன்படுத்தப்படுகிறது.

பெருந்தோட்ட தொழில் நுட்பம் :

மரங்களுக்கிடையேயான இடைவெளி :

  • மரங்களுக்கிடையேயான இடைவெளி 7.5 x 7.5 மீ விட்டு நாற்று நடவு செய்வது நல்ல மகசூலை தரும்.
  • வரப்பு நடவிற்கு 20 மீ இடைவெளி பின்பற்றப்படுகிறது.

நாற்று நடவு :

  • குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.
  • குழியினுள் மேல் மண், மணல் மற்றும் எரு கலந்த கலவை இட்டு நாற்று நடவு மேற்கொள்ளப்படுகிறது.
  • நாற்றானது குழியின் நடுவில் இருக்குமாறு வைத்து நடப்படுகிறது.
  • நாற்றை சுற்றியுள்ள மண்ணை நன்கு இறுக பிடித்திருக்குமாறு அழுத்த வேண்டும்.
  • புதிதாக நடப்பட்ட நாற்றை தென்னை அல்லது பனை இலைகளை கொண்டு நிழல் ஏற்படுத்தப்படுகிறது.
  • நாற்றை சுற்றியுள்ள பகுதிகளில் களைகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
  • மட்டைகளை அவ்வப்போது வெட்டிவிட வேண்டும். இவ்வாறு செய்வதனால் மரத்தின் வளர்ச்சி சற்று அதிகமாகும். 

  • பண்ணையானது களைகள் இல்லாமல் இருக்க வேண்டும்.
  • மண் மற்றும் நீர் மேலாண்மை மிக முக்கியமாகும்.

  • 12 மாதங்களான தேங்காய் விதைக்காக 30 – 45 நாட்களில் அறுவடை செய்யப்படுகிறது.

சந்தை மதிப்பு :

  • ஒரு டன் மரம் தோராயமாக 1200 – 1500 ரூபாய் என்ற விலையில் விற்கப்படுகிறது.
  • ஒரு டன் தேங்காய் தோராயமாக 10000 – 15000 ரூபாய் என்ற விலையில் விற்கப்படுகிறது.

* சந்தையை பொறுத்து விலை மாறுபடுகிறது

முக்கிய பயன்கள் :

  • இதன் நெற்று தேங்காய் எண்ணெய் தயாரிக்க பயன்படுகிறது.
  • இளநீர், ஜாம் மற்றும் தேங்காய் தேன் இம்மரத்திலிருந்து கிடைக்கிறது.
  • எண்ணெய் தயாரித்த பின் கிடைக்கும் பிண்ணாக்கு கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுகிறது.
  • இதிலிருந்து கிடைக்கும் நார் கயிறு தயாரிக்கவும், தரை விரிப்புகள் தயாரிக்க மற்றும் இதர பயன்களுக்கும் பயன்படுகிறது.
  • இதன் மரம் கடினமானது. முன் காலத்தில் வீடு கட்ட இம்மரம் பயன்படுத்தப்பட்டது.
  • இம்மரம் மரச்சாமன்கள் தயாரிக்கவும், வீட்டு உபயோக பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது.