பின்னூட்டம்
 


படங்கள்




விளக்கம்

சந்தன மரம்


அறிவியல் பெயர் :

சான்டாலம் ஆல்பம்

பொதுப்பண்பு :

  • சந்தனம் 12 – 13 மீ உயரம் வரை வளரக்கூடிய ஒட்டுண்ணி பசுமைமாறா மரமாகும்.
  • பூக்களானது பழுப்பு கலந்த சாம்பல் நிறமுடையது.
  • இம்மரத்தின் கனியானது டுரூப் வகையை சார்ந்தது. கனியை சுற்றி கனியுறையானது மூடி காணப்படும்.
  • இதன் விதையானது வெளியே தெரியக்கூடியது. எனவே இதனை எளிதாக காய வைத்து பாலித்தீன் பைகளில் சேகரிக்கப்படுகிறது.

பரவல் :

  • இம்மரம் இந்தியாவை தாயகமாக கொண்டது.
  • இந்தியா முழுவதும் இம்மரம் பரவி காணப்பட்டாலும் கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் ஆந்திர பகுதிகளில் பரவலாக காணப்படுகிறது.

வாழிடம் :

வெப்பமண்டல இலையுதிர் காடுகளில் அதிகம் வயர்கிறது.

மண் :

வண்டல் மண் கலந்த செம்மண்ணில் நன்கு வளரும் தன்மையுடையது.

கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :

1200 மீ உயரம் வரை வளரக்கூடியது.

மலையளவு :

800 – 1400 மி.மீ

வெப்பநிலை :

10 -18 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.

மரப்பண்பு :

  • தீ, நிழல் மற்றும் நீர் தேங்கியிருக்கும் நிலம் ஆகியவற்றை தாங்கி வளரும் தன்மையற்றது.
  • ஆனால் வறட்சியை தாங்கி வளரக்கூடியது.

வளரியல்பு :

சிறிய பசுமைமாறா மரமாகும்.

தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்


 

இயற்கை மறு உருவாக்கம்:    

 

  • வேர்கிழங்கு மற்றும் விதைகள் மூலம் நன்கு வளரக்கூடியது.

 

செயற்கை மறு உருவாக்கம்:

 

  • நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலம் வளர்க்கப்பட்டு, ஓம்புயிரி தாவரங்களுடன் சேர்த்து நடப்படுகிறது.

 

இனப்பெருக்கம்:

 

விதை சேகரிப்பு மற்றும் சேமிப்பு:     

 

  • விதையானது ஏப்ரல் - மே மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது. விதையானது கனியானக இருக்கும் பொழுதே கிழே விழும் முன்னர் சேகரிக்கப்படகிறது.
  • விதையுறையை நீக்கி, பின் நிழலில் விதைகள் உலர்த்தப்படப்படுகிறது.
  • ஊலர்த்தப்பட்ட விதைகள் பாலிதீன் பைகளில் சேகரிக்கப்படுகிறது.
  • ஒரு கிலோ விதையில் 6000 விதைகள் இருக்கும்.
  • விதை முளைப்புத்திறன் 60-80 சதவிகிதம் ஆகும்.
  • விதைகளின் முளைப்புத்திறன் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே இருக்கும். 9 மாதம் வரை விதை முளைப்புத்திறன் 80 சதவிகிதம் இருக்கும் வண்ணம் சேமித்து வைக்கலாம்.

 

விதை நேர்த்தி

 

  • விதையானது ஜிப்ரலிக் அமிலத்தில் ஊர வைக்கப்பட்டு நேர்த்தி செய்யப்படுகிறது.

 

நாற்றாங்கால் தொழில் நுட்பம் :

 

