பின்னூட்டம்
 


படங்கள்




விளக்கம்

கொண்ட வாகை


அறிவியல் பெயர் :

அல்பைசியா புரோசிரா

பொதுப்பண்பு :

  • இது அகன்ற கிளைகளையுடைய பெரிய இலையுதிர் மரமாகும்.
  • மரப்பட்டையானது மஞ்சள் அல்லது பச்சை நிறமுடையது.
  • இலைகள் நல்ல பிரகாசமான சிவப்பு நிறத்தில் காணப்படும்.
  • மலர்கள் பச்சை நிறம் கொண்டது.
  • நெற்றானது சிவப்பு கலந்த சபம்பல் நிறமுடையது.
  • ஒவ்வொரு நெற்றிலும் 6 – 12 தட்டையான சாம்ல் நிற விதைகள் காணப்படும்.

பரவல் :

 

  • இவை இந்தியாவில் அதிகம் காணப்படுகிறது.

 

வாழிடம் :

இலையுதிர்காடுகள் மற்றும் சதுப்புக் காடுகளில் வளரும் மரமாகும்.

மண் :

செம்மண், வண்டல் மண் மற்றும் களிமண்ணில் நன்கு வளரும்.

கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :

1500 மீ வரை வளரக்கூடியது.

மலையளவு :

1000 – 5000 மி.மீ

வெப்பநிலை :

37 – 48 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.

நிலப்பரப்பு :

சமவெளி மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.

மரப்பண்பு :

  • இது ஒரு ஒளி விரும்பி மரமாகும்.
  • நீர்தேங்கியிருக்கும் நிலப்பகுதியில் வளராது
  • பனியை மற்றும் வறட்சியை தாங்கி வளரக்கூடிய தன்மையற்றது.
  • மறுதாம்பு மூலம் தழைத்து வளரக்கூடியது.

வளரியல்பு :

இலையுதிர் மரம்

தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்


வளர்ச்சி :

வேகமாக வளரக் கூடியது.

உயரம் :

18.24மீ

  • சாகதமான சூழ்நிலையில் விதைகள் மூலமாக இனப்பெருக்கமடையக்கூடியது.

 

  • நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலம் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.

  • நெற்றானது மே - ஜுன் மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
  • நெற்றிலிருந்து விதைகள் தனியே பிரித்தெடுக்கப்படுகிறது.
  • நிழலில் விதைகள் உலர்த்தப்படுகிறது.
  • விதைகள் குறைவான முளைப்புத்திறன் கொண்டவை. விதைகள் எண்ணெய் வித்து வகையானவை .
  • ஒரு கிலோ விதையில் தேராயமாக 17000 விதைகள் இருக்கும்.
  • விதைகளை 10 வருடங்கள் வரை அறை வெப்பநிலையில் சேமித்து வைத்திருக்க முடியும்.

  • குளிர் நீர் அல்லது கொதிக்கவைக்கப்பட்டு இறக்கப்பட்ட நீரில் 10 நிமிடம் ஊர வைக்க வேண்டும்.

  • பரிந்துரைக்கப்பட்ட அளவுடைய விதைகள் ஏப்ரல் - மே மாத கால இடைவெளியில் விதைக்கப்படுகிறது.
  • விதைக்கப்பட்டதிலிருந்து 3 – 4 நாட்களில் விதைகள் முளைக்கத்துவங்குகிறது.
  • 2 இலைகள் துளிர்ந்தபின் நாற்றுகள் பாலித்தீன் பைகளுக்கு மாற்றப்படுகிறது.
  • விதைகள் வளர் இடுபொருட்களான 2:1:1 என்ற விகிதத்தில் கலக்கப்பட்ட செம்மண், மணல் மற்றும் எரு அடங்கிய பாலித்தீன் பைகளில் நேரடியாக விதைக்கப்படுகிறது.
  • நாற்றுகளை நிழலில் வைக்கப்பட வேண்டும்.

பெருந்தோட்ட தொழில் நுட்பம் :

  • 3 மாதங்களான நாற்றுகள் நடவிற்கு ஏற்றதாகும்.
  • குழியின் அளவு 60 செ.மீ3 என இருக்க வேண்டும்.
  • குழிகள் வெயிலில் உலர்த்துவதற்காக நடவிற்கு முன்பே எடுக்கப்படுகிறது.
  • இடைவெளியானது 3 x 3 மீ அல்லது 5 x 5 மீ என இருக்க வேண்டும்.
  • உவர் நிலங்களில் 60 x 60 x 80 செ.மீ அல்லது 60 x 60 x 120 செ.மீ இடைவெளியை பயன்படுத்துவது சிறந்ததாகும்.

  • மரப்பண்ணையானது களைகள் அற்றதாக இருக்க வேண்டும்.
  • நாற்றுகள் நடப்பட்ட பின் மண்ணை உழுதல் மிக  முக்கிய பணிகளில் ஒன்றாகும்.

  • எரிபெருளுக்காக 20 - 40 வருடங்களில் அறுவடை செய்யப்படுகிறது.

முக்கிய பயன்கள் :

  • இதன் மரம் விலை குறைவான கட்டிட கட்டுமானத்திற்கும், மரச்சாமான்கள் செய்யவும், உள் கட்டிட கட்டுமான பணிகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.
  • வேளாண் உபகரணங்கள் தயாரிக்கவும், படகு தயாரிக்க, மாட்டுவண்டி பாகங்கள் தயாரிக்க, மற்ற மர உபயோக பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது.