பின்னூட்டம்
 


படங்கள்




விளக்கம்

கருவேல மரம்


அறிவியல் பெயர் :

அக்கேசியா நைலோடிகா

பொதுப்பண்பு :

  • இது ஒரு பசுமை மாறா மரமாகும்.
  • இலைகள் பழுப்பு கலந்த பச்சை நிறத்தில் காணப்படும்.
  • மலர்கள் மஞ்சள் நிறம் கொண்டது.
  • நெற்றுகள் நீளமானவை மற்றும் கருப்பு கலந்த சாம்பல் நிறத்தில் காணப்படும்.

பரவல் :

  • இம்மரம் மேற்கு இந்தியாவில் அதிகம் காணப்படுகிறது. மேற்கு இந்தியா இவற்றின் தாயகமாகும்.

  • இவை இந்தியாவின் வெப்பமண்டல பகுதிகளில் பரவலாக காணப்படுகிறது.

வாழிடம் :

வெப்பமண்டல இலையுதிர் காடுகளில் வளரும் மரமாகும்.

மண் :

செம்மண், மணற்பாங்கான செம்மண், இரும்பொறை மண், சரளை மண், களிமண், களிமண்கூடிய அடைநிலம், கடலோர வண்டல் மண் மற்றும் வண்டல் மண் ஆகியவற்றில் நன்கு வளரும்.

கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :

450மீ வரை வளரக்கூடியது.

மலையளவு :

200 – 1270 மி.மீ

வெப்பநிலை :

40 - 48 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.

நிலப்பரப்பு :

சமவெளி நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.

மரப்பண்பு :

  • வறட்சி மற்றும் பனியை தாங்கி வளரக்கூடியது.

  • மறுதாம்பு மூலம் தழைத்து வளரக்கூடியது.

வளரியல்பு :

பசுமை மாறா மரமாகும்.

தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்


வளர்ச்சி :

வேகமாக கொண்டது.

உயரம் :

15 – 18 மீ உயரம் வரை வளரக்கூடியது.

இயற்கை மறு உருவாக்கம்:

  • இவை விதைகள் மூலமாகவும் மற்றும் மறுதாம்பு மூலமாகவும் இனப்பெருக்கம்டையக்கூடியது.
  • விதையானது மழை காலத்தில் முளைக்கக்கூடியது.

செயற்கை மறு உருவாக்கம்

  • நேரடி விகைள் விதைப்பு மூலமாகவும் மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமாகவும் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.

இனப்பெருக்கம்:

விதை சேகரிப்பு மற்றும் சேமிப்பு:

  • இம்மரம் வருடத்திற்கு ஒரு முறை பூத்து காய்க்கவல்லது.
  • நெற்றானது ஏப்ரல் - ஜுன் மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
  • நெற்றிலிருந்து விதைகள் தனியே பிரித்தெடுக்கப்படுகிறது.
  • சூரிய ஒளியில் விதைகள் உலர்த்தப்படுகிறது.
  • விதைகள் சுத்தம் செய்யப்பட்டு பாலித்தீன் பைகளில் சேகரிக்கப்படுகிறது.
  • ஒரு கிலோ விதையில் தேராயமாக 66000 - 11600 விதைகள் இருக்கும்.
  • விதை முளைப்புத்திறன் 50-90 சதவிகிதம் ஆகும்.

விதை நேர்த்தி :

  • கொதிக்கவைக்கப்பட்டு இறக்கப்பட்ட நீரில் 30 நிமிடம் ஊர வைக்க வேண்டும்.
  • குளிர் நீரில் 48 மணி நேரம் ஊர வைக்கப்படுகிறது.

நாற்றாங்கால் தொழில்நுட்பம்:

தாய்பாத்தி நாற்று உற்பத்தி முறை :

  • நன்கு பராமரிக்கப்பட்ட தாய்பாத்தியில் விதைகள் விதைக்கப்படுகிறது.
  • விதையானது பிப்ரவரிமார்ச் மாத கால இடைவெளியில் விதைக்கப்படுகிறது.
  • தாய்பாத்தியானது நீர்தேங்காதவாறு இருக்க மணல் சேர்க்க வேண்டும்.
  • தினமும் பூவாளி கொண்டு நீர் இறைக்கப்படுகிறது.
  • விதையானது 2 – 3 நாட்களில் முளைக்க துவங்குகிறது.
  • 2 – 3 இலைகள் துளிர்ந்த பிறகு நாற்றை தாய்பாத்தியிலிருந்து பாலித்தீன் பைக்கு மாற்றப்படுகிறது.

பாலித்தீன் பைகளில் நேரடி விதைப்பு :

  • 10 x 20 செ.மீ அல்லது 13 x 25 செ.மீ அளவுள்ள பாலித்தீன் பையில் வளர் ஊடகங்களை நிறப்பி, அதில் பைக்கு 2 விதைகள் என விதைக்கப்பட வேண்டும். விதையானது 1.5 செ.மீ ஆழத்தில் விதைக்கப்பட வேண்டும்.
  • ஒரு வாரத்தில் விதைகள் முளைக்க துவங்கி 15 நாட்கள் முடிவில் முற்றிலும் முளைத்துவிடுகிறது.
  • பைக்கு ஒரு நாற்று வீதம் பிடுங்கி மாற்ற நாற்றுகளற்ற பைக்கு மாற்றப்படுகிறது.
  • நாற்றுகளுக்கு தினமும் தண்ணீர் தெளிப்பது அவசியமாகும்.
  • 4 மாதங்களான நாற்றுகள் நடவிற்கு தயாராகிறது.

பெருந்தோட்ட தொழில் நுட்பம் :

பாலித்தீன் பை கன்றுகள்:

  • மழை பருவ காலத்தில் நடவு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
  • குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.
  • குழிகள் வெயிலில் உலர்த்துவதற்காக நடவிற்கு முன்பே எடுக்கப்படுகிறது.
  • இடைவெளியானது 3 x 3 மீ என இருக்க வேண்டும்.              

  • கால்நடைகள் இளம் கருவேளை விரும்பி உண்பதால் நடப்பட்டதிலிருந்து 2 வருடத்திற்கு வேலி அமைத்து பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.
  • வருடத்திற்கு ஒரு முறை களையெடுத்தல் மற்றும் நிலம் உழுதல் அவசியமாகும்.
  • மரப்பண்ணையானது களைகளற்றதாகவும், மழை பெய்தால் நீர் தேங்காத வண்ணமும் இருத்தல் அவசியம்.
  • நீர் பாய்ச்ச ஏதுவாக வாய்க்காலை மேடான பகுதியிலிருந்து பள்ளமான பகுதி நோக்கி அமைக்க வேண்டும்.

  • எரிபெருளுக்காக 10 வருடங்களில் அறுவடை செய்யப்படுகிறது.

சந்தை மதிப்பு :

  • இம்மரம் தோராயமாக 3600 - 4000 ரூபாய் என்ற விலைக்கு விற்க்கப்படுகிறது

* சந்தையை பொறுத்து விலை மாறுபடுகிறது

 

முக்கிய பயன்கள் :

  • இதன் மரம் கைவினை பொருட்கள் தயாரிக்கவும், வேளாண் உபகரணங்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது.
  • இதன் கட்டை நன்கு எரியக்கூடியது. எனவே அனல்மின் நிலையங்களில் மின்சாரம் தயாரிக்க பயன்படுகிறது.
  • இதன் இலை புரோட்டீன் நிறைந்தது என்பதால் கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுகிறது.
  • இம்மரத்திலிருந்து எடுக்கப்படும் பசையானது பெயின்ட் தயாரிக்க, காலிகோ பெயின்ட் தயாரிக்க மற்றும் சாயம் தயாரிக்க பயன்படுகிறது.

  • மரமானது கடினமான மற்றும் கட்டுறுதியானது.
  • வேளாண்கருவிகள், இயந்திர கைப்பிடிகள், வீட்டுப்பலகைகள் , எண்ணெய் , கரும்பு பிழிப்பான், படகு மற்றும் சக்கரம் செய்யப்படுகிறது

-->