  • சந்தன விதைகள் 10 x 1 மீ அளவுள்ள தாய்பாத்தியில் விதைக்கப்படுகிறது.
  • தாய்பாத்தியானது 3:1 என்ற விகிதத்தில் மணல் மற்றும் செம்மண் கொண்டு தயார் செய்யப்படுகிறது. 2.5 கிலோ விதைகள் ஒரு தாய்பாத்திக்கு பயன்படுத்தப்படுகிறது. விதைக்கப்பட்ட பின் நெல் வைக்கோல் கொண்டு தாய்பாத்தியானது மூடப்பட வேண்டும்.
  • விதைகள் முளைக்க துவங்கும் தருவாயில் வைக்கோலை நீக்க வேண்டும்.
  • நாற்றானது 4 – 6 இலைகள் துளிர்ந்த பின் வளர் ஊடகம் அடங்கிய பாலித்தீன் பைக்கு மாற்றப்படுகிறது. நாற்றுடன் துவரை போன்ற பயிறு வகைகள் சேர்த்து நடப்படுகிறது. சுந்தனமரம் ஒரு ஒட்டுண்ணி மரம் என்பதால் இதற்கு ஓம்புயிரி தாவரம் அவசியமாகும். ஓம்புயிரி தாவரத்தை அவ்வப்போது கவாத்து செய்ய வேண்டும்.
  • 2 மாதம் கழித்து மீண்டும் மற்றொரு பைக்கு மாற்ற வேண்டும்.
  • நடவுக்கு முன் நாற்றானது தரம் பிரித்து வைக்கப்படுகிறது.
  • அவ்வப்போது நாற்றிலுள்ள களைகளை நீக்க வேண்டும்.
  • 6 – 8 மாதமான வயதுடைய நாற்றுகள் நடவுக்கு பயன்படுத்தப்படுகிறது.

 

  • Propagated by Nursery raised seedlings supported any leguminous plant.

பெருந்தோட்ட தொழில் நுட்பம் :

  • முதல் தர நாற்றுகள் நடவ பணிக்காக பயன்படுத்தப்படுகிறது.
  • குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.
  • இடைவெளியானது 3 x 3 மீ என இருக்க வேண்டும்.
  • சந்தன மரத்துடன் சேர்த்து ஓம்புயிரி தாவரமும் அதே குழியில் நடப்படுகிறது.
  • பொதுவாh துவரை போன்ற பயிறு வகைகளும், பொண்ணாங்கன்னி மற்றும் அகத்தி கீரை மற்றும் மர வகைகளில் புங்கம், மஞ்சள் கொண்றை மரமும் ஓம்புயிரியாக பயிரிடப்படுகிறது.

  • 50 செ.மீ சுற்றளவில் மண்ணை உழுது மற்றும் களைகளை நீக்கி வைத்திருக்க வேண்டும்.
  • ஓம்புயிரி தாவரத்தை அவ்வப்போது கவாத்து செய்ய வேண்டும்.
  • தீ பாதிப்பு மற்றும் கால்நடைகள் மேய்ச்சலிலிருந்து நாற்றை காதுகாப்பது மிக அவசியமாகும்.
  • மரத்தின் பாதியளவிலிருந்து பக்க கிளைகள் அகற்றுதல் அவசியமாகும்.

  • 25 - 30 வருடங்கள்

சந்தை மதிப்பு :

  • ஒரு கிலோ மென்கட்டை 11000 – 13000 என்ற விலையில் விற்கப்படுகிறது.

* சந்தையை பொறுத்து விலை மாறுபடுகிறது

ஊடுபயிர் சாகுபடி :

  • பயிறு வகை பயிர்களை ஊடுபயிராக இடலாம்.

முக்கிய பயன்கள் :

  • அலங்கார பயன்பாடுகளுக்கு அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
  • மரச்சிற்பய்கள் செய்ய பயன்படுத்தப்படுகிறது.
  • இதன் எண்ணெய் வாசனை திரவிங்கள் தயாரிக்கவும், மருந்து தயாரிக்கவும் பயன்படுகிறது.
  • வெளிர் நிறமுடைய மென்கட்டையானது, அடர் நிறக்கட்டையை காட்டிலும் அதிகளவு எண்ணெயை கொண்டிருக்கும்.
  • இதன் எண்ணெய் ஊதுபத்தி தயரிக்க, அழகு சாதன பொருட்கள் தயாரிக்கவும், சோப்பு தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

விதை à®Žà®£à¯à®£à¯†à®¯à¯:

  • சந்தன à®µà®¿à®¤à¯ˆà®¯à®¿à®²à¯ 50 – 60 % à®Žà®£à¯à®£à¯†à®¯à¯ à®‰à®³à¯à®³à®¤à¯.
  • இதில் 80% à®šà®©à®¾ à®Ÿà®¾à®²à¯à®ªà®¿à®•à¯ à®®à®±à¯à®±à¯à®®à¯ à®’லியிக் à®…மிலம் à®•à¯Šà®£à¯à®Ÿà¯à®³à¯à®³à®¤à¯.
  • விலங்குகளுக்கு à®¤à¯€à®µà®©à®®à®¾à®• à®ªà®¯à®©à¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.

 

-->