பின்னூட்டம்
 


படங்கள்




விளக்கம்

பேரிக்காய்


அறிவியல் பெயர் :

பைரஸ் பம்யூனிஸ்

பொதுப்பண்பு :

  • சராசரி அளவுடைய சிறிய இலையுதிர் மரமாகும்.
  • மரப்பட்டையானது வெளிர் சாம்பல் நிறமுடையது.
  • மலர்கள் எதிரெதிரே அமைந்திருக்கும். பளபளக்கும் பச்சை நிறமுடையது.

பரவல் :

  • வெப்பமண்டல பகுதிகளில் வளரும் மரமாகும்.

வாழிடம் :

நல்ல நீர் தேங்காத அதிக வளம் கொண்ட செம்பொறை மண்ணில் நன்கு வளரும்.

மண் :

மணற்பாங்கான களிமண்

மண் pH :

6.0 – 6.8

கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :

600 - 2400 மீ வரை வளரக்கூடியது.

மலையளவு :

1200 மி.மீ வரை மழையளவுள்ள பகுதிகளில் வளரும்.

வெப்பநிலை :

20 – 39 செல்சியஸ்

நிலப்பரப்பு :

சமவெளி மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.

மரப்பண்பு :

  • பனியை தாங்கி வளரக்கூடியது.

வளரியல்பு :

இலையுதிர் மரமாகும்.

தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்


 

  • இயற்கை முறை இனப்பெருக்கம் போதுமானதாக இருப்பதில்லை.

 

  • உடல இனப்பெருக்கம் மூலம் நாற்றங்காலில் நாற்று வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.

  • விதைகள் காயிலிருந்து தனியே பிரித்தெடுக்கப்படுகிறது.
  • சிறிது சிறிதாக விதைகளை பிரித்தெடுக்க வேண்டும்.
  • ஒவ்வொரு காயும் 10 கரு நிற விதைகளை கொண்டது.
  • ஒரு கிலோ விதையில் 22000 விதைகளிருக்கும்.

  • தேவையில்லை

  • விதைகள் தாய்பாத்தியில் நேரடியாக தூவப்படுகிறது.
  • தாய்பாத்தி தினமும் பூவாளி கொண்டு நீர் தெளிக்கப்படுகிறது.
  • 2 இலைகள் துளிர்நத பின் நாற்றானது வளர் இடுபொருட்கள் அடங்கிய பாலித்தீன் பைக்கு மாற்றப்படுகிறது.

பெருந்தோட்ட தொழில் நுட்பம் :

  • 25 அடி இடைவெளியில் மரங்கள் பொதுவாக நடப்படுகிறது.
  • இவ்விடைவெளியில் நடப்பட்டால் ஒரு ஹெக்டருக்கு 70 மரங்கள் நட முடியும்.
  • இம்முறையில் நூற்றுக்கனக்கான மரங்கள் நடப்படுகிறது.

 

பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு:

 

பூச்சி மற்றும் நோய்கள்:

  • ஆழமாக நடும் நுனி அழுகல் நோய் வரும்.
  • இளங்கன்றுகள் சாம்பல் நோய், மற்றும் வேர் அழுகல் நோயிற்கு பாதிக்கப்படும்.
  • பூக்கும் காலத்தில் தீ கருகல் நோயால் பாதிக்கப்படும்.

 

கவாத்து செய்தல் :

  • காய்க்கும் மரங்களுக்கும் பழங்கள் அறுவடை செய்த பின் ஒவ்வொரு வருடமும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் கவாத்து செய்தல் மிகவும் அவசியம்.
  • ஒரு வருடம் ஆன மரத்தினை 1 – 1.2 மீட்டர் உயரமும் அனைத்து கிளைகளையும் வெட்டி கவாத்து செய்யலாம்.

கலைதல்:

 

  • ஒரு கொத்தில் ஒரு பழத்தினை விட்டு இருமுறை கலைத்தல் வேண்டும். அறுவடைக்கு 30 நாட்கள் முன் கலைக்கும் போது நல்ல அளவுடைய பழத்தினை பெறலாம்.
  • 200 – 400 பழங்கள் ஒரு மரத்திற்கு விட வேண்டும்.

 

  • 8 - 10 வருடங்களில் அறுவடை செய்யப்படுகிறது.

சந்தை மதிப்பு :

  • ஒரு டன் மரம் 12000 – 15000 ரூபாய் என்ற விலையில் விற்கப்படுகிறது.

* சந்தையை பொறுத்து விலை மாறுபடுகிறது

 

முக்கிய பயன்கள் :

  • இதன் கனிகள் உணவாக பயன்படுகிறது. பழுக்கூழ் தயாரிக்க மற்றும் ஜாம் தயாரிக்க பயன்படுகிறது.
  • இதன் மரம் சாம்பல் கலந்த சிவப்பு நிறமுடையது. மரச்சாமான்கள் தயாரிக்கவும் இதன் மரம் பயன்படுகிறது.

ஜரோப்பா மதுபானம்பேரிபேரியிலிருந்து தயாரிக்கப்படுகிறது.

-->