பின்னூட்டம்
 


படங்கள்




விளக்கம்

பொன் மூங்கில்


அறிவியல் பெயர் :

பேம்பூசா வல்காரிஸ்

பொதுப்பண்பு :

  • சராசரி அளவுடைய மஞ்சள் நிறமுடைய மூங்கில்.
  • இம்மூங்கிலுக்கு முட்கள் கிடையாது.
  • தண்டுகள் பச்சை நிற கோடுகளுடன் காணப்படும்.
  • இலைகள் அடர் பச்சை நிறமுடையது.

பரவல் :

  • இம்மூங்கில் இந்தியாவை தாயகமாக கொண்டது. இந்தியா முழுவதும் சமவெளி பகுதிகளில் வளரும் மூங்கில் இனம்.

வாழிடம் :

வெப்பமண்டல காடுகளில் அதிகம் வளர்கிறது.

மண் :

ஈரமான, நல்ல நீர் தேங்காத தன்மை கொண்ட மணல் அல்லது களிமண் மற்றும் வண்டல் மண்ணிலும் வளரும் தன்மை கெண்டது. உவர்நிலம் மற்றும் நீர் தேங்கியிருக்கும் மண்ணிலும் நன்கு வளரும் தன்மையுடையது.

மண் pH :

4.5 – 7.5

கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :

1500 மீ வரை வளரக்கூடியது.

மலையளவு :

1000 – 5000 மி.மீ

வெப்பநிலை :

13 - 39 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.

நிலப்பரப்பு :

நீர் தேங்காத நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.

மரப்பண்பு :

  • இது ஒளி விரும்பி மரமாகும்.
  • வறட்சியை தாங்கி வளரும் தன்மையுடையது.
  • மலைச்சரிவு ஏற்படும் பகுதிகளில் ஓரளவு தங்கி நிற்கும் தன்மையுடையது.

வளரியல்பு :

இது ஒரு இலையுதிர் மரமாகும்

தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்


  • இம்மூங்கில் விதைகள் மற்றும் கிழங்கு மூலம் இயற்கையாக பெருக்கமடைகிறது.       

 

  • நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலம் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.

  • இம்மூங்கில் அரிதாக பூக்கும் தன்மையுடையது. ஆனால் களிகள் நன்கு தழைத்து வளரும் தன்மையுடையது.

  • குளிர் நீரில் விதைகள் 24 மணிநேரம் ஊர வைக்கப்படுகிறது.

  • விதைகள் தாய்பாத்தியில் நேரடியாக விதைக்கப்படுகிறது. சேம்மண் தாய்பாத்தி நாற்று உற்பத்திக்கு சிறந்ததாகும். தாய்பாத்தியின் அளவு 10 x 1 மீ என்றளவு இருக்க வேண்டும்.
  • 1.5 கிலோ விதைகள் ஒரு தாய்பாத்திக்கு பயன்படுத்தப்படுகிறது. விதைக்கப்பட்டவுடன் வைக்கோல் கொண்டு தாய்பாத்தியை மூட வேண்டும்.
  • பூவாளி கொண்டு தினமும் நீர் இறைக்க வேண்டும்.
  • விதைக்கப்பட்ட விதைகள் 10 – 20 நாட்களில் முளைக்க துவங்குகிறது.
  • 3 மாதங்களாகிய நாற்றானது வளர் இடு பொருட்கள் அடங்கிய பாலித்தீன் பைக்கு மாற்றப்படுகிறது.
  • ஒரு வருடமான நாற்றுகள் அல்லது 60 செ.மீ உயரம் வளர்ந்த நாற்றுகள் நடவிற்கு பயன்படுத்தப்படுகிறது.

பெருந்தோட்ட தொழில் நுட்பம் :

நடவு பருவம் :

  • மழை பருவம் துவங்கும் முன் நடவு பணிகள் மேற்கொள்ள வேண்டும். நீர் பாய்ச்சமுடியும் என்ற நிலையில் வெயில் குறைந்த தருவாயில் நடவு பணிகள் மேற்கொள்ளலாம்.
  • நடவிற்கு முன்னதாக மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் :
  • நடவுபணி மேற்கொள்ளப்படவுள்ள நிலத்தை சுற்றி முன்னதாகவே வேலியமைக்க வேண்டும். மூன்று மாதத்திற்கு முன்னதாகவே வேலியமைக்க வேண்டும்.
  • நடவிற்கு 15 நாட்கள் முன்னதாகவே களைகளை நீக்க வேண்டும்.

குழியளவு மற்றும் நேர்த்தி செய்தல் :

  • 45 x 45 x 45  செ.மீ அளவுள்ள குழிகள் மூங்கில் நடவிற்கு ஏற்றதாகும்.
  • குழிகளை வெயிலில் உலர்த்துவதற்காக முன்னதாகவே அமைக்கப்பட வேண்டும்.

நடவு தொழில்நுட்பம் :

  • ஒரு  வருடமான நாற்று நடவிற்கு பயன்படுத்தப்படுகிறது.
  • பருவ மழைக்கு முன்னதாகவே குழிகளை அமைத்து கொள்ள வேண்டும். குழிகள் போதுமான அளவு ஈரப்பதம் நிறைந்ததாக இருக்க வேண்டும்.
  • நடப்பட்டபின் குழிகளை மேற்மண்ணை கொண்டு மூடவேண்டும்.

இடைவெளி :

  • 5 x 5 மீ இடைவெளி மூங்கில் நடவிற்கு பயன்படுத்தப்படுகிறது.

  • மூங்கிலுக்கு ஈரப்பதம் அவசியம் என்பதால் நாற்றங்காலிலும், நடப்பட்ட பின்பும் நீர் மேலாண்மை மிக முக்கியமாகும்.
  • கால்நடை மேய்ச்சலிலிருந்து பாதுகாப்பது மிக முக்கிய பராமரிப்பு பணிகளில் ஒன்றாகும்.

  • 5 வருடங்கள் முதல் அறுவடை செய்யப்படுகிறது.

சந்தை மதிப்பு :

  • ஒரு டன் மூங்கில் தோராயமாக 4000 – 4500 ரூபாய் என்ற விலையில் விற்கப்படுகிறது.

* சந்தையை பொறுத்து விலை மாறுபடுகிறது

 

முக்கிய பயன்கள் :

தண்டு:

  • தண்டுகள் கூடை செய்யவும், ஏணிகள் மற்றும் கட்டிட கட்டுமான பணிகளுக்கும் பயன்படுகின்றன.
  • இளம் குறுத்து உணவாக பயன்படுகிறது.
  • களிகள் காகிதம் தயாரிக்க அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.
  • பாலம் அமைக்க, மரச்சாமான்கள் செய்ய, படகு கட்டுமானத்திற்கு, வேலியமைக்க மற்றும் இதர வீட்டு உபயோக பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது.
  • இதன் தண்டு கொசுக்களை விரட்ட எரிக்கப்படுகிறது.
  • இதன் தண்டு வாழை தோட்டங்களில் தாங்கு குச்சாக பயன்படுத்தப்படுகிறது.

வேளாண்காடுகள்:

  • சரிவான மற்றும் நீர் ஓடைப்பகுதிகளில் மண் அரிமானத்தை தடுக்க மற்றும் வரப்போர நடவிற்கு பயன்படுத்தப்படுகிறது.