பின்னூட்டம்
 


படங்கள்




விளக்கம்

பனை மரம்


அறிவியல் பெயர் :

போராசஸ் பிளாபெல்லிபெர்

பொதுப்பண்பு :

  • 30 மீ உயரம் வரை வளரக்கூடிய நேரான மரமாகும்.
  • இதன் இலை மின்விசிறி இறக்கை போன்றது. அளமையில் பச்சை நிறமாகவும் காய்ந்த பின் பழுப்பு கலந்த சாம்பல் நிறமுடையது.
  • இதன் சிறிய பூக்கள் ஒரு குழுமமாக அமைந்திருக்கும்.
  • மூன்று அறைகளை கொண்ட காய் வட்ட வடிவமுடையது.

பரவல் :

  • இம்மரம் இந்தியாவிற்கு அறிமுகம் செய்யப்பட்ட மரமாகும். ஆனால் இந்தியா முழுவதும் அதிகமாக வளர்க்கப்படுகிறது.

வாழிடம் :

இலையுதிர் காடுகளில் அதிகம் வளர்கிறது.

மண் :

ஆழமான, வளமான செம்மண் மற்றும் மணல் கலந்த மண்ணில் நன்கு வளரும். குறைந்தளவு மழையளவுள்ள வறண்ட பகுதிகளில் நன்கு வளரும் தன்மையுடையது.

மண் pH :

6.7-6.9

கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :

500 மீ வரை வளரக்கூடியது.

மலையளவு :

420 – 1000 மி.மீ

வெப்பநிலை :

30 - 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.

நிலப்பரப்பு :

சமவெளி நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.

மரப்பண்பு :

  • வறட்சியை தாங்கி வளரும் தன்மையுடையது.

வளரியல்பு :

பசுமை மாறா மரமாகும்.

தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்


  • சாதகமான சூழ்நிலையில் விதைகள் மூலமாக இனப்பெருக்கமடையக்கூடியது.

  • நேரடி விகைள் விதைப்பு மூலமாகவும் மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமாகவும் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.

  • பனை விதைகள் நிழலில் சேமித்து வைக்க வேண்டும். இருப்பினும் சிறிது காலத்தில் முளைக்கதுவங்கிவிடும் தன்மையுடையது.
  • விதை முளைப்புத்திறன் 70 – 75 சதவிகிதமாகும்.

  • விதையானது விதைக்க 2 மீ அகலமும், 60 செ.மீ ஆழமும் கொண்ட செங்கல் கான்கிரீட் கொண்ட நாற்றங்கால் அமைக்கப்பட வேண்டும்.
  • விதையானது 1 மீ அகலமாகம், 60 ஆழமாகவும் வளரும் தன்மையுடையது.
  • விதைகள் 10 மீ இடைவெளியில் விதைக்கப்பட வேண்டும்.
  • ஒரு வருடமான நாற்றுகள் தாய்பாத்தியிலிருந்து பாலித்தீன் பைக்கு மாற்றப்படுகிறது.
  • வேர்கள் நன்கு வளர்ந்தபின் நடவுபணிக்கு பயன்படுத்தப்படுகிறது.

பெருந்தோட்ட தொழில் நுட்பம் :

  • நேரடி விதைப்பு முறையில் குழிக்கு (20 செ.மீ3) 3 – 4 விதைகள் என 10 மீ இடைவெளியில் விதைக்கப்படுகிறது.
  • விதைக்கப்பட்டபின் நாற்றானது மணல் மற்றும் மேல் மண் கொண்டு மூடப்படுகிறது.
  • குழியானது காய்ந்த இலைகளை கொண்டு மூடப்பட வேண்டும்.
  • மழை பருவ காலத்தில் நடவு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
  • விதைக்கப்பட்டதிலிருந்து 3 வாரங்களில் விதைகள் முளைக்க துவங்குகிறது.
  • இடைவெளியானது 3 x 3 மீ என இருக்க வேண்டும். இவ்வாறு விதைக்கப்படும்பொழுது ஒரு ஹெக்டருக்கு 1110 நாற்றுகள் நட முடியும்.

  • நடப்பட்ட சில வருடங்கள் உழுதல், வட்டபாத்தி அமைத்தல் அவசியமாகும்.
  • நடப்பட்ட நாற்றை சுற்றி மண் அனைப்பது இன்றியமையாததாகும்.
  • மழை பருவ காலத்திற்கு முன் மண் அனைத்து வட்டப்பாத்தியமைக்க வேண்டும்.
  • இவ்வாறு வட்டப்பாத்தி அமைப்பதால் மழை பருவ காலங்களில் மழை நீரை சேமித்து வைக்க முடியும்.

  • முழு அளவுள்ள காற்றாடி போன்ற இலை 2 வயதான பின் தேன்றும்.
    12 – 18 மீ (13 – 15 வருடம்) உயரம் வளர்ந்த பின் பூக்கத்துவங்குகிறது.
  • இம்மரங்கள் பதனீர் உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது.
  • பிப்ரவரி – மே மாத கால இடைவெளியில் 100 – 200 லிட்டர் பதனீரை 4 மாத கால இடைவெளியில் பெறலாம்.
  • மரத்திற்கு மரம் பதனீர் மற்றும் நுங்கு மகசூல் மாறுபடுகிறது.

முக்கிய பயன்கள் :

பயன்பாடுகள்:

  • பதநீர், நுங்கு மற்றும் பனம்பழம் உண்ணலாம்.
  • பனங்கிழங்கு சீம்பு, குறுத்து உண்ண பயன்படுகிறது.
  • இலைகள் வீட்டுக் கூரையாகவும், கூடையாகவும் மற்றும் பாய்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது.

நார்:

  • கயிறு தரிக்க பயன்படுகிறது.