பின்னூட்டம்
 


படங்கள்




விளக்கம்

புளிய மரம்.


அறிவியல் பெயர் :

டேமரிண்டஸ் இண்டிகா

பொதுப்பண்பு :

  • 30 மீ உயரம் வரை வளரக்கூடிய அகன்ற கிளைகளையுடைய பெரிய பசுமை மாறா மரமாகும்.
  • இதன் மலர்கள் நறுமணம் கமலக்கூடியது. வறண்ட பகுதிகளில் இது இலையுதிர் மரம் போன்று இலைகளை உதிர்த்துவிடுகிறது.
  • இதன் பழம் சமையலுக்கு பரவலாக பயன்படுத்தப்படுகிறது.

பரவல் :

  • தென்னிந்தியா இம்மரத்தின் தாயகமாகும். ஆனால் இந்தியா முழுவதும் பரவலாக வளரும் தன்மையுடையது.
  • இவை வெப்பமய்டல பகுதிகளிலும் நன்கு வளரக்கூடிய தன்மையுடையது.

வாழிடம் :

ஈர இலையுதிர் காடுகளிலும் மற்றும் வெப்பமய்டல பசுமைமாறா காடுகளிலும் வளர்கிறது.

மண் :

அனைத்து மண் வகைகளிலும் நன்கு வளரும் தன்மையுடையது.

மண் pH :

5.5 - 7.5

கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :

1500 மீ உயரம் வரை வளரக்கூடியது.

மலையளவு :

750 - 1900 மி.மீ

வெப்பநிலை :

35 – 47 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.

நிலப்பரப்பு :

வெப்பமண்டல பகுதிகளிலும், மலைப்பகுதிகளிலும் வளரக்கூடியது.

மரப்பண்பு :

  • ஒளிவிரும்பி மரமாகும். வறட்சியை தாங்கி வளரக்கூடியது.

வளரியல்பு :

இது ஒரு இலையுதிர் மரமாகும்

தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்


  • சில சமயங்களில் சூழ்நிலை காரணிகளால் விதை முளைக்கப்படுவது பாதிக்கப்படுகிறது. துரிசாக உள்ள நிலங்களில் கூட இதன் விதைகள் முளைக்கும் தன்மை கொண்டது.

  • நேரடி விதைப்பு மூலமாகவும் மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமும் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.

  • விதையானது மார்ச் - ஏப்ரல் மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
  • சூரிய ஒளியில் விதைகள் உலர்த்தப்படப்படுகிறது.
  • உலர்த்தப்பட்ட வஜதைகள் பாலித்தீன் பைகளில் சேகரிக்கப்படுகிறது.
  • விதைகளை முளைப்புத்திறன் குறையாமல் 6 மாதங்கள் வரை வைத்திருக்கலாம்.
  • ஒரு கிலோ விதையில் 1800-2000 விதைகள் இருக்கும்.
  • ஒவ்வொரு நெற்றும் 3 - 10 விதைகளை கொண்டிருக்கும்

  • கொதிக்க வைக்கப்பட்டு இறக்கப்பட்ட நீரில் அல்லது குளிர் நீரில் 25 மணி நேரம் ஊர வைக்கப்படுகிறது.

  • மார்ச் - ஏப்ரல் மாதங்களில் 20 -25 செ.மீ இடைவெளியில் தாய்பாத்தியில் விதைகள் விதைக்கப்படுகிறது.
  • விதைகள் விதைக்கப்பட்டதிலிருந்து ஒரு வாரத்தில் மளைக்க துவங்கி ஒரு வாரத்திற்குள் முளைத்து விடுகிறது.
  • 30 - 40 செ.மீ உயரமுடைய 3 - 4 மாத வயதுடைய மரக்கன்றுகள் ஜீலை மாதம் நடவு செய்ய ஏற்ற அளவை அடைகிறது.

பெருந்தோட்ட தொழில் நுட்பம் :

நேரடி விதைப்பு :

  • 45 செ.மீ3 அளவு வெட்டிய குழியில் ஜீலைஆகஸ்ட் மாதம் நாற்றானது நடவு செய்யப்படுகிறது.
  • விதையானது 1.5 செ.மீ ஆழத்தில் விதைக்கப்படுகிறது.
  • நேரடி விதைப்பில் இடைவெளியானது 4 – 5 மீ நிற்ணயிக்கப்படுகிறது.

நாற்றுகள் நடவு :

  • மழை பருவ காலத்தில் 3 – 4 மாத நாற்றுகள் நடவிற்கு பயன்படுத்தப்படுகிறது.
  • குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.
  • இடைவெளியானது 5 x 5 மீ அல்லது 10 x 10 மீ என இருக்க வேண்டும்.
  • 70 – 80 சதவிகித நாற்றுகள் வெற்றிகரமாக வளர்கின்றன.

  • தொடச்சியான களையெடுத்தல் மற்றும் உழுதல் நாற்று நன்கு வளர துணை புரிகிறது.
  • புளிக்காக இம்மரம் அதிகளவில் பயிரிடப்படுகிறது. ஆதலால் கிளைகளை எக்காரணத்தை கொண்டும் வெட்;டகூடாது.
  • தழைசத்து, மணிசத்து மற்றும் சாம்பல்சத்து ஆகியவற்றை 200:150:250 என்றளவு ஒவ்வொரு வருடமும் 25 கிலோ எரு மற்றும் 2 கிலோ வேப்பம்பிண்ணாக்குடன் சேர்த்து இட வேண்டும்.

  • 4 வருடங்களான மரங்கள் பூக்கத்துவங்குகிறது. ஆனால் 9 வருடங்களான மரங்கள் அதிகளவில் காய்க்கவல்லது
  • நெற்றானது மார்ச் - ஏப்ரல் மாதத்தில் அறுவடை செய்யப்படுகிறது.

ஊடுபயிர் சாகுபடி :

  • கொள்ளு, சோளம், தீவனப்புல் போன்றவற்றை பயிரிடலாம்.

முக்கிய பயன்கள் :

  • இதன் காயானது சமையலுக்காக அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.
  • இதன் விதை ஜாம் தயாரிக்கவும் பிற உணவு பொருட்கள் தயாரிக்வும் பயன்படுத்தப்படுகிறது.
  • துணிகளை பாலிஸ் செய்வதற்கு பயன்படுகிறது.
  • ஒட்டுப்பலகை தயாரிப்பில் அதன் மரங்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.
  • இதன் விதையிலிருந்து டானின் எடுக்கப்படுகிறது.
  • மரம் எரிபொருளுக்காக பயன்படுத்தப்படுகிறது.