பின்னூட்டம்
 


படங்கள்




விளக்கம்

மகிழ மரம்


அறிவியல் பெயர் :

மைமூசூப்ஸ் எலஞ்சி

பொதுப்பண்பு :

  • மகிழ மரம் ஒரு பசுமை மாறா மரமாகும்.
  • இம்மரத்தின் கிளைகள் வட்டவடிவில் அர்த்தியாக காணப்படும்.
  • இலைகள் வட்ட வடிவமுடையது மற்றும் அடர் பச்சை நிறமுடையது. இலைகள் கிளைகளில் அடுத்தடுத்து அமைந்திருக்கும்.
  • இலையடிப்பகுதியில் நட்சத்திர வடிவமுடைய வெண்ணிற பூக்களை கொண்டது. பூக்கள் நிறிய நார் போன்ற அமைப்புடன் காணப்படும்.
  • காய்கள் பழுத்தபின் ஆரஞ்சுசிவப்பு நிறமடையது மற்றும் வட்ட வடிவமுடையது.

பரவல் :

  • இம்மரம் இந்தியாவின் பல பகுதிகளில் வளரக்கூடியது.

 

வாழிடம் :

காற்றின் ஒப்புமை ஈரப்பதன் அதிகமாக உள்ள காடுகளில் அதிகம் வளர்கிறது. 600 மீ கடல் மட்ட உயரம் கொண்;ட பகுதிகளில் வளரும் தன்மையுடையது. கடற்கரை பகுதிகள் மற்றும் பாறைகள் நிறைந்த பகுதிகளிலும் வளரும் தன்மையுடையது.

மண் :

நீர் தேங்காத தன்மை கொண்ட அனைத்து மண்ணிலும் நன்கு வளரும் தன்மையுடையது.

மண் pH :

5.5 – 7.5

கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :

600 மீ வரை வளரக்கூடியது.

மலையளவு :

1200 – 2800 மி.மீ

வெப்பநிலை :

16 - 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.

நிலப்பரப்பு :

சமவெளி மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.

மரப்பண்பு :

  • வறட்சியை தாங்கி வளரும் தன்மையுடையது.

வளரியல்பு :

பசுமைமாறா மரம்

தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்


 

  • சாதகமான சூழ்நிலையில் விதைகள் மூலமாக இனப்பெருக்கமடையக்கூடியது.

 

  • ஒட்டு நாற்று உற்பத்தி முறை மூலம் மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமாக வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.

  • பழுத்த காய்கள் பிப்ரவரிமார்ச் மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
  • சேகரிக்கப்பட்ட காய்கள் மேற்தோல் நீக்கப்பட்டு நிழலில் காய வைக்கப்படுகிறது.
  • விதைகளை 9 மாதங்கள் வரை சேமித்து வைக்கலாம்.
  • விதைகளின் விதை முளைப்புத்திறன் 70 – 90 சதிவிகிதமாகும்.

  • தேவையில்லை.

  • விதைகள் வளர் இடுபொருட்கள் நிறப்பப்பட்ட பாலித்தீன் பைகளில் நேரடியாக விதைக்கப்படுகிறது. விதைகள் விதைக்கப்பட்டபின் விதைக்கப்பட்ட பாலித்தீன் பைகள் நிழலில் வைக்கப்படுகிறது.
  • விதைக்கப்பட்டதிலிருந்து 17 நாட்களில் விதைகள் முளைக்கத்துவங்குகிறது.
  • அவ்வப்போது பூவாளி கொண்டு நீர் இறைத்தல் மற்றும் களையெடுத்தல் அவசியமாகும்.
  • 1 வருடமான நாற்றுகள் நடவிற்காக பயன்படுத்தப்படுகிறது.

பெருந்தோட்ட தொழில் நுட்பம் :

  • ஒரு வருடமான நாற்றுகள் நடவிற்கு பயன்படுத்தப்படுகிறது.
  • மழை பருவ காலத்தில் நடவுபணி மேற்கொள்ளப்படுகிறது.
  • குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.
  • இடைவெளியானது 3 x 3 மீ என இருக்க வேண்டும்.

பூச்சி () நோய்கள்:

  • ஒடிந்த கிளைகள், நோய்த்தாக்கப்பட்ட கிளைகள் ஆகியவற்றை கவாத்து செய்ய வேண்டும்.
  • மிதமான வேலைக்கு ரம்பம் () வளையத்தையும், கடினமான வேலைக்கு சங்கிலி வாளையும் பயன்படுத்தலாம்.
  • அடிமரத்திலுள்ள குறுகிய வீக்கப்பகுதிளை தவிர மற்ற கிளைகளின் அங்கங்களை நீக்க வேண்டும்.

 

முக்கிய பயன்கள் :

  • இம்மரம் ஓரளவு கடினமானது மற்றும் எளிதாக அறுக்கக்கூடியது.
  • இம்மரம் கட்டுமான பணிகளுக்கு, உள் அலங்கார பணிகளுக்கு, கதவு, ஜன்னல்கள் தயாரிக்க, வேளாண் உபகரணங்கள் தயாரிக்க, படகு மற்றும் மரச்சமான்கள் தயாரிக்க பயன்படுகிறது.
  • இம்மரம் ஒரு மிகச்சிறந்த எரிபொருளாகும். எனவே விறகு மற்றும் கரி தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.
  • இம்மரம் தரமான ஒட்டுப்பலகைகள் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.
  • இம்மரம் ஒரு சிறந்த எரிபொருளாக பயன்படுகிறது.
  • இம்மரம் அழகிய மணம் கமலக்கூடிய மலர்களை பூக்கவல்லது. இப்பூக்களின் காரணமாக இம்மரம் சாலையோரங்கள் மற்றும் பூங்காக்களில் நட்டு வளர்க்கப்படுகிறது.
  • இம்மரத்தின் அலைகள் மருத்துவ குணம் கொண்டது. குறிப்பாக இவ்விலைகள் தலைவலி, பல்வலி, காயங்களுக்கு மருந்தாக மற்றும் புகை பிடிப்பவர்களுக்கு மூக்கு மற்றும் வாயில் ஏற்படும் தொற்றுகளை குணப்படுத்த பயன்படுகிறது.

  • மரப்பட்டை:

    மரப்பட்டையின் சாறு பூக்களுடன் கலந்து பயன்படுத்தினால் காய்ச்சல், வயிற்றுப்போக்கு, வீக்கம், பல்வலி மற்றும் மேக வேட்டை நோய் ஆகியவற்றை குணமடைச் செய்யும்.

-->