பின்னூட்டம்
 


படங்கள்




விளக்கம்

முள்இலவம் பஞ்சுமரம்


அறிவியல் பெயர் :

பாம்பக்ஸ் சீபா

பொதுப்பண்பு :

  • இவை உயரமான படர்ந்து வளரக்கூடிய கிளையினை உடைய மரங்கள்.  சராசரியாக 25 மீட்டருக்கு மேல் வளரக்கூடியவை. 
  • நீண்ட நேரான மரங்கள் இளம் பருவத்தில் அதிக முட்களை உடையதாக காணப்படுகின்றன. 
  • இவை பொதுவாக காடுகள் மறு உருவாக்கத்தில் பயன்படுத்தப்படுகின்றன.

பரவல் :

வெப்ப மண்டல ஆசியா மற்றும் கினியா

வாழிடம் :

வெப்பமயமான, உலர் ஆற்றுப் பள்ளத்தாக்குகளில் மற்றும் புல்வெளிப் பிரதேசங்களில் காணப்படுகின்றன.

மண் :

சரளை மண் வகை

மண் pH :

5.5 - 7

கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :

1400மீ

மலையளவு :

500 -750மி.மீ

வெப்பநிலை :

37.5 – 50 செல்சியஸ்

நிலப்பரப்பு :

சமவெளிப்பகுதி

வளரியல்பு :

இலையுதிர் மரம்

தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்


வளர்ச்சி :

மிதமான வளர்ச்சி

உயரம் :

25மீ

இயற்கை பெருக்கம்:

 

  • விதைகள்

 

செயற்கை பெருக்கம்:

 

  • நேரடி விதைப்பு

 

பயிர்பெருக்கம்:-

 

  • விதை சேகரிப்பு: காய்ந்த நெற்றிலிருந்து விதைகள் பெறப்படுகின்றது.

 

விதை நேர்த்தி:

 

  • 12 மணி நேரம் விதையானது நீரில் ஊறவைக்கப்படுகிறது.

 

நாற்றாங்கால் தொழில்நுட்பம்:

  • 5X23செ.மீ இடைவெளியில் ஊன்றப்பட்டு ஒரு வருடம் முதல் இரண்டு வருடங்கள் வரை வளர்க்கப்படுகிறது.

 

பெருந்தோட்ட தொழில் நுட்பம் :

நேரடி விதைப்பு முறையில் 7.4மீ X 7.4மீ இடைவெளியிலும் அதிக மழை பெரும் பகுதிகளில் முழு விதைப்பு முறையிலும் நடப்படுகிறது.

நோய்கள் மற்றும் பூச்சிகள்:

  • முதல் இரண்டு வருடங்களுக்கு களையெடுத்தல் மிக அவசியம்.
  • பலவகை லார்வாக்களின் தாக்குதலுக்கு உட்படலாம். 
  • குறிப்பாக டானிகா நெவிபெரனா அதிக ஆபத்தை விளைவிக்கும்

முக்கிய பயன்கள் :

மருத்துவப் பயன்கள்:

  • இதன் மலர்கள் புத்துணர்வூட்டியதாகவும், சரும நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுகின்றன.
  • இளம் வேர்கள் இருமல், சிறுநீரக கோளாறுகள், வயிற்று வலிக்கு மருந்தாக பயன்படுகின்றது.
  • இலைகள் உயர் ரத்த அழுத்தத்திற்கும,; பசியின்னைக்கும் மருந்தாக பயன்படுகின்றன.