பின்னூட்டம்
 


படங்கள்




விளக்கம்

வில்வம்


அறிவியல் பெயர் :

ஏகில் மார்மிலஸ்

பொதுப்பண்பு :

  • வில்வம் ஒரு மெதுவாக வளரக்கூடிய மிதமான அளவுடைய மரமாகும்.
  • மரப்பட்டையானது சாம்பல் நிறமுடையது.
  • இலைகள் அடர் பச்சை நிறமுடையது.
  • பூக்கள் 1.5 – 2 செ.மீ அளவுடையது மற்றும் மஞ்சள் நிறமுடையது. மணம் கமலக்கூடியது.
  • காயானது கடினமான ஓடுடையது.
  • காய் ஓடானது பச்சை நிறமாகவும் கனிந்த பிறகு மஞ்சள் நிறமாக மாற்றமடைகிறது.
  • கனியானது 8 – 15 அறைகளுடையது. ஒவ்வொரு பகுதியினுள்ளும் 6 – 10 விதைகளை கொண்ட மஞ்சள் நிற கூழானது நிரம்பியிருக்கும்.

பரவல் :

  • இந்தியவை தாயகமாகக் கொண்டது. இந்தியா முழுதும் பரவிக்காண்ப்படுகிறது.

வாழிடம் :

இலையுதிர் காடுகளில் அதிகம் வளர்கின்றது.

மண் :

A well- drained, sandy loam soil is ideal. It can thrive even on poor, clay and stony soils.

மண் pH :

5-8

கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :

1200 மீ வரை வளரக்கூடியது.

மலையளவு :

570 – 2000 மி.மீ

வெப்பநிலை :

48 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.

நிலப்பரப்பு :

சமவெளி மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.

மரப்பண்பு :

  • வறட்சியை தாங்கி வளரக்கூடிய தன்மையுடையது.

வளரியல்பு :

இலையுதிர் மரமாகும்.

தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்


  • விதைகள் லுலம் இயற்கையாக நடைபெறும் இனப்பெருக்கம் போதுமான அளவு வெற்றியடைவதில்லை.

  • உடல இனப்பெருக்கம் முலம் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலம் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.

  • இம்மர விதைகள் விதையுறக்கம் கொண்டது.
  • புதிதாக சேகரிக்கப்பட்ட விதைகள் தாய்பாத்தியில் சில நாட்களிலேயே விதைக்கப்படுகிறது.
  • தாய்பாத்தியானது நல்ல எரு மற்றும் மணல் கொண்டு உரமூட்டப்படுகிறது.
  • விதைகள் 3 வாரங்களில் முளைத்துவிடும்.

  • தேவையில்லை

  • நாற்றுகள் அதன் தாய்மரத்தை பேன்று இருப்பதில்லை. தாயை காட்டிலும் சற்று மாற்றங்கள் காணப்படும்.
  • வேர்கள் மூலம் நாற்று உற்பத்தி செய்வது சிறந்ததாகும்.
  • பக்க மொட்டுகளை கொண்டு உடல இனப்பெருக்கம் மூலம் நாற்றுகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இம்முறை 90 சதவிகிதம் வெற்றியை தரக்கூடியது. ஜுன் - ஜுலை மாதம் இம்முறை உடல இனப்பெருக்கத்திற்கு ஏற்றதாகும்.
  • கட்டுசெடி வளர்பபு மூலமும் நாற்றுகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
  • 7 வாரங்கள் கழித்து நாற்றுகள் நாற்றங்காலிலிருந்து பிடுங்கி வளர் இடுபொருட்கள் அடங்கிய பைக்கு மாற்றப்படுகிறது.

பெருந்தோட்ட தொழில் நுட்பம் :

  • மழை பருவ காலத்தில் நடவு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
  • குழியின் அளவு 90 செ.மீ3 என இருக்க வேண்டும். குழியினுள் மேல் மண், 25 கி.கி பண்ணை எரு மற்றும் 50 கி காமா பி.ஹெச்.சி ஆகிய கலவை குழியின் அடிப்பகுதியிலிருந்து 6 செ.மீ வரை நிரப்பப்படுகிறது.
  • குழிகள் வெயிலில் உலர்த்துவதற்காக நடவிற்கு முன்பே எடுக்கப்படுகிறது.
  • இடைவெளியானது 8 x 8 மீ அல்லது 10 x 10 மீ என இருக்க வேண்டும்.
  • பிப்ரவரிமார்ச் அல்லது ஜுலைஆகஸ்ட் மாத கால இடைவெளியில் நடப்படுகிறது.

  • பண்ணையை நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
  • பயிர் வகைகள் ஊடுபயிராக பயிர்களாக விதைக்கலாம்.
  • காய் வெடிப்பு மற்றும் காய் விழுதல் இம்மரத்தில் ஏற்படும் பெரிய பாதிப்பு ஆகும்.
  • முறையாக நீர் பாய்ச்சப்பட்டால் இவ்வகையான பாதிப்பை கட்டுப்படுத்தலாம்.
  • காற்று தடுப்பானாக பயிரிடப்படும் தோட்டங்களில் போராக்ஸ் கொண்டு தெளிக்க வேண்டும்.

  • பக்க மொட்டு மூலம் உற்பத்தி செய்யப்பட்ட நாற்றுகள் 4 – 5 வருடத்தில் அறுவடை செய்யப்படுகிறது.
  • வில்வம் காய் முதிர 8 10 மாதங்கள் அல்லது 10 – 12 மாதங்களில் பழுத்து முதிர்வடைகிறது.

சந்தை மதிப்பு :

  • ஒரு கிலோ வில்வம் கனி தேராயமாக 100 - 120 என்ற விலையில் விற்கப்படுகிறது.

* சந்தையை பொறுத்து விலை மாறுபடுகிறது

 

முக்கிய பயன்கள் :

  • இதன் மரம் உறுதியானது மற்றும் புதிதாக வெட்டப்பட்ட மரம் மணம் கமலக்கூடியது.
  • இதன் மரம் சிற்பம் செய்ய பயன்படுகிறது.
  • கைபிடிகள் தயாரிக்க, மர உபயோக பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது.
  • அத்தியாவசியமான எண்ணெய் தயாரிக்க பயன்படுகிறது.

தீவனம்:

  • இலைகள் மற்றும் குச்சிகள் தீவனமாக பயன்படுகிறது.

கோந்து:

  • விதைகளை சுற்றி அதிகமான கோந்துகள் கிடைக்கப்பெறும் வீட்டில் மற்றும் நகைக்கடைகளில் இவ்வகையான கோந்து அதிகம் பயன்படுகிறது.

-->