பின்னூட்டம்
 


படங்கள்




விளக்கம்

வருக மஞ்சள், மந்திர வஞ்சி


அறிவியல் பெயர் :

பிக்சா ஒரலான

பொதுப்பண்பு :

  • வேகமாக வளரக்கூடிய சிறிய இலையுதிர் மரமாகும்.
  • இம்மரம் 2 – 8 மீ உயரம் வரை வளரக்கூடியது.

பரவல் :

  • வெப்பமண்டல காடுகளிலும் மற்றும் இலையுதிர் காடுகளிலும் வளரும் தன்மை கொண்டது.

வாழிடம் :

நல்ல நீர் தேங்காத தன்மை கொண்ட மண்ணில் நன்கு வளரக்கூணயது. காரதன்மை கொண்ட மண்ணில் வளரும்.

மண் :

வடிகால் வசதியுடைய அனைத்து மண் வகைகளிலும் வளரக்கூடியது.

கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :

2000மீ உயரம் வரை வளரக்கூயது.

மலையளவு :

1250 – 2000 மி.மீ

வெப்பநிலை :

20 -26 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.

நிலப்பரப்பு :

சமவெளி மற்றும் சரிவான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.

மரப்பண்பு :

  • பனியை தாங்கி வளராது. ஆனால் சிறிது வளர்ச்சியை தாங்கி வளரும் தன்மை கொண்டது.

வளரியல்பு :

பசுமைமாறா மரம்.

தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்


  • சாதகமான சூழ்நிலையிருப்பின் விதைகள் மூலம் இனப்பெருக்கமடைகிறது.

 

  • நாற்றங்கால் நாற்று வளர்ப்பு மற்றும் உடல இனப்பெருக்கம் முறை மூலம் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.

 

  • விதையானது நேரடியாக மரத்திலிருந்து சேகரிக்கப்படுகிறதுகாய வைக்கப்பட்ட விதையை காட்டிலும் புதிதாக சேகரிக்கப்பட்ட விதைகள் நன்கு வளரக்கூடியது.
  • விதைகள் விதைக்கப்பட்டதிலிருந்து 7 – 10 நாட்களில் முளைக்கத்துவங்குகிறது.

 

  • குளிர் நீரில் 24 மணி நேரம் ஊர வைக்கப்படுகிறது.

 

  • ஏப்ரல் - மே மாதயிடைவெளியில் நாற்றுகள் உற்பத்தி செய்வது சிறந்ததாகும்.
  • நாற்றானது விதைகள் மூலமாகவும் மற்றும் உடல இனப்பெருக்கம் மூலமாகவும் உற்பத்தி செய்யப்படுகிறது.
  • தாய்பாத்திக்கு மேலும் சத்துக்களை அளிக்க 2:1:1 என்ற விகிதத்தில் கலக்கப்பட்ட செம்மண்மணல் மற்றும் எரு சேர்க்கப்படுகிறது.
  • விதைக்கப்பட்டதிலிருந்து 8 – 10 நாட்களில் விதைகள் முளைக்க துவங்குகிறது.
  • நாற்றுகள் 20 செ.மீ உயரம் வளர்ந்த பிறகு வளர் இடுபொருட்கள் அடங்கிய பாலித்தீன் பைக்கு மாற்றப்படுகிறது.

பெருந்தோட்ட தொழில் நுட்பம் :

  • நாற்றானது மழை பருவ காலத்தில் நடப்படுகிறது.
  • குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.
  • இடைவெளியானது 4.5 x 4.5 மீ என இருக்க வேண்டும்.
  • நடவு செய்யப்படவுள்ள நிலமானது மழை பொழிவிற்கு முன் செம்மண் மற்றும் எரு கொண்ட கலவை கொண்டு உழப்படுகிறது.
  • ஒரு வருடமான நாற்றுகள் நடவிற்காக பயன்படுத்தப்படுகிறது.

  • நாற்று நடப்பட்டவுடன் நீர்பாய்ச்சுவது அவசியமாகும்.
  • தொடச்சியான களையெடுத்தல் மற்றும் நீர் பாய்ச்சுதல் நாற்று நன்கு வளர துணை புரிகிறது.
  • பக்க கிளைகள் அகற்றுதல் அவசியமாகும்.

  • 8 - 10 வருடங்கள்

முக்கிய பயன்கள் :

  • இதன் விதைகள் இயற்கை சாயங்கள் தயாரிக்க பயன்படுகிறது.
  • வதைகள் பெயின்ட் தயாரிக்கவும் மற்றும் பட்டிற்கு சாயம் பூசவும் பயன்படுத்தப்படுகிறது.
  • அழகு சாதன பொருட்கள் தயாரிக்க இதன் சாயம் பயன்படுத்தப்படுகிறது.