பின்னூட்டம்
 


படங்கள்




விளக்கம்

நோனி மரம்


அறிவியல் பெயர் :

மொரின்டா சிட்ரிபோலியா

பொதுப்பண்பு :

  • 9 மீ உயரம் வரை வளரக்கூடிய புதர் போன்ற மரமாகும்.
  • இதன் இலைகள் பெரியது, அடர் பச்சை நிறமுடையது, பளபளப்பானது மற்றும் வெளியே தெரியக்கூடிய அளவுள்ள நரம்பை கொண்டது.
  • வருடம் முழுவதும் பூக்கும் மற்றும் காய்க்கும் தன்மை கொண்டது.
  • பூக்கள் சிறியது மற்றும் வெண்மையானது.
  • எண்ணற்ற காய்களை கொண்டது. காய்கள் பழுக்கும்பொழுது கார மணமுடையது.
  • காய்கள் வட்ட வடிவமுடையது. காய் பருவத்தில் மஞ்சள் நிறமாகவும், கனிந்தபின் வெண்ணிறமாகவும் மாறுகிறது.
  • காய்கள் எண்ணற்ற விதைகளை கொண்டது.

பரவல் :

  • இம்மரம் இந்தியா முழுவதும் பரவிக்காணப்படுகிறது.

வாழிடம் :

பசுமை மாறா காடுகளில் அதிகம் வளர்கிறது.

மண் :

இம்மரம் அனைத்து மண்ணிலும், பலவேறுபட்ட சூழ்நிலையிலும் வளரும் தன்மை கொண்டது. இம்மரம் அதிக வெப்பநிலை கொண்ட மண்ணிலும் வளரும் தன்மை கொண்டது. இம்மரம் நீர் தேங்கியிருக்கும் மண்ணில் வளரும் தன்மையற்றது. இம்மரம் நீர் தேங்காத தன்மை கொண்ட மண்ணில் நன்கு வளரும்.

மண் pH :

5 – 6.5

கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :

1500 மீ வரை வளரக்கூடியது.

மலையளவு :

250 – 4000 மி.மீ

வெப்பநிலை :

20 - 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.

நிலப்பரப்பு :

சமவெளி நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.

மரப்பண்பு :

  • நன்கு வளர்ந்தபின் நிழல் மற்றும் ஒளியை தாங்கி வளரும் தன்மையுடையது.

வளரியல்பு :

பசுமை மாறா மரமாகும்

தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்


  • சாதகமான சூழ்நிலையில் விதைகள் மூலமாக இனப்பெருக்கமடையக்கூடியது.

  • நேரடி விகைள் விதைப்பு மூலமாகவும் மற்றும் ஒட்டு நாற்று வளர்ப்பு முறை மூலமாகவும் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.

  • பகுதி பழுத்த காய்கள் சேகரிக்கப்படுகிறது.
  • காய்களிலிருந்து விதைகள் தனியெ பிரித்தெடுக்கப்படுகிறது.
    சேகரிக்கப்பட்ட விதைகள் நிழலில் காய வைக்கப்படுகிறது.
  • காய வைக்கப்பட்ட விதைகள் காற்று புகா வண்ணம் கொள்கலனில் சேகரிக்கப்படுகிறது.
  • ஒரு கிலோ விதையில் 35000 - 45000 விதைகளிருக்கும்.
  • புதிதாக சேகரிக்கப்பட்ட விதைகளின் விதை முளைப்புத்திறன் 85 – 90 சதிவிகிதமாகும்.

  • தேவையில்லை.

  • விதைகள் தாய்பாத்தியில் நேரடியாக விதைக்கப்படுகிறது. இவ்வகை விதைகளுக்கு மேட்டுப்பாத்தி ஏற்றதாகும்.
  • 2 இலைகள் துளிர்விட்டபின் நாற்றுகள் வளர் இடுபொருட்கள் நிறப்பப்பட்ட பாலித்தீன் பைக்கு மாற்றப்படுகிறது.
  • விதைக்கப்பட்டதிலிருந்து 10 நாட்களில் விதைகள் முளைக்கத்துவங்குகிறது.
  • 4 – 5 மாதங்களான நாற்றுகள் அல்லது 60 செ.மீ உயரம் வளர்ந்த நாற்றுகள் நடவிற்கு ஏற்றதாகும்.

பெருந்தோட்ட தொழில் நுட்பம் :

  • குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.
    இடைவெளியானது 3.5 x 3.5 மீ என இருக்க வேண்டும்.
    இவ்விடைவெளியில் நடப்படும்பொழுது ஒரு ஏக்கருக்கு 290 நாற்றுகளை நடலாம்.

  • 3 வருடமான நாற்றுகளின் பக்க கிளைகளை நீக்க வேண்டும் அல்லது முதல் முறை கனிந்த பிறகு பக்க கிளைகளை நீக்க வேண்டும்.
  • செங்குத்தாக வளர்ந்த தண்டின் நுனிப்பகுதியை நீக்க வேண்டும். இவ்வாறு செங்குத்து மையத்தண்டின் நுனியை நீக்குவதன் மூலம் காய்களின் மகசூல் சற்று அதிகமாக இருக்கும்.
  • இவ்வாறு கிளைகளை நீக்குவதன் மூலம் பூச்சி மற்றும் நோய் தாக்குதலை குறைக்கலாம்.

  • நடப்பட்டதிலிருந்து 3 வருடங்களில் காய்க்க துவங்குகிறது. 5 வருட்களிலிருந்து வருடம்தோரும் அதிக மககசூலை தரவல்லது.

சந்தை மதிப்பு :

  • ஒரு கிலோ காயானது 15 - 20 ரூபாய் என்ற விலைக்கு விற்க்கப்படுகிறது.

முக்கிய பயன்கள் :

  • இதன் காய் மருந்தாக பயன்படுகிறது.