பின்னூட்டம்
 


படங்கள்




விளக்கம்

நாவல்


அறிவியல் பெயர் :

சைசிஜியம் குமினி

பொதுப்பண்பு :

  • அகன்ற கிளைகளையுடைய பெரிய பசுமை மாறா மரமாகும்.
  • மரப்பட்டை சாம்பல் நிறமுடையது.
  • இலையானது அடர் பச்சை நிறமாகவும், பூக்கள் பச்சை கலந்த வெளிர் நிறமாகவும் காணப்படும். இம்மரம் வெண்ணிற தோல் போத்திய கருமையான விதையை கொண்டது.
  • விதையின் அளவு ஒன்றுக்கொன்று மாறுபடுகிறது.

பரவல் :

  • இந்தியாவில் பரவலாக காணப்படுகிறது.

 

வாழிடம் :

வெப்பமண்டல பசுமைமாறாக்காடுகளிலும், இலையுதிர் காடுகளிலும் காணப்படுகிறது.வெப்பமண்டல பசுமைமாறாக்காடுகளிலும், இலையுதிர் காடுகளிலும் காணப்படுகிறது.வெப்பமண்டல பசுமைமாறாக்காடுகளிலும், இலையுதிர் காடுகளிலும் காணப்படுகிறது.

மண் :

இம்மரம் சிவப்பு செம்பொறை மண்ணிலும், மணற்பாங்கான செம்மண்ணிலும் வளரும்.

மண் pH :

6.0 – 6-5

கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :

1800மீ உயரம் வரை வளரக்கூடியது.

மலையளவு :

1500 – 1000 மி.மீ

வெப்பநிலை :

30-43.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.

நிலப்பரப்பு :

சமவெளி மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.

மரப்பண்பு :

  • இது நிழல் வரும்பி மற்றும் உறைபனியை தாங்கி வளரக்கூடியது.
  • வறட்சியை தாங்கி வளரக்கூடியது.
  • மறுதாம்பு நன்கு தழைத்து வளரக்கூடியது.

வளரியல்பு :

இலையுதிர் மரமாகும்.

தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்


வளர்ச்சி :

மிதமானது

உயரம் :

35மீ

 

இயற்கை மறு உருவாக்கம்:    

 

  • நல்ல வளமான மண்ணில் நன்கு வளரக்கூடியது.
  • ஒவ்வொரு கனியிலிருந்தும் 1 – 5 கன்றுகள் உருவாகின்றன.

 

செயற்கை மறு உருவாக்கம்:

 

  • நேரடி விதைப்பு மூலமாகவும் மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமும் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.

 

விதை சேகரிப்பு மற்றும் சேமிப்பு:     

 

  • விதையானது ஜுன் - ஆகஸ்ட் மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
  • சூரிய ஒளியில் விதைகள் உலர்த்தப்படப்படுகிறது.
  • விதை முளைப்புத்தின் மிகவும் குறைவாகும்.
  • விதைகளின் முளைப்புத்திறன் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே இருக்கும்.
  • ஒரு கிலோ விதையில் 1100 - 1800 விதைகள் இருக்கும்.
  • விதை முளைப்புத்திறன் 20-90 சதவிகிதம் ஆகும்.

 

விதை நேர்த்தி :

 

  • கொதிக்க வைக்கப்பட்டு இறக்கப்பட்ட நீரில் 10 நிமிடம் ஊர வைக்க வேண்டும்.

 

மரப்பண்ணை தொழில்நுட்பம்:

 

  • விதைகள் தாய்பாத்தியில் நேரடியாக விதைக்கப்படுகிறது. தாய்பாத்தி விதைப்பு ஜுலைஜுன் மாத இடைவெளியில் மேற்கொள்ளப்படுகிறது.
  • விதையானது 2 – 2.5 செ.மீ ஆழத்தில் விதைக்கப்படுகிறது.
  • விதைக்கப்பட்டதிலிருந்து இரண்டு வாரங்களில் விதைகள் முளைக்க துவங்குகிறது.
  • 2 – 5 நாற்றுகள் ஒரு கனியிலிருந்து உருவாகிறது.
  • இரண்டு இலைகள் துளிர்ந்த பிறகு நாற்றானது வளர் ஊடகம் அடங்கிய பாலித்தீன் பைக்கு மாற்றப்படுகிறது.
  • ஒரு வருடமான நாற்றுகள் நடவிற்கு பயன்படுகிறது.

பெருந்தோட்ட தொழில் நுட்பம் :

 

நேரடி விதைத்தல்:           

 

  • இது ஒரு மிக எளிமையான மற்றும் குறைந்த செலவுடைய முறையாகும்.
  • வரிசையாக விதைக்கப்படுகிறது. களையெடுத்தல் குறிப்பிட்ட இடைவெளியில் நடைபெறுகிறது.
  • நிழல் மற்றும் ஈரப்பதம் மிக அவசியமானதாகும்.

 

நாற்றுகள் நடவு :

 

  • ஒரு வருடமான நாற்றுகள் நடவிற்கு ஏற்றதாகும்.
  • மழை பருவத்தில் நடவ பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
  • குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.
  • பொதுவாக 5 x 5 மீ இடைவெளியானது பயன்படுத்தப்படுகிறது.
  • அலங்காரத்திற்கு நடப்படும்பொழுது 12 அல்லது 14 மீ இடைவெளி பின்பற்றப்படுகிறது. குhற்று தடுப்பானுக்கு 6 மீ இடைவெளி பயன்படுத்தப்படுகிறது.

 

துண்டு முறை நாற்று நடவு:

 

  • இம்முறைக்கு 90 செ.மீ தண்டு பயன்படுத்தப்படுகிறது.
  • இம்முறை நாற்று உற்பத்தி 90 சதவிகிதம் வெற்றியை தரவல்லது.
  • இம்முறையில் பெறப்படும் நாற்றின் சூல் மிகவும் குறைவாக இருக்கும்.

 

  • தொடச்சியான களையெடுத்தல் மற்றும் உழுதல் நாற்று நன்கு வளர துணை புரிகிறது.

  • 8 – 10 வருடத்தில் கனிகளை வழங்கவல்லது.

சந்தை மதிப்பு :

  • ஒரு டன் மரம் 3000 – 3500 ரூபாய் என்ற விலையில் விற்கப்படுகிறது.

* சந்தையை பொறுத்து விலை மாறுபடுகிறது

 

முக்கிய பயன்கள் :

  • இது ஒரு நிழல்தரும் மரமாக பயன்படுத்தப்படுகிறது.
  • இதன் கனிகள் உண்ணக்கூடியதாகும்.
  • இதன் பட்டை டானின் எடுக்க பயன்படுகிறது.
  • இதன் இலை கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுகிறது.
  • இதன் மரம் கட்டுமான பணிகளுக்கும், மரச்சாமான்கள் செய்யவும் மற்றும் படகு செய்யவும் பயன்படுகிறது.

  • நிழல்தரும் மரமாக காபி செடிக்கு பயன்படுகிறது.
  • வயல்வெளியில் வேலி மரமாகவும் வளர்க்கப்படுகிறது.

-->