வெள்ளி வசந்த ராணி மரம்
அறிவியல் பெயர் :
தெபுபியா அர்ஜென்டியா
பொதுப்பண்பு :
- சராசரி அளவà¯à®³à¯à®³ 25 மீ உயரம௠வரை பெரிய இலையதிர௠மரமாகà¯à®®à¯.
- பூகà¯à®•à®³à¯ மஞà¯à®šà®³à¯ நிறமà¯à®Ÿà¯ˆà®¯à®¤à¯. மணி போனà¯à®± வடிவமà¯à®Ÿà¯ˆà®¯à®¤à¯.
- காயானத௠நீணà¯à®Ÿà®¤à¯ மறà¯à®±à¯à®®à¯ அதிக எணà¯à®£à®¿à®•à¯à®•à¯ˆà®¯à®¿à®²à®¾à®© இறக௠போனà¯à®± விதைகளை கொணà¯à®Ÿà®¤à¯.
பரவல் :
- அலங்கார மரமாக இந்தியா முழுதும் அதிகம் வளர்கின்றது.
வாழிடம் :
இலையுதிர் காடுகளில் அதிகம் வளர்கிறது.
மண் :
பரவலாக அனைத்து மண்ணிலும் வளரும் தன்மை கெண்டது.
கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :
1200 மீ வரை வளரக்கூடியது.
மலையளவு :
1250 – 2500 மி.மீ
நிலப்பரப்பு :
சமவெளி மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.
மரப்பண்பு :
- இது ஒரு ஒளி விரும்பி மரமாகும்.
- ஓரளவு வறட்சியை தாங்கி வளரக்கூடியது.
வளரியல்பு :
இலையுதிர் மரமாகும்.
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
- சாகதமான சூழà¯à®¨à®¿à®²à¯ˆà®¯à®¿à®²à¯ விதைகள௠மூலமாக இனபà¯à®ªà¯†à®°à¯à®•à¯à®•à®®à®Ÿà¯ˆà®¯à®•à¯à®•à¯‚டியதà¯.
- விதைகள் மூலம் மற்றும் உடல இனப்பெருக்கம் மூலம் நாற்று வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.
- பழுத்த விதையானது மார்ச் - ஏப்ரல் மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
- காயின் மேல் தோழானது நீக்கப்படுகிறது.
- தோழ் நீக்கப்பட்ட விதையானது நிழலில் உலர்த்தப்படுகிறது.
- ஒரு கிலோ விதையில் 125000 விதைகளிருக்கும்.
- விதைகள் வளர் இடுபொருட்களான 2:1:1 மற்றும் 1:1:1 என்ற விகிதத்தில் கலக்கப்பட்ட செம்மண், மணல் மற்றும் எரு அடங்கிய 13 x 25 செ.மீ அளவுடைய பாலித்தீன் பைகளில் நேரடியாக விதைக்கப்படுகிறது.
- விதைக்கப்பட்டதிலிருந்து ஒரு வாரத்தில் விதைகள் முளைக்க துவங்குகிறது. 3 வாரத்தில் முற்றிலும் முளைத்து விடுகிறது.
- 12 – 15 செ.மீ உயரம் வளர்ந்த நாற்றுகள் கட்டுப்படுத்தப்பட்ட நாற்றய்கால் சூழலிருந்து நிலத்திற்கு மாற்றப்படுகிறது. 45 – 60 செ.மீ உயரம் வளர்ந்த நாற்று நடவிற்கு பயன்படுத்தப்படுகிறது.
பெருந்தோட்ட தொழில் நுட்பம் :
- மழை பருவ காலத்தில் நடவு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
- நடவு பணிக்கு முன்னதாக நடவு செய்யப்படவுள்ள நிலத்தை உழு வேண்டும்.
- குழியின் அளவு 45 செ.மீ3 என இருக்க வேண்டும்.
- பண்ணையில் மரங்களுக்கிடையேயான இடைவெளி 5 x 5 மீ அல்லது 5 x 6 மீ என இருக்க வேண்டும்.
- குழியை மேல் கொண்டு மூட வேண்டும்.
- அலங்கார மரமென்பதால் அவ்வப்போது கவாத்து செய்வது சிறந்ததாகும்.
முக்கிய பயன்கள் :