பின்னூட்டம்
 


படங்கள்




விளக்கம்

தேன் பழ மரம்


அறிவியல் பெயர் :

முன்டன்ஜியா காலபுரா

பொதுப்பண்பு :

  • 25 – 40 அடி உயரம் வரை வளரக்கூடிய அகன்ற கிளைகளையுடைய மரமாகும். இது ஒரு அதிவேகமாக வளரக்கூடிய மரமாகும்.
  • இலைகள் பசுமையானது, அடுத்தடுத்து அமைந்தது, நீள்;வட்ட வடிவமுடையது. இலைகள் அடர் பச்சை நிறமுடையது. இலைகளின்;
  • மேல்பகுதியில் சிறிய நார் போன்று காணப்படும், அடிப்பகுதியில் சாம்பல் நிறமுடைய நார்கள் காணப்படும்.
  • பூக்கள் தனித்தனியாக காணப்படும் மற்றும் வெள்ளை நிறமுடையது.
  • காய்கள் வட்ட வடிவமுடையது. காய் பருவத்தில் பச்சை நிறமாகவும்
  • கனிந்தபின் சிவப்பு அல்லது மஞ்சள் நிறமாகவும் மாற்றமடைகிறது.
  • விதைகள் மஞ்சள் நிறமுடையது மற்றும் சிறியது.

பரவல் :

  • இம்மரம் மேற்கு தொடர்ச்சி மலைகளில் பரவிக்காணப்படுகிறது.

வாழிடம் :

வெப்பமண்டல காடுகளில் அதிகம் வளர்கிறது.

மண் :

இம்மரம் அனைத்து மண்ணிலும் நன்கு வளரும் தன்மை கொண்டது.

மண் pH :

5.5 - 6.5

கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :

1400 - 1600 மீ வரை வளரக்கூடியது.

மலையளவு :

1400 – 2000 மி.மீ

வெப்பநிலை :

20 - 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.

நிலப்பரப்பு :

சமவெளி மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.

மரப்பண்பு :

  • வறட்சியை தாங்கி வளரும் தன்மையுடையது.
  • உப்பு நிலங்களில் தாங்கி வளரும் தன்மையற்றது.

வளரியல்பு :

பசுமை மாறா மரமாகும்

தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்


  • சாதகமான சூழ்நிலையில் விதைகள் மூலமாக இனப்பெருக்கமடையக்கூடியது.

  • நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமாக வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.

  • பழுத்த காய்கள் சேகரிக்கப்படுகிறது.
  • காய்களிலிருந்து விதைகள் தனியே பிரித்தெடுக்கப்படுகிறது.
  • பிரித்தெடுக்கப்பட்ட விதைகள் நிழலில் காய வைக்கப்படுகிறது.
  • காய வைக்கப்பட்ட விதைகள் பாலித்தீன் பைகளில் சேகரித்து வைக்கப்படுகிறது.
  • ஒரு கிலோ விதையில் 3500 - 4000 விதைகளிருக்கும்.
  • புதிதாக சேகரிக்கப்பட்ட விதைகளின் விதை முளைப்புத்திறன் 85 – 90 சதிவிகிதமாகும்.

  • தேவையில்லை.

  • விதைகள் தாய்பாத்தியில் நேரடியாக விதைக்கப்படுகிறது. இவ்வகை விதைகளுக்கு மேட்டுப்பாத்தி ஏற்றதாகும்.
  • 2 இலைகள் துளிர்விட்டபின் நாற்றுகள் வளர் இடுபொருட்கள் நிறப்பப்பட்ட பாலித்தீன் பைக்கு மாற்றப்படுகிறது.
  • விதைக்கப்பட்டதிலிருந்து 10 நாட்களில் விதைகள் முளைக்கத்துவங்குகிறது.
  • 4 – 5 மாதங்களான நாற்றுகள் அல்லது 60 செ.மீ உயரம் வளர்ந்த நாற்றுகள் நடவிற்கு ஏற்றதாகும்.

பெருந்தோட்ட தொழில் நுட்பம் :

  • குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.
  • இடைவெளியானது 3.5 x 3.5 மீ என இருக்க வேண்டும்.
  • இவ்விடைவெளியில் நடப்படும்பொழுது ஒரு ஏக்கருக்கு 290 நாற்றுகளை நடலாம்.

  • 3 வருடமான நாற்றுகளின் பக்க கிளைகளை நீக்க வேண்டும் அல்லது
  • முதல் முறை கனிந்த பிறகு பக்க கிளைகளை நீக்க வேண்டும்.
  • செங்குத்தாக வளர்ந்த தண்டின் நுனிப்பகுதியை நீக்க வேண்டும். இவ்வாறு
  • செங்குத்து மையத்தண்டின் நுனியை நீக்குவதன் மூலம் காய்களின் மகசூல் சற்று அதிகமாக இருக்கும்.
  • இவ்வாறு கிளைகளை நீக்குவதன் மூலம் பூச்சி மற்றும் நோய் தாக்குதலை குறைக்கலாம்.

  • 2 – 4 வருடங்கள்

முக்கிய பயன்கள் :

  • இதன் காய் உண்ணப்பயன்படுகிறது.
  • இப்பழம் சமைத்து ஜாம் தயாரிக்க பயன்படுகிறது.
  • இதன் காய்ந்த இலைகள் தேயிலைக்கு பதிலாக தேனீரில் பயன்படுத்தப்படுகிறது.
  • இதன் மரம் உள்கட்டுமான பயன்பாட்டிற்கும், சிறிய அட்டைபெட்டிகள் தயாரிக்கவும் மற்றும் தச்சு வேலைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.

  • மரப்பட்டைகளை பயன்படுத்தி சொரசொரப்பான நூல்களை தயாரிக்கலாம்.  இவை கயிறு தயாரிக்க பயன்படுகிறது. 
  • கூடை பின்னவும் பயன்படுகிறது. 
  • காகிதம் தயாரிக்க பிரேசலில் பயன்படுகிறது. 
  • மென்கட்டை மற்றும் வன்கட்டை (சிவப்பு கலந்த பழுப்பு).

 

-->