பின்னூட்டம்
 


படங்கள்




விளக்கம்

நொச்சி மரம்


அறிவியல் பெயர் :

வைடெக்ஸ் நெகுண்டோ

பொதுப்பண்பு :

  • பெரிய இலையதிர் மரமாகும்.
  • மரப்பட்டையானது சிவப்பு கலந்த சாம்பல் நிறமுடையது.
  • இலைகள் அடர் பச்சை நிறமுடையது.
  • காயானது டுரூப் வகையை சேர்ந்தது மற்றும் இளச்சிவப்பு நிறம் கலந்த கருப்பு நிறமுடையது.

பரவல் :

 

  • இம்மரம் இந்தியா முழுதும் அதிகம் வளர்கின்றது.

 

வாழிடம் :

இலையுதிர் காடுகளில் அதிகம் வளர்கிறது.

மண் :

பரவலாக அனைத்து மண்ணிலும் வளரும் தன்மை கெண்டது.

மண் pH :

5-6

கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :

2000 மீ வரை வளரக்கூடியது.

மலையளவு :

600 – 2000 மி.மீ

வெப்பநிலை :

37 - 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.

நிலப்பரப்பு :

சமவெளி மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.

மரப்பண்பு :

  • இது ஒரு ஒளி விரும்பி மரமாகும்.
  • வறட்சியை தாங்கி வளரக்கூடியது.

வளரியல்பு :

இலையுதிர் மரமாகும்.

தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்


  • சாதகமான சூழ்நிலையில் விதைகள் மூலமாக இனப்பெருக்கமடையக்கூடியது.

  • விதைகள் மூலம் மற்றும் உடல இனப்பெருக்கம் மூலம் நாற்று வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.

  • விதை சேகரிப்பு மற்றும் சேமிப்பு:
  • பழுத்த காயானது ஜுன்ஆகஸ்ட் மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
  • காயின் மேல் தோழானது நீக்கப்படுகிறது.
  • தோழ் நீக்கப்பட்ட காயானது நிழலில் உலர்த்தப்படுகிறது.
  • விதைகள் குறைந்த நாட்களுக்கே முளைப்புத்திறன் கொண்டது.

  • தேவையில்லை.

  • விதைகள்  வளர் இடுபொருட்களான 2:1:1 மற்றும் 1:1:1 என்ற விகிதத்தில் கலக்கப்பட்ட செம்மண், மணல் மற்றும் எரு அடங்கிய பாலித்தீன் பைகளில் நேரடியாக விதைக்கப்படுகிறது.
  • அதிகப்படியான களிமண் இருப்பதை தவிர்க்க வேண்டும்.
  • விதைகள் தரம் பிரிக்கப்பட்டு, பெரிய விதைகள் வளர் இடுபொருட்கள் அடங்கிய பாலித்தீன் பைகளில் பைக்கு 2 விதைகள் வீதம் விதைக்கப்படுகிறது.
  • 2 இலைகள் துளிர்விட்ட பிறகு பைக்கு ஒரு நாற்றுகளை பிடுங்கி மற்றொரு பாலித்தீன் பையில் நடப்படுகிறது.

பெருந்தோட்ட தொழில் நுட்பம் :

  • மழை பருவ காலத்தில் நடவு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
  • நடவு பணிகள் துவங்கப்படுவதற்கு முன் நிலமானது உழப்பட வேண்டும்.
  • குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.
  • பண்ணையில் மரங்களுக்கிடையேயான இடைவெளி 3 x 2 மீ அல்லது 3 x 3 மீ என இருக்க வேண்டும்.

 

  • இம்மரத்தின் நல்ல வளர்ச்சிக்கு அவ்வப்போது களையெடுத்தல் மற்றும் உழுதல் அவசியமாகும்.

 

முக்கிய பயன்கள் :

  • இதன் வேர் பலவேறுபட்ட நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. குறிப்பாக தோல் நோய்கள், சிறுநீரக பாதிப்புகள், ருமாட்டிக் மூட்டுவலி, முதுகு வலி மற்றும் வளைவு புழுக்கள் காதிப்பிற்கு மருந்தாக பயன்படுகிறது